Published:Updated:

கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரிப்பு... என்ன காரணம்?

கோல்டு இ.டி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
கோல்டு இ.டி.எஃப்

முதலீடு

கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரிப்பு... என்ன காரணம்?

முதலீடு

Published:Updated:
கோல்டு இ.டி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
கோல்டு இ.டி.எஃப்

மக்கள் நேரடியாக தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகளை வாங்குவதை அதிகரித்திருந்தாலும், டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதையும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, கோல்டு இ.டி.எஃப் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதை அதிகப் படுத்தியிருக்கிறார்கள் என்கிறது ஆம்ஃபியின் சமீபத்திய புள்ளிவிவரம்.

அதாவது, கடந்த 2021-ம் ஆண்டின் டிசம்பரில் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகளின் மதிப்பு 27% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தத் திட்டங்கள் நிர்வகித்து வந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.14,480 கோடி. ஆனால், டிசம்பர் மாத முடிவில் இது ரூ.18,405 கோடியாக அதிகரித்து, உள்ளது. அதே போல, டிசம்பர் மாத முடிவில் இந்த கோல்டு இ.டி.எஃப் திட்டங்களின் முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கையும் 9.7 லட்சத்திலிருந்து 32.1 லட்சமாக அதிகரித்துள்ளது.

கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரிப்பு... என்ன காரணம்?

கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீட் டாளர்கள் செலுத்தும் பணம் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கிராம் தங்கத்தை ஒரு யூனிட் என்கிற அடிப்படையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். சில நிறுவனங்கள் அரை கிராம், வேறு சில நிறுவனங்கள் ஒரு கிராமில் நூறில் ஒரு பங்கு அதாவது, சுமார் ரூ.45 இருந்தால்கூட கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யும் வசதியை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது. இந்தத் தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையைப் பொறுத்து ஏறலாம், இறங்கலாம்.

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்; அப்போது நல்ல லாபம் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் பலரும் கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். செய்கூலி, சேதாரத்தைத் தவிர்க்க கோல்டு இ.டி.எஃப் சிறந்த தேர்வாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism