Published:Updated:

`சிக்கலில் இன்ஃபோசிஸ்; கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!' - வெளியேறிய ரூ.53,000 கோடி!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக்கும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராயும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி மோசடிக்காக சில தகவல்களை மறைத்துள்ளனர் என அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது மோசடிகளை ஆடிட்டர் குழுவுக்கும் இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கும்கூட தெரியாமல் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாகவே, நேற்று பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் பங்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

Buy and Sell
Buy and Sell

நேற்று ஒரே நாளில் மட்டும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்நிறுவனத்தின் பங்கு விலை 16% குறைந்து வர்த்தகமானது. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதிக்குப் பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு குறைவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமையான நேற்று, இதன் முதலீட்டாளர்கள் 53,000 கோடி ரூபாயை வெளியில் எடுத்திருக்கிறார்கள். இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. 3.28 லட்சம் கோடியாக இருந்த இதன் சந்தை மதிப்பு, 2.75 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

``இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கும், இதன் நிர்வாகத்துக்கும், பங்கு விலைகளுக்கும் இது ஒரு பெரிய சறுக்கல்தான். இதனால் இந்தப் பங்கின் ரேட்டிங் குறையும். ரீரேட் ஆகும்"
பங்குச்சந்தை நிபுணர்கள்
நம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா?! #SmartInvestorIn100Days நாள்-21

இன்று (23.10.19) சந்தை ஆரம்பித்ததிலிருந்தே இன்ஃபோசிஸ் பங்கின் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது ஒரு பங்கின் விலை 652.95 ரூபாய் என்கிற விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.