குறைவான ரிஸ்க், நிறைவான லாபம்... இண்டெக்ஸ் ஃபண்ட் Vs இ.டி.எஃப்... எது உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்?

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 4 - இ.டி.எஃப் ஃபண்டுகள் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ அடிப்படையில் முதலீடு செய்வதால் ஏற்ற இறக்கத்தின் தாக்கம் குறைவு!
வித்யா பாலா, இணை நிறுவனர், Primeinvestor.in
மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து முடித்த முதலீட்டாளர்களின் அடுத்த கேள்வி, இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப்... இந்த இரண்டில் எது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும் என்பதாக இருக்கிறது.
இண்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப் ஆகிய வற்றில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட் டாளர்களிடம் சில கேள்விகள் எழுவது வழக்கமாக இருக்கிறது. அந்தக் கேள்விகள் பற்றி முதலில் பார்த்துவிடுவோம்.

1. ஒரு போர்ட்ஃபோலியோவை இண்டெக்ஸ் ஃபண்ட் / இ.டி.எஃப் ஆகியவற்றை மட்டும் வைத்து உருவாக்கினால் போதுமா?
2. ஏற்கெனவே உள்ள போர்ட்ஃபோலியோ வில் இண்டெக்ஸ் ஃபண்டுகளை எப்படிச் சேர்ப்பது?
3. சந்தையில் என்னென்ன இண்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப் திட்டங்கள் உள்ளன?
4. குறைவான டிராக்கிங் தவறுகள் உள்ள இண்டெக்ஸ் ஃபண்டுகள் என்னென்ன?
5. இண்டெக்ஸ் ஃபண்டுகளைவிட முதலீட்டு செலவினம் குறைவாக இருக்கும் இ.டி.எஃப் சிறந்ததா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ளும்முன், இண்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப் என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிடலாம்.
இண்டெக்ஸ் ஃபண்டுகள்...
இண்டெக்ஸ் ஃபண்ட் சென்செக்ஸ், நிஃப்டி போன்ற ஏதாவது ஒரு இண்டெக்ஸை முன்மாதிரியாகக் கொண்டு பிரதிபலிக்கும் பேசிவ் ஃபண்ட் ஆகும். உதாரணமாக, சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் என்பது சென்செக்ஸில் இருக்கும் 30 கம்பெனிகளிலும் சென்செக்ஸில் இருக்கும் அதே விகிதாசாரங் களிலும் முதலீடு செய்யும். ஆகவே, இண்டெக்ஸ் ஃபண்டுகளில் மேனேஜரின் ஆராய்ச்சிக்கு வேலையில்லை. அதனால்தான் இதை பேசிவ் ஃபண்ட் என்றும் சொல்வார்கள்.
இண்டெக்ஸ் ஃபண்டுகள் கூடியவரை இண்டெக்ஸ் தரும் அதே லாபத்தைத் தர முயற்சி செய்யும். இதில் ஃபண்ட் மேனேஜருக்கு அதிக வேலை இல்லை என்பதால், எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவு. அதனால் முதலீட்டாளர்களின் லாபம் அதிகரிக்கிறது.
ஒருவரின் போர்ட்ஃபோலியோவுக்குத் தேவையான முதலீட்டுப் பரவலாக்கம் இதில் இருக்கும். சந்தை ஏற்றத்தில் இருக்கும் சமயங்களில் இண்டெக்ஸ் ஃபண்டும் நல்ல ஏற்றம் தரும். ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு இருக்கும் அதே வரி விதிப்பு விதிமுறைகள் இண்டெக்ஸ் ஃபண்டுக்கும் உண்டு.

இ.டி.எஃப்...
நீண்ட காலத்தில் வருவாயைப் பெருக்க விரும்பும் எல்லோருமே பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை மேற்கொள் கிறார்கள். அவற்றில் நேரடிப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போலவே இருப்பதுதான் இ.டி.எஃப்.
இ.டி.எஃப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் குறியீடு சார்ந்த ஃபண்டுகளாகும். இ.டி.எஃப் ஃபண்டுகள் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ அடிப்படையில் முதலீடு செய்வதால் ஏற்ற இறக்கத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.
நேரடிச் சந்தையின் ரிஸ்க்கைவிட இதில் ரிஸ்க் குறைவு. இண்டெக்ஸ இ.டி.எஃப் ஃபண்டுகள் பெஞ்ச்மார்க் குறியீட்டின் அனைத்துப் பங்குகளிலும் பிரதான குறியீட்டின் அதே விகிதா சாரங்களில் முதலீடு செய்யும். எனவே, இதனால் ரிஸ்க் குறைக்கப்படும்.
மேலும், இ.டி.எஃப் ஃபண்டுகள் கண்காணிப்புப் பிழை (Tracking error), நிதி மேலாண்மைச் செலவுகள் போக பங்குச் சந்தையுடன் இணைந்து வருமானத்தை வழங்குவதாக இருக் கின்றன. பொதுவாக, இ.டி.எஃப் ஃபண்டுகளில் நிதி மேலாண்மை செலவு குறைவாக இருக்கும்.
இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப் எப்படி ஒப்பிடுவது?
இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் இ.டி.எஃப்பை ஒப்பிடும்போது முதலில் பார்க்க வேண்டிய விஷயம், முதலீட்டுச் செலவு ஆகும். ஆனால், முதலீட்டுத் தேர்வு என்பது நம்முடைய இலக்கு, விருப்பம் சார்ந்தது. எனவே, முதலீட்டுச் செலவு அடிப் படையில் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயமில்லை.
இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம், இ.டி.எஃப், இண்டெக்ஸ் ஃபண்ட் இரண்டையும் நேரடியாக ஒப்பிடுவது என்பது முடியாது என்பதுதான்.
முதலில், இ.டி.எஃப் மீதான செலவின விகிதம் (Expense ratio) இண்டெக்ஸ் ஃபண்டுகளைவிடவும் மிகவும் குறைவு. நிஃப்டி 50 சார்ந்த பேசிவ் ஃபண்டுகளை உதாரணமாக எடுத்துப் பார்த்தால், இண்டெக்ஸ் ஃபண்டுகளின் செலவின விகிதம் சராசரியாக 0.2 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், இ.டி.எஃப் செலவின விகிதம் 0.08 சதவிகிதமாக இருக்கிறது. இதைப் பார்த்ததும் பெரும் பாலானோர் உடனடியாக இ.டி.எஃப்தான் செலவு குறைவு என்கிற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஒரு வகை யில் அது உண்மைதான். ஆனால், மொத்த செலவினம் எவ்வளவு என்று பார்க்கும் போதுதான் சரியான முடிவுக்கு நம்மால் வர முடியும்.
மொத்த செலவினத்தைக் கணக்கிடுவது கடினமானது. அதற்கென தனி நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். இல்லை எனில், அது சாத்திய மில்லை. உதாரணமாக, கடுமையான வரைமுறையில் நிர்வகிக்கப்படும் அதிக லிக்விடிட்டி கொண்ட இ.டி. எஃப்-களுக்கும், லிக்விடிட்டி குறைவாக உள்ள இ.டி.எஃப்-களுக்கும் மொத்த செலவினம் என்பது மாறுபடும். அனைத்துக்கும் மேல், மொத்த செலவின விகிதம் இண் டெக்ஸ் ஃபண்ட் மற்றும் இ.டி.எஃப்-களுக்கு இடையில் 0.12% வித்தியாசம் இருப்பது என்பது உங்களுடைய முதலீட்டின் மீதான வருமானத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
கண்காணிப்புத் தவறுகள்...
கண்காணிப்புத் தவறு என்பது இண்டெக்ஸ் வருமானத்துக்கும் இ.டி.எஃப் வருமானத்துக்கும் இடையில் இருக்கும் நிலையான விலகல் ஆகும். உண்மையில் இ.டி. எஃப் மீதான வருமானம் என்பது மொத்த நிகர செல வினமாக இருக்க வேண்டும். இண்டெக்ஸ் ஃபண்டில் செலவினமானது உங்களின் மொத்த செலவின விகிதத்திலேயே அடங்கிவிடும். அதன்படி பார்க்கையில், இண்டெக்ஸுக்கும் இண் டெக்ஸ் ஃபண்டுக்குமான கண்காணிப்புத் தவறு என்பது நம்பகமான எண்ணாக இருக்கும். ஆனால், இ.டி.எஃப் விஷயத்தில் பல விதமான சிக்கல்கள் இருக்கின்றன.
1. நீங்கள் பார்க்கும் இ.டி.எஃப் வருமானம் என்பது இ.டி.எஃப்பின் என்.ஏ.வி மதிப்பு சார்ந்ததே தவிர, சந்தை மதிப்பு சார்ந்தது அல்ல.
2. கண்காணிப்புத் தவறு சார்ந்த புள்ளிவிவரங்களும் இ.டி.எஃப்பின் என்.ஏ.வி, இண்டெக்ஸ் இடையிலான கணக்கீடாகவே இருக்கிறது. இ.டி.எஃப்பின் சந்தை மதிப்பு, இண்டெக்ஸ் இடையிலான கணக்கீடாக இல்லை.
3. இ.டி.எஃப்பில் அறிவிக்கப் படும் டிவிடெண்ட் யூனிட்டு களாக அல்லது ரொக்கமாக வழங்கப்படும். அவற்றின் என்.ஏ.வி, சந்தை மதிப்பு அதற்கேற்ப இறக்கத்தைச் சந்திக்கும். எனவே, நீங்கள் இண்டெக்ஸோடு அவற்றை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.
4. மேலும், இ.டி.எஃப் வருமானத்தையும் இண்டெக்ஸ் ஃபண்ட் வருமானத்தையும் நேரடியாக ஒப்பிடுவதும் சரியாக இருக்காது. காரணம், இ.டி.எஃப் டிவிடெண்டும், இ.டி.எஃப்பில் கவனிக்காமல் தவறவிடும் மறைமுக செலவினங்களும்தான்.
நிஃப்டி 50 இண்டெக்ஸ் மற்றும் இ.டி.எஃப் ஆகியவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களின் ஒரு ஆண்டு ரோலிங் வருமானத்தில் உள்ள கண்காணிப்புத் தவறுகளைத் தனியாக ஓர் அட்டவணை தந்துள்ளோம்.
இ.டி.எஃப்-வுடன் ஒப்பிட நிஃப்டி 50 டி.ஆர்.ஐ எடுக்காமல் நிஃப்டி 50-ஐ எடுத்துக்கொண்டுள்ளோம். அதே சமயம், இண்டெக்ஸ் ஃபண்டுகளுடன் ஒப்பிட நிஃப்டி 50 டி.ஆர்.ஐ எடுத்துள்ளோம். சராசரியாக நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்டுகள் கண்காணிப்புத் தவறுகள் விஷயத்தில் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இ.டி.எஃப் கண்காணிப்புத் தவறுகள் விஷயத்தில் அவ்வளவு எளிதானவையாக இல்லை.
1. உச்சநிலை சந்தை மதிப்பு சார்ந்த கண்காணிப்புத் தவறு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதாவது, இ.டி.எஃப் வருமானம் இண்டெக்ஸைவிட அதிகமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக, சமீப காலங்களில். மார்ச் 2020-ல் இ.டி.எஃப் இண்டெக்ஸைவிடவும் மிகக் குறைவான இறக்கத்தையே சந்தித்தது. காரணம், அவற்றுக்கான டிமாண்டானது அவற்றின் விலையை இண்டெக்ஸைவிட அதிகமாகவே வைத்திருந்தது.
நிஃப்டி 50, நிஃப்டி பேங்க் ஆகியவற்றைப் போலவே இ.டி.எஃப்-களையும் டெரிவேட்டிவ் டிரேடர்கள் பயன்படுத்தினார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இது நீங்கள் இ.டி.எஃப் முதலீட்டைத் தேர்ந்தெடுக்கப் போதுமான காரணமாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால், டிமாண்ட்தான் இ.டி.எஃப் விலையைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக இருக்கிறது. எனவே, டிமாண்ட் குறையும்போது விலையும் குறையலாம்.
2. என்.ஏ.வி மதிப்பிலிருந்து அதன் சந்தை மதிப்பு வேறு படுவது. இங்கே தரப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப் பட்டுள்ளபடி, நிஃப்டி இ.டி.எஃப் சந்தை மதிப்பு வருமானம் என்.ஏ.வி மதிப்பைவிட 50% சமயங்களில்தான் அதிகமாக இருக்கிறது.
மேலும், சமீப காலங்களில்தான் இ.டி.எஃப் சந்தை மதிப்பு அதன் என்.ஏ.வி மதிப்பைவிட அதிகமாக இருப்பதையும் பார்க்கலாம். அந்தச் சமயங்களில் இ.டி.எஃப்-களுக்கு டிமாண்ட் அதிகமாக இருந்தது என்பதை உணர முடியும். இன்று நீங்கள் நிஃப்டி இ.டி.எஃப்பை வாங்கினால் என்.ஏ.வி மதிப்பைவிட அதிக விலைக்கு வாங்க வேண்டிவரும்.
லிக்விடிட்டி மற்றும் வர்த்தக தினங்கள்...
இ.டி.எஃப் விஷயத்தில் உள்ள பெரிய சவால், ஆரோக்கிய மான வருவாய் தரக்கூடிய, நிலையாக வர்த்தகமாகக்கூடிய, இ.டி.எஃப்-களை அடையாளம் காண்பதுதான். காரணம், சந்தையில் சில நாள் சிறப்பான வால்யூமில் வர்த்தகமாகும்; சில நாள் வர்த்தகமே நடக்காது என்ற நிலையில்தான் பல இ.டி.எஃப்-கள் உள்ளன. உதாரணமாக, நிப்பான் இந்தியா இ.டி.எஃப் சென்செக்ஸ் கடந்த 90 நாடுகளில் 67% நாடுகள் மட்டுமே வர்த்தகமாகி இருக்கிறது. அதே சமயம், இந்த நிறுவனத்தின் நிஃப்டி இ.டி.எஃப் விஷயத்தில் இந்தப் பிரச்னை இல்லை.
இது மட்டுமல்ல, சில பிரமாதமான இ.டி.எஃப்-களில் வால்யூம் வர்த்தகம் மிக மோசமாக இருக்கிறது. இதில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க்கை உண்டாக்கும். உதாரணமாக, என்வி 20 என்ற மதிப்பு சார்ந்த இ.டி.எஃப் மோசமான வருவாயைத் தருவதாக இருக்கிறது. ஆனால், இதன் இண்டெக்ஸ் பிற லார்ஜ்கேப் இண்டெக்ஸ்களை விடவும் உச்ச செயல்பாட்டை வெளிப்படுத்தும் நிலையில் இருக்கிறது.
அதிக லிக்விடிட்டி உள்ள இ.டி.எஃப் ஒரு நாளைக்கு ரூ.30 கோடிக்கும் மேல் வருவாய் தருகிறது. மேலே குறிப்பிட்டது போன்ற சில இ.டி.எஃப்-கள் 50,000 ரூபாயைவிடவும் குறைவாகவே வருவாய் தருகிறது.
சில நாள்களில் அதுவும் இல்லாத நிலையில் வர்த்தகமாகாமல் இருக்கிறது. எனவே, இ.டி.எஃப் முதலீடு செய்வதற்குமுன் அதன் லிக்விடிட்டி மற்றும் நிலையான வர்த்தகம் இரண்டையும் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
இ.டி.எஃப் Vs இண்டெக்ஸ் ஃபண்ட்- போர்ட்ஃபோலியோவுக்கு எது பெஸ்ட்?
இ.டி.எஃப்பில் உள்ள கண்காணிப்புத் தவறுகள் மற்றும் செலவின விகிதம் ஆகியவற்றின் சிக்கல்களையும் ஏற்கெனவே பார்த்தோம். இதன்பிறகும் இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

ஏன் இ.டி.எஃப் சுவாரஸ்யமானதாக இருக்கிறது?
இண்டெக்ஸ் ஃபண்டுகளைக் காட்டிலும் இ.டி.எஃப் சுவாரஸ்யமாக ஏன் தெரிகிறது என்பதற்கு இரண்டு காரணங் கள் உள்ளன. ஒன்று, பெருமள விலான பி.எஃப் பணமும், நிறுவனங்களின் பணமும் சில இ.டி.எஃப்-களில் நல்ல லிக்விடிட்டியை உருவாக்கி இருக்கிறது. இரண்டு, அதிக மான காரணிகள் அடிப் படையிலான இண்டெக்ஸ்கள் வருகின்றன. எனவே, இண்டெக்ஸ் ஃபண்டுகளை விடவும் இ.டி.எஃப் பிரிவில் அதிக ஆப்ஷன்கள் கிடைக் கின்றன.
சந்தையில் 36 இண்டெக்ஸ் ஃபண்டுகளே உள்ள நிலையில், 77 இ.டி.எஃப் ஃபண்டுகள் நமக்குக் கிடைக்கின்றன. மேலும் இ.டி.எஃப்-கள் சந்தை மூலதனம், தீமேடிக், ஸ்ட்ராட்டஜி இண்டெக்ஸ்கள் என அனைத்தையும் சார்ந்த வையாகக் கிடைக்கின்றன.
இ.டி.எஃப்-களின் பட்டியல்
இப்போது போர்ட் ஃபோலியோவில் இ.டி.எஃப் - இண்டெக்ஸ் ஃபண்ட் இரண்டையும் எப்படிக் கையாள்வது என்பது குறித்து பார்ப்போம்.
பேசிவ் ஃபண்டுகள் மட்டும் உள்ள போர்ட்ஃபோலியோ உருவாக்கம்
1. நீங்கள் துடிப்பான முதலீட்டாளராக, ஃபண்டு களைத் தேர்வு செய்யாத வராகவோ, ஃபண்ட் மேனேஜர்களின் செயல்பாடு குறித்து கவலைப்படுபவ ராகவோ, ஃபண்டுகளை மறுஆய்வு செய்யவோ, தரமான ஃபண்டுகளை நிர்வகிக்க சரியான ஆலோ சனைகளைப் பெறவோ, முடியாதவராகவோ இருப்பவர் எனில், இண் டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப்-களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
2. அதிலும் கொஞ்சம் எளிமையான தேர்வு எனில், இண்டெக்ஸ் ஃபண்டுதான் பெஸ்ட். இல்லை எனில், உங்களிடம் டிமேட் கணக்கு இருக்கிறது, இடிஃப் பற்றி நன்றாகத் தெரியும், கட்டுரையில் இதுவரை குறிப்பிட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொண்டவர் எனில், இ.டி.எஃப் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
3. தனிப்பட்ட காரணிகளை வைத்து இண்டெக்ஸ் ஃபண்டு களைத் தேர்வு செய்யக் கூடாது. சிலர் மிகவும் செல வினம் குறைவாக இருக்கும் இண்டெக்ஸ் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்பார்கள்.
ஆனால், சில இண்டெக்ஸ் கள் அவற்றின் இயல்பு சார்ந்து மற்றவற்றைவிட அதிக நிர்வகிப்பு செலவினம் கொண்டவையாகவே இருக்கின்றன. உதாரணமாக, நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட், நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்டைவிட சற்று அதிகமான செலவின விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
இங்கே முக்கியமாகப் பார்க்க வேண்டியது. உங்களுடைய போர்ட்ஃபோலியோவுக்கு நிஃப்டி அல்லது நிஃப்டி நெக்ஸ்ட் 50 எது சரியாக இருக்கும் என்பதுதான். மாறாக, எது குறைவான செலவின விகிதம் கொண்டது என்பதல்ல முக்கியம்.
4. இ.டி.எஃப் முதலீடு செய்ய உறுதியாக இருக் கிறீர்கள் எனில், நிஃப்டி சார்ந்த அதிக வால்யூமுடன் வர்த்தகமாகக்கூடிய இ.டி.எஃப்-களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
5. இ.டி.எஃப் திட்டங்களைத் தேர்வு செய்யும் போதும் தனிப்பட்ட காரணிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். குறைந்த கண்காணிப்புப் பிழை உள்ள ஃபண்ட் மிக மோசமான வால்யூமுடன் வர்த்தகமாவதாக இருக்கலாம்.
இது அப்படியே தலைகீழாகவும் நடக்க வாய்ப்பு உள்ளது. இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், அதன் பலதரப்பட்ட காரணிகளையும் பார்த்து ஆய்வு செய்து தரவரிசை செய்யப்பட வேண்டும்.
6. பேசிவ் ஃபண்டுகளைக் கொண்ட போர்ட் ஃபோலியோ உருவாக்கத் தில் தரமான இண்டெக்ஸ் கள் சார்ந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
அவை ஆக்டிவ் ஃபண்டுகளுக்கு சவால்விடும் அளவுக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். லிக்விடிட்டி, டிராக்கிங் தவறுகள், செலவின விகிதம் உள்ளிட்ட காரணி களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
7. கடன் ஃபண்டுகள் என்று வரும்போது, இ.டி.எஃப்-களில் ஆரோக்கியமான வால்யூம் வர்த்தகம் இல்லையெனில், ஆக்டிவ் ஃபண்டு களையே தொடரலாம். கடன் ஃபண்டுகள் பிரிவில் ஆக்டிவ் ஃபண்டுகளே சிறப்பாகச் செயல்படு கின்றன.

ஆக்டிவ் போர்ட்ஃபோலியோவில் பேசிவ் ஃபண்டுகள்
நீங்கள் ஆக்டிவ் ஃபண்டுகளை போர்ட்ஃபோலி யோவில் நிர்வகித்து வரும் முதலீட்டாளர் எனில், அதில் கூடுதலாகக் கொஞ்சம் பேசிவ் ஃபண்டு களையும் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் போர்ட்ஃபோலியோ செலவினத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
1. பொதுவாக, இண்டெக்ஸ்களைவிடவும் அதிகமான செயல்பாட்டை ஆக்டிவ் ஃபண்டுகள் தருவதற்குத் திணறும்போதோ இண்டெக்ஸ் ஃபண்டுகள் பிரத்யேகமான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது எனில், போர்ட் ஃபோலியோ வில் பேசிவ் ஃபண்டுகளைச் சேர்த்துக்கொள்வதில் தவறே இல்லை.
2. உதாரணமாக, லார்ஜ்கேப் ஃபண்டுகள் லார்ஜ்கேப் இண்டெக்ஸ்களைத் தாண்டி வருமானம் தருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன என்பதைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. எனவே, அவற்றுக்கு மாற்றாக போர்ட்ஃபோலி யோவில் பேசிவ் ஃபண்டுகளை ஏற்கலாம்.
அதே போல், சில ஸ்மார்ட் டான பீட்டா இண்டெக்ஸ்கள் அவற்றின் இண்டெக்ஸ்களைத் தாண்டிய வருமானத்தைத் தருவதற்கான அறிகுறிகளுடன் இருக்கின்றன. இதில் அவரவர் போர்ட்ஃபோலியோவுக்குத் தகுந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த நிலையில், முதலீட்டாளர் களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஆக்டிவ் ஃபண்டுகளைவிடவும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் அதிக வருமானம் தருகிறது எனில், எதற்கு ஆக்டிவ் ஃபண்டுகள் தேவை என்ற கேள்வி எழலாம். ஆக்டிவ் ஃபண்டுகளில் கணிச மானவை சந்தையின் பெஞ்ச் மார்க் வருமான வரம்புகளைத் தாண்டி நிலையாக வருமானம் தரக்கூடியவையாக இருக் கின்றன. அவற்றில் சில லார்ஜ்கேப் ஃபண்டுகளும் உள்ளன.
இந்த ஃபண்டுகளின் செயல்பாடு சுணக்கம் காண்பதும் குறுகிய காலத்துக்கானதாகவே இருக்கிறது. எனவே, அவற்றை முதலீட்டுக்காகத் தேர்வு செய்யலாம். வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், ஃபண்ட் நிர்வாகிகள் சிறப்பாகச் செயல் பட்டு அந்த ஃபண்டுகளில் நல்ல லாபத்தை உறுதி செய்தால் அவற்றைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.
போர்ட்ஃபோலியோவில் ஃபண்டுகளைத் தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, குறைந்த செலவினம், நிறைவான வருமானம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது மட்டுமே.
தமிழில்: ஜெ.சரவணன்