Published:Updated:

வெளிச்சத்திற்கு வந்த இன்ஃபோஸிஸ் விவகாரம்... பங்குச் சந்தையில் நடந்தது என்ன?

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் ( vikatan )

தற்போது வெளியிடப்பட்டுள்ள காலாண்டு முடிவுகளில், நிறுவனத்தின் வருமானத்தையும், லாபத்தையும் உயர்த்திக்காட்டுவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐடி துறையில் முன்னணியிலுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் சி.எஃப்.ஓ மீது அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் அளித்துள்ள புகார்களால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை, இன்று ஒரே நாளில் 16 சதவிகிதத்துக்குமேல் வீழ்ச்சியடைந்து 640 ரூபாயாக உள்ளது. இந்த வீழ்ச்சி மேலும் தொடர்கிறது. சமீபத்தில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள, உலகின் மிகச்சிறந்த 250 நிறுவனங்களின் பட்டியலில் இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நந்தன் நீலகேணி
நந்தன் நீலகேணி
vikatan

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள், வரவுசெலவுக் கணக்கீடுகள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் முறைகேடு நடப்பதாக, அந்த நிறுவனத்தோடு தொடர்புடைய எவருக்கேனும் தெரியவந்தால் அதுகுறித்து வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிப்பதற்கு வழிவகை உண்டு. அப்படித் தெரிவிப்பவர்களை விசில்ப்ளோயர் (Whistleblower) என்பார்கள். அப்படி தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படும்.

இதுபோல, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சிலர், தங்கள் பெயர்களைக் குறிப்பிடாமல் நிறுவனத்துக்குப் புகார்க்கடிதம் அனுப்பியுள்ளனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ நிலஞ்ஜன் ராய் ஆகியோர்மீதுதான் இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் அதிக லாபம் காட்டுவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தால் இந்தியப் பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் ஒரே நாளில் பெருத்த சரிவு ஏற்பட்டுள்ளது.

Infosys
Infosys
பங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்?! #SmartInvestorIn100Days நாள்-20

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், முந்தைய காலாண்டு முடிவுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., நெறிமுறைகளுக்கு மாறாக முறைகேடுகள் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல, தற்போது வெளியிடப்பட்டுள்ள காலாண்டு முடிவிலும், நிறுவனத்தின் வருமானத்தையும், லாபத்தையும் உயர்த்திக்காட்டுவதற்காக அத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

கடந்த காலாண்டு முடிவுக்கான கணக்கீடுகள் செய்யும்போது, லாபத்தை அதிகப்படுத்திக்காட்டுவதற்காக விமானப் பயணத்துக்கான விசா செலவுகளைக் கணக்குக்காட்டுவதில் நெறிமுறைகளுக்கு மாறாகச் செயல்படும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆடிட்டர்கள் அதற்கு ஒத்துழைக்காததால் அப்போதைக்கு அதை ஒத்திவைத்தனர். நடப்பு காலாண்டிலும்கூட செலவுகளில் சிலவற்றைக் கணக்கில்காட்டாமல் விடுவதன்மூலம் லாபத்தை அதிகரித்துக்காட்டுவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

சலீல் ஃபரேக்
சலீல் ஃபரேக்
vikatan

வெரிஸோன், இன்டெல், ஏபிஎன் அம்ரோ உள்ளிட்ட சில முக்கிய நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தங்களிலும், கணக்கீட்டு விவரங்களில் மாற்றம்செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை நெறிமுறைப்படி செயல்படுத்தமுடியாதபடி தலைமை நிதி அதிகாரியின் தலையீடும் இருந்திருக்கிறது. இந்த முறைகேடுகள் குறித்து இயக்குநர் குழுக் கூட்டத்தின்போது வெளிப்படுத்தவிடாதபடி இருவரும் தடையாக இருந்திருக்கிறார்கள். சி.இ.ஓ தனிப்பட்ட முறையில் சுற்றுலா சென்ற விமானப்பயணங்களுக்கான செலவுகளையும் நிறுவனத்தின் கணக்கில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`மதராஸி என்று சொன்னார்'- அமெரிக்காவுக்குப் பறந்த புகாரால் ஆடிப்போன இன்ஃபோஸிஸ்!

இந்த நிலையில் இயக்குநர் சலீல் பரேக் இயக்குநர்கள் குழுவிலுள்ள தமிழர்களான டி.சுந்தரம் மற்றும் டி.என்.பிரகலாத் இருவரையும் 'மதராஸிகள்' என்று கிண்டலடித்ததையும் இந்த விசில்ப்ளோயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புகார்கள் குறித்த மெயில் மற்றும் வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தும் தங்கள் வசமுள்ளதாக புகாரளித்தவர்கள் கூறியுள்ளனர். அந்தப் புகார்கள் குறித்த விசாரணை நடைபெறும்போது மெயில்கள், வாய்ஸ் மெசேஜ்களை ஒப்படைப்போம் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவிலிருக்கும் அலுவலகத்திலிருந்தும் புகார் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், அனைத்து முறைகேடுகளுக்குமான ஆதாரங்கள், வாய்ஸ் மெசேஜ், இ-மெயில் உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி
இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி
vikatan

இந்த விவகாரம் வெளிவந்ததால், இன்று பங்குச்சந்தை தொடங்கியதுமே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 16 சதவிகிதத்துக்குமேல் சரிவடைந்துள்ளது. இதையடுத்து இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி "இந்தப் புகார்கள் குறித்து முழுமையான, விரிவான விசாரணை நடத்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, "உண்மையாகவே இந்த மாதிரி நடந்திருந்தால் அது தவறு. பொதுவாக, டாக்ஸ் பிளானிங் என்ற வகையில் இதுபோன்ற தவறுகள் சில நிறுவனங்களில் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஐடி துறையைப்பொறுத்தவரை, இன்ஃபோசிஸ் நிறுவனம், நன்மதிப்பு பெற்ற முன்னணி நிறுவனமாக உள்ளது. எனவே, இந்தக் குற்றச்சாட்டு, அந்த நிறுவனத்தின்மீது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குறைத்திருக்கிறது. இந்தப் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று இன்ஃபோசிஸ் தலைவர் கூறியிருக்கிறார். எனவே, விசாரணைக்குப் பின்னர்தான் உண்மை தெரியவரும்" என்றார்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்
vikatan
அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்! எப்படி? #SmartInvestorIn100days - நாள்- 19

கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு பர்ஃபார்மன்ஸ் பொறுத்து ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்படும். எனவே, அதற்காகக்கூட இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. காலாண்டு முடிவுகளில் லாபத்தை அதிகரித்துக்காட்டுவதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும் இந்த முறைகேடு நடந்திருக்கக்கூடும். இதுகுறித்து விசாரணையில், ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் & கோ என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் ஈடுபட்டுள்ளது. விசாரணை விரைவில் நடத்தப்பட்டு, சாதகமான சுழல் ஏற்பட்டால் பங்கு விலையில் ஏற்றம் ஏற்படக்கூடும்.

அடுத்த கட்டுரைக்கு