Published:Updated:

நீண்ட கால முதலீட்டில் செல்வம் சேர்க்க கைகொடுக்கும் புளூசிப் ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

நீண்ட கால முதலீட்டில் செல்வம் சேர்க்க கைகொடுக்கும் புளூசிப் ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியப் பங்குச் சந்தை, 2020 மார்ச் மாதத்தில் அதிக வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், குறுகிய காலத்தில் அதிலிருந்து மீண்டுவந்தது. அதற்கு முக்கியமான காரணம், மிகப் பெரிய நிறுவனங்கள் என்கிற புளூசிப் (Bluechip) நிறுவனங்கள் விரைந்து மீண்டு வந்ததாகும். இந்த நிறுவனங்கள், நாட்டின் பொருளாதாரத்தைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், Holisticinvestment.in
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், Holisticinvestment.in

இந்த நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தையில் நடக்கும் தடாலடி இறக்கத்தால் பெரிதாகப் பாதிக்கப்படாது. அதாவது, பங்கு விலை குறைவான ஏற்ற இறக்கம் என்பது புளூசிப் நிறுவனப் பங்குகளின் சாதக அம்சமாக இருக்கிறது. இந்த புளூசிப் நிறுவனப் பங்குகள் செபியின் வரையறையின்படி, லார்ஜ்கேப் பிரிவின்கீழ் வருகின்றன. பங்குச் சந்தையின் மதிப்பில் (மார்க்கெட் கேப்பிடலைசேஷன்) இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும், முதல் 100 பங்குகள் லார்ஜ்கேப் பங்குகளாகும்.

செல்வ உருவாக்கத்துக்கு உதவும்...

இந்தப் பெரிய நிறுவனப் பங்குகள் மற்றும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யும் லார்ஜ்கேப் ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க (Wealth Creation) முடியும். செல்வ உருவாக்கத்தில் உதவும் முக்கியமான சில லார்ஜ்கேப் ஃபண்டுகளைப் பற்றிப் பார்க்கும் முன் முதலீட்டுக்காக லார்ஜ்கேப் பங்குகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொண்டால் நல்லது.

இந்த வகை பெரிய நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது, கீழிலிருந்து மேல் அணுகுமுறையை (bottom up approach) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்ட் மேனேஜர்கள் பின்பற்றுகிறார்கள். பாட்டம் அப் அணுகுமுறையை சி.எஸ்.இ (CSE: Company – Sector – Economy) என்று குறிப்பிடுவார்கள். இந்த முறையில், முதலில் எதிர் காலத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நிறுவனத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.

அடுத்து, அந்த நிறுவனம் எந்தத் துறையைச் சார்ந்துள்ளது; அதன் எதிர்கால வளர்ச்சி நன்றாக இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அந்தத் துறை மற்றும் நிறுவனம் சிறப்பாக இருக்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்துக்கு உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதார நிலை சாதகமாக இருக்கிறதா என்பதையும் ஆராய்கிறார்கள். இவை எல்லாம் சாதகமாக இருக்கும்பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும் முடிவு எடுக்கிறார்கள்.

நீண்ட கால முதலீட்டில் செல்வம் சேர்க்க கைகொடுக்கும் புளூசிப் ஃபண்டுகள்!

நீண்ட கால முதலீடு...

பாட்டம்அப் அணுகு முறையில் பொருளாதார நிலை சரியில்லை என்றாலும் சிறந்த புளுசிப் நிறுவனப் பங்குகளில்/ ஃபண்டுகளில் முதலீடு செய்வது மூலம் முதலீட்டாளர்கள் செல்வம் உருவாக்க முடியும். காரணம், மோசமான பொருளா தார நிலையிலும் புளூசிப் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல் பட்டு வருவதாகும். இந்த நிறுவனங்களின் பேலன்ஸ் ஷீட் மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களைவிட வலிமை யாக இருப்பதே இதற்குக் காரண மாகும்.

பொருளாதார நிலை சரியில்லாத காலகட்டத்தில் புளூசிப் பங்குகளின் விலை மதிப்பீடு கவர்ச்சிகரமாகவும் மலிவு விலையிலும் காணப்படும்.

மூன்று முக்கிய அம்சங்கள்...

ஒரு புளூசிப் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் முன் ஃபண்ட் மேனேஜர்கள் மூன்று முக்கிய அம்சங்களைக் கவனிக்கிறார்கள். குறிப்பாக, வணிகத்தின் அடிப்படை (Business fundamental), மேலாண்மைத் திறன் (Management competence), நியாயமான மதிப்பீடு (Reasonable valuation) ஆகிய அம்சங்களைக் கவனிக்கிறார்கள். இந்த மூன்று அம்சங்களுக்கும் அவர்கள் சம அளவில் முக்கியத் துவம் தருகிறார்கள்.

மத்திய அரசு அளித்திருக்கும் சலுகைகளால் பொருளாதார வளர்ச்சி மைனஸுக்குப் போவது குறைந்திருக்கிறது. கொரானா நம்முடன் இருந்தாலும் உலக அளவில் ஜி.டி.பி வளர்ச்சி உறுதிப் படுவதாக இருக்கிறது.

தெரிந்த சிக்கலைவிட தெரியாத சிக்கல் மோசமானது என்பார்கள். இப்போது கொரோனா சிக்கல் பற்றித் தெரிந்திருப்பதால், பயம் குறைந்திருக்கிறது. இதனால், பங்குச் சந்தைகள் பாசிட்டிவ்வாக மாறியிருக்கின்றன. இதனால், இந்தியச் சந்தைக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வந்திருக்கின்றன. இந்த மாற்றம் பெரிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.

கொரோனா பாதிப்பால் அமைப்புசாரா நிறுவனங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டன. பெரு நிறுவனங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகவில்லை. மேலும், அரசின் இதுவரைக்கும் இல்லா அளவிலான வட்டி விகித குறைப்பு இந்த நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. அதாவது, இந்தப் பங்குகளில் முதலீடு செய்யும் புளூசிப் ஃபண்டுகள் லாபகரமாக மாறியிருக்கின்றன.

குறுகிய காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய முதலீட்டாளரின் பங்கு முதலீடு மற்றும் விற்பனை, கொரோனா பாதிப்பு போன்றவை சந்தையை ஏற்ற இறக்கத்தில் வைத்திருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்களின் 5, 10, 15 ஆண்டுகளின் வருவாய் வளர்ச்சிக்கு ஏற்பவே அவற்றின் பங்குகளின் விலையும் அதிகரித்து வந்துள்ளது.

புளூசிப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதற்கு சமமாகும். சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக புளூசிப் பங்குகளில் முதலீடு செய்வதைவிட, புளூசிப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மூலம்ரிஸ்க்கைக் குறைப்பதுடன், அதிக லாபத்தையும் பெற வாய்ப்புண்டு.

லார்ஜ்கேப் ஃபண்டுகள் சராசரியாகக் கடந்த ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு மற்றும் பத்து ஆண்டுகளில் முறையே 48%, 14%, 15% மற்றும் 14% வருமானம் தந்திருக்கின்றன. இதே அளவு வருமானம் எதிர்காலத்தில் நிச்சயமில்லை என்றாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை எதிர்பார்க்கலாம்!

நீண்ட கால முதலீட்டில் செல்வம் சேர்க்க கைகொடுக்கும் புளூசிப் ஃபண்டுகள்!

பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் பெருநிறுவனங்கள்..!

பெருநிறுவனங்களின் வணிக அடிப்படை இப்போது மேம்பட்டிருக்கிறது. கொரோனா பயம் குறைந்திருக்கிறது. தடுப்பூசிகள் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. பெருவாரியான மக்களிடம் எதிர்ப்பு சக்தி மேம்பட்டிருக்கிறது. மக்களும் நிறுவனங்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பருவ மழை நன்றாகப் பெய்திருப்பது தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமான விஷயமாகும். மத்திய அரசு வங்கிகள் இணைப்பு மூலம் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. மூலதனச் செலவு அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதார வளர்ச்சி மேம்பட்டிருப்பது என்பதைக் குறிக்கிறது.