Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு... மாதந்தோறும் ரூ.10,000 கோடியைத் தாண்டியது!

எஸ்.ஐ.பி முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால், பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2021 ஏப்ரல் முதல் 2021 ஆகஸ்ட் வரை ஐந்து மாதங்களில் புதிதாக 99.57 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகமாகும். 2021 செப்டம்பர் மாதத்தில் எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு முதல் முறையாக ரூ.10,000 கோடியைத் தாண்டியிருக்கிறது. அந்த மாதத்தில் 10,351 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ.36.73 லட்சம் கோடியாக உள்ளது.

எஸ்.ஐ.பி முதலீடு... மாதந்தோறும் ரூ.10,000 கோடியைத் தாண்டியது!

கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த காலத்தில் அதாவது, 2020 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் தொடங்குவது 10 லட்சத்துக்கும் குறைவாக இருந்தன. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து, பொருளாதார வளர்ச்சி மேம்பட் டிருக்கும் நிலையில், மியூச்சுவல் ஃபண்டுகளில் புதிய எஸ்.ஐ.பி கணக்குத் தொடங்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

வங்கி எஃப்.டி வட்டிக் குறைவு, ரியல் எஸ்டேட் மந்தநிலை, தங்கத்தின் விலை இறக்கம் போன்ற காரணங்களால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்த எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் நிலவரப்படி, 4.32 கோடியாக உள்ளது.

2021 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை புதிதாக 1.59 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு