Published:Updated:

ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட்... யாருக்கு ஏற்றது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட்... யாருக்கு ஏற்றது?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீட்டில் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றதாக ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் (RBI Floating Rate Savings Bond) முதலீடு இருக்கிறது. இந்த முதலீடு 100% மத்திய அரசின் உத்தர வாதம் கொண்டு உள்ளதால், ரிஸ்க் இல்லை என்றே சொல்லலாம். இந்த பாண்ட் முதலீடு மூலம் பணவீக்க விகிதத்தைவிட சிறிது கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

மாறும் வட்டி விகிதம்...

தற்போதைய நிலையில், இந்த பாண்டுக்கான வட்டி ஆண்டுக்கு 7.15 சதவிகிதமாக உள்ளது. இந்த பாண்ட் 2018-ல் அறிமுகம் செய்யப் பட்டபோது, இதற்கான வட்டி 7.75% என அதிகமாக இருந்தது. மாறுபடும் (Floating) இந்த வட்டியானது ஜூன் 2022, 30 வரைக்குமானதாகும். தற்போது வட்டி விகிதம் உயர்ந்திருப்பதால், புதிய வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதில், குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி ரூ.1,000-ன் மடங்குகளில் முதலீடு செய்ய லாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.

முதிர்வுக்காலம்...

இந்த ஃப்ளோட்டிங் ரேட் இன்ட்ரஸ்ட்டின் வட்டி விகிதம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் மாற்றத்துக்கு உள்ளாகும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை வட்டி வழங்கப் படும்.

இந்த பாண்டின் முதிர்வுக் காலம் ஏழு ஆண்டுகள் ஆகும். இந்தக் காலத்துக்குப் பிறகு வட்டி எதுவும் தர மாட்டார்கள். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முன் கூட்டியே பணம் எடுக்கும் வசதி உள்ளது.

இந்த பாண்டுக்கான வட்டி விகிதம் தேசிய சேமிப்புப் பத்திரத்துடன் (National Savings Certificate - NSC) தொடர்பு உடையதாகும். அதாவது, என்.எஸ்.இ-யின் வட்டியைவிட பாண்ட் முதலீட்டுக்கு 0.35% கூட்டி வட்டி வழங்கப்படும். அதாவது 7.15% இந்த பாண்ட் முதலீட்டுக்கு தற்போது வட்டி வழங்கப்படுகிறது.

ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட்... யாருக்கு ஏற்றது?

வட்டிக்கு வரி...

இந்த பாண்ட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. வட்டி வருமானத்தில் மூலத்தில் வரி (TDS) பிடிப்பார்கள். ஒருவர் எந்த வருமான வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரியைக் கட்ட வேண்டும்.

இந்த பாண்டில் வர்த்தகம் செய்ய முடியாது. மேலும், ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு மாற்ற முடியாது. இந்த பாண்டை அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது. நாமினி நியமிக்கும் வசதி உள்ளது.

ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட்... யாருக்கு ஏற்றது?

எங்கே முதலீடு செய்வது?

தனிநபர்கள், கூட்டுக் கணக்கு, இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் இந்த பாண்டில் முதலீடு செய்யலாம். எந்த வயதினரும் முதலீடு செய்யலாம். மைனர் களுக்காக பெற்றோர் / காப்பாளர் முதலீடு செய்ய முடியும்.

எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஐ.டி.பி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி வங்கிகள், பங்குத் தரகு நிறுவனங்கள், இதற்கென இருக்கும் எங்களைப் போன்ற ஏஜென்டுகள் மூலம் முதலீடு செய்யலாம். இந்த பாண்டில் காகித வடிவில் முதலீடு செய்யலாம். எலெக்ட்ரானிக் வடிவில் முதலீடு செய்யும்போது பாண்ட் லெட்ஜர் கணக்கு (Bond Ledger Account (BLA) என்கிற முறையில் முதலீட்டாளர் கணக்கில் பாண்ட் வரவு வைக்கப்படும்.

60 - 70 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆறு ஆண்டு களிலும் 70 - 80 வயது வரை உட்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளிலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்கு ஆண்டுகளிலும் தேவைப்பட்டால் பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எந்தத் தேதியில் முன் கூட்டியே பணத்தை எடுக்க விண்ணப்பித்தாலும் அரசு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி அல்லது ஜனவரி 1-ம் தேதிதான் இதைப் பரிசீலனை செய்யும். முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது கடைசியாக நிர்ணயம் செய்யப்பட்ட வட்டியில் 50% பிடித்துக் கொள்ளப்படும்.

தொடர்ந்து நிலையான வருமானம் தேவைப்படுபவர்கள் இந்த பாண்டில் முதலீடு செய்யலாம்.