Published:Updated:

இ.எஸ்.ஜி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

இஎஸ்.ஜி ஃபண்டுகளில்....
பிரீமியம் ஸ்டோரி
இஎஸ்.ஜி ஃபண்டுகளில்....

E S G F U N D

இ.எஸ்.ஜி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

E S G F U N D

Published:Updated:
இஎஸ்.ஜி ஃபண்டுகளில்....
பிரீமியம் ஸ்டோரி
இஎஸ்.ஜி ஃபண்டுகளில்....

முதலீடு என்று வரும்போது, வெறும் தொழில் திறமை யைப் பார்த்து மட்டும் பணத்தைப் போடாமல், அவர்களின் நேர்மை எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து முதலீடு செய்வது இந்தக் காலம். இதற்கு உதவியாக இருப்பதுதான் இ.எஸ்.ஜி ஃபண்டுகள். சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகத்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களை இ.எஸ்.ஜி ஃபண்ட் என்று குறிப்பிடுகிறோம்.

எஸ்.ஶ்ரீதரன், 
நிதி 
ஆலோசகர், 
Wealthladder.
co.in
எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder. co.in

பொதுவாக, பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு அந்த நிறுவனத்தின் நிதி சார்ந்த (காலாண்டு முடிவுகள், ஆண்டு நிதி அறிக்கை மற்றும் இருப்புநிலை அறிக்கை) மற்றும் அடிப்படை காரணங்களை மட்டுமே ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும். ஆனால், இதை மட்டும் பார்க்காமல், அந்த நிறுவனத்தின் நிதிசாரா காரணங் களையும் ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுப்பது இ.எஸ்.ஜி அணுகு முறையில் மட்டுமே சாத்தியமாகும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் நிர்வாகத்தின் தரம் மற்றும் அந்த நிர்வாகத்தின் தன்மை போன்றவை ஒரு சில நிதிசாரா காரணங்களாகும்.

இது ஒரு புதிய அணுகுமுறை, இது கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது. உலகளாவிய சந்தைகளில், லெமன் பிரதர்ஸ் வீழ்ச்சியடைந்த பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் இ.எஸ்.ஜி மீதான கவனம் வேகமாக அதிகரித்துள்ளது. ஒரு இ.எஸ்.ஜி ஃபண்டில் அதிக நிலைத்தன்மை மதிப்பெண் கொண்ட பத்திரங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது இ.எஸ்.ஜி ஃபண்ட் வலியுறுத்தும் முதலீட்டு நியதி. அது மட்டுமல்ல, மாசுபாடு, தொழிலாளர் உறவுகள் அல்லது மேலாண்மை நடைமுறைகள் குறித்த மோசமான பதிவுகளைக் கொண்ட நிறுவனங்களை விலக்கி, சுற்றுச்சூழலையும் அதன் மக்களையும் எதிர்மறையாகப் பாதிக்கும் தொழில் நிறுவனங்களைத் தவிர்க்கவும் இந்த வகை ஃபண்ட் வழிவகுக்கிறது. உதாரணமாக, மது, புகையிலை, சூதாட்டம் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகளைத் தவிர்ப்பது இ.எஸ்.ஜி முதலீட்டின் மகத்துவம் ஆகும்.

இ.எஸ்.ஜி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இந்த நிதிகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல மாதங்களுக்கும் மேலாக லாக்டௌன் செய்யப்பட்ட போதும் தங்கள் நிறுவனங்களை திறமையுடன் நடத்தும் நிறுவனங்கள் நிலைத்தன்மையில் அதிக மதிப்பெண் பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் நிலைத்தன்மையைக் கவனிக்காமல் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் நீண்ட காலத்தில் நஷ்டம் அடைகின்றனர்.

மேலும், சுற்றுச்சூழல் பிரச்னை களுக்காக ஒரு சில நிறுவனங்கள் பல சிக்கல்களைச் சந்திப்பது முதலீட் டாளர்கள் மற்றும் பங்குதாரர்களை பாதிக்கும் வகையில் உள்ளது.உதாரணமாக, உலகளாவிய ஒரு தொழில்நுட்ப நிறுவனம் 2021-ம் ஆண்டில் தன்னிடமிருந்த வாடிக்கை யாளர்கள் குறித்த டேட்டா பிற நிறுவனங்களுக்குத் தந்ததால், பெரும் பின்னடைவைச் சந்தித்ததுடன், வியாபாரத்தில் பெறும் நஷ்டத்தையும் சந்தித்தது. 2018-ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய காப்பர் தொழில் செய்யும் நிறுவனம், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் மூடப்பட்டது.

இ.எஸ்.ஜி அணுகுமுறையில் முதலீடு செய்வதன் மூலம் தரம் வாய்ந்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதால், நீண்டகாலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தை வழங்க வழி வகுக்கிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பங்குகள் ஏற்ற, இறக்கத்தைக் கொண்டிருந்தாலும், இ.எஸ்.ஜி நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்க பயனுள்ள உத்தியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இ.எஸ்.ஜி ஃபண்டின் குறைகள்...

இ.எஸ்.ஜி அணுகுமுறை சந்தைக்கு மிகவும் புதியது. மேலும், இந்த அணுகுமுறை சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் தொடங்கியது. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் முன்பே உள்ள ஒரு திட்டத்தை இ.எஸ்.ஜி பிரிவில் மாற்றியுள்ளது. இது தவிர, மற்ற அனைத்து ஃபண்டுகளும் கடந்த ஆறு மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் தொடங்கப்பட்டன. இந்த ஃபண்டுகள் தொடங்கி மூன்று வருட காலத்துக்குப் பிறகுதான் இவற்றின் செயல்திறனைக் கணிப்பது சரியாக இருக்கும்.

இரண்டாவதாக, நிதிசாரா விஷயங்கள் பற்றித் தரமான தகவல்கள் இல்லாததால், இ.எஸ்.ஜி அணுகுமுறை முதலீடு ஒரு சவாலை எதிர்கொள்கிறது. நிறுவனங்கள் நல்ல நிலைத்தன்மை நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றாலும், அதற்கு உண்டான தகவல்களை வெளிப்படை யாக இதுவரை எந்த நிறுவனங்களும் வெளியிடுவதில்லை என்பது ஒரு பெரிய குறையாகும். எனவே, பலவிதமான மாறுபட்ட கருத்துகள் உருவாகி, ஒரு முடிவுக்கு வராதபடிக்கு குழப்பிவிடு கின்றன.

இ.எஸ்.ஜி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, ஒருவர் என்னென்ன காரணங்களை மனதில் கொள்ள வேண்டும், இந்த ஃபண்டுகளில் ஒருவர் எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்விகள் ஆகும்.

இது ஒரு தீம் அடிப்படையிலான ஃபண்டாக இருப்பதால், தங்களுடைய போர்ட்ஃ்போலி யோவில் மொத்தமாக 10 சதவிகி தத்துக்கு மிகாமல் முதலீடு செய்வது நல்லது. மேலும், ஒரு சில திட்டங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை உலகளாவிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கின்றன, இது கரன்சி மதிப்பு மற்றும் பங்குச் சந்தை ரிஸ்க் இரண்டையும் கொண்டுள்ளது.

இ.எஸ்.ஜி வகையில் சுமார் 9 திட்டங்கள் உள்ளன. இந்தப் ஃபண்ட் திட்டங்களின் செயல் திறன் மேலே உள்ள அட்டவணை யில் தரப்பட்டு உள்ளதைப் பார்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism