Published:Updated:

உச்சம் தொட்ட எஸ்.ஐ.பி முதலீடு!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

இந்தியப் பங்குச் சந்தையில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடாகும் தொகை கடந்த டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்துகளில் எஸ்.ஐ.பி மூலமான முதலீட்டின் பங்களிப்பு டிசம்பர் மாதத்தில் 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என ஆம்ஃபி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எஸ்.ஐ.பி முதலீடானது சராசரியாக ஆண்டுக்கு 34.6% வளர்ச்சி கண்டு வருகிறது. அதே காலத்தில், மியூச்சுவல் ஃபண்ட் மொத்த முதலீடானது 18% என்கிற அளவில் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

உச்சம் தொட்ட எஸ்.ஐ.பி முதலீடு!

டிசம்பர் மாதத்தில் சுமார் ரூ.5.6 லட்சம் கோடி அளவில் உள்ள மொத்த எஸ்.ஐ.பி முதலீடானது, மொத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கால் பகுதியாகவும், பங்குச் சந்தையில் உள்ள பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 2 சதவிகிதமாகவும் உள்ளது.மேலும், எஸ்.ஐ.பி முதலீட்டின் 90% தொகை ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 2021-ம் ஆண்டில் எஸ்.ஐ.பி முறை யிலான ஃபண்டுகளில் ரூ.1.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4.9 லட்சம் கோடி முதலீடு எஸ்.ஐ.பி மூலமாகச் செய்யப் பட்டுள்ளது. இது அந்நிய முதலீட்டாளர்கள் நமது பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டைவிட 1.6 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் தற்போது 12.02 கோடி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகள் உள்ளன. ஒரு எஸ்.ஐ.பி முதலீட் டாளரின் சராசரி முதலீடு ரூ.2,303 ஆக இருக்கிறது.

டிசம்பரில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே ரூ.41,906 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈக்விட்டி, ஹைப்ரிட் மற்றும் சொல்யூஷன் சார்ந்தவை உள்ளிட்ட ஃபண்டுகளின் சிறு முதலீட்டாளர்களின் சொத்து நிர்வகிப்பு ரூ.18.3 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது!