Published:Updated:

Gold Alert: மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இப்போது என்ன செய்வது புத்திசாலித்தனம்?

தங்கம்

டாலர் இன்டெக்ஸ் வலுவடைந்தால், தங்கத்தின் விலை குறைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தங்கம் விலை தற்போது ஏற்றம் அடைந்து வருகிறது.

Gold Alert: மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இப்போது என்ன செய்வது புத்திசாலித்தனம்?

டாலர் இன்டெக்ஸ் வலுவடைந்தால், தங்கத்தின் விலை குறைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தங்கம் விலை தற்போது ஏற்றம் அடைந்து வருகிறது.

Published:Updated:
தங்கம்

தற்போது விலை உயர்வை பார்த்து இந்திய மக்கள் அச்சம் கொள்ளும் இரண்டே பொருள்கள்... ஒன்று, பெட்ரோல், மற்றொன்று, தங்கம். இந்த இரண்டும்தான் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தங்கம்
தங்கம்

கடந்த 2-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,825-க்கு வர்த்தகமானது. கடந்த 6-ம் தேதி அன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,987-ஆக இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த 10 நாள்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.800 அதிகரித்துள்ளது. 2-ம் தேதி வர்த்தகத்தின்போது ஒரு சவரன் தங்கம் ரூ.38,600-க்கு விற்பனையானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளின் சந்தைகள், குறிப்பாக இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. அந்த நிலையில், தங்கத்தின் விலை பெரும் ஏற்றத்தை சந்தித்தது. ஆபரணத் தங்கம் உச்சபட்ச விலையான ரூ.43,328 -ஐ தொடும் என்று சொல்லிவந்த நிலையில், அதிகபட்சமாக கடந்த மார்ச் 7-ம் தேதி ரூ.40,568-வரை விற்பனையானது. அதற்கு பிறகு, படிப்படியாக விலை குறைந்து வந்த தங்கம் தற்போது இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று பரவல் அச்சம் போன்ற காரணமாக மீண்டும் ஏற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இன்னும் விலை அதிகரிக்கக் கூடும்!

gold
gold

தங்கம் விலை ஏற்றம் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம். "அமெரிக்க பெட் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் கூட்டத்தில் ஃபெடரல் வங்கி 0.25% உயர்த்தி அறிவித்திருந்தது. வரக்கூடிய காலகட்டத்தில் வட்டி விகிதம் இன்னும் உயர்த்தப்படும் என உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக டாலர் இன்டெக்ஸ் மதிப்பு 99-100 என்கிற நிலையில் வலுவடைந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாலர் இன்டெக்ஸ் வலுவடைந்தால், தங்கத்தின் விலை குறைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் அடைந்து வருகிறது. ஏனெனில் ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது இன்னும் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்க திட்டமிட்டுள்ளன. தற்போதைய பொருளாதாரத் தடைகளால் பல கமாடிட்டி பொருள்களின் விலை ஏறியிருக்கிறது. இந்நிலை நீடிக்கும்பட்சத்தில், தங்கம் உள்ளிட்ட பல கமாடிட்டி பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கக் கூடும்.

ஷியாம் சுந்தர்
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

அதுமட்டுமில்லாமல், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் வர்த்தக இடைஞ்சல்களால் உலக நாடுகள் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். பணவீக்கம் அதிரிப்பதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மாற்று முதலீடுகளின் பக்கம் கவனம் செலுத்துகின்றனர். பாதுகாப்பான முதலீட்டில் முதல் சாய்ஸாக தங்கம் இருப்பதால், தற்போது தங்கத்தில் அதிக அளவு முதலீடு குவிய ஆரம்பித்திருக்கிறது.

தற்போது சீனாவில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்திருப்பதால், மீண்டும் அங்கு லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் கமாடிட்டி பொருட்களுக்கு டிமாண்டு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் விலை அதிகரித்திருக்கிறது. இந்த சூழ்நிலையும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்தியா 842 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் திருவிழா காலங்கள் என்பதால், இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட வர்த்தகர்கள் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கின்றனர். மேலே சொன்ன பல காரணங்களால் எதிர்வரும் நாட்கள் தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். திருமணத் தேவைகளுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்போது வாங்கி வைக்கலாம்" என்றார் தெளிவாக.

தங்க நகை
தங்க நகை
vikatan

நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி வாங்கும் தங்கம்..!

கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் தங்கத்தை வாங்குகிறார்கள் என்பதை அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் உள்ள இண்டியா கோல்டு பாலிசி சென்டர் (IGPC) மேற்கொண்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.

பெரும் பணக்காரர்கள் அதிக மதிப்பில் தங்கம் வாங்கினால், நடுத்தர வர்க்கத்தினர் அதிக எண்ணிக்கையில் தங்கம் வாங்கியிருக்கின்றனர். இந்தியக் குடும்பங்களில் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கத்தை ஏதோ ஒரு வடிவில் வாங்கி வைத்திருக்கிறார்கள். என்றாலும், 43 சதவிகிதம் பேர் திருமணத்துக்காகத் தங்க நகை வாங்குகின்றனர். 31 சதவிகிதம் பேர் ‘எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லை’ எனவும் தங்க நகை வாங்குவதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கின்றனர்.

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு

கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.1 - 2 லட்சம் வருமானம் உடையவர்கள் ரூ.28,968 கோடி மதிப்புடைய 58 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றனர். ரூ.2 - 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.39,447 கோடி மதிப்புடைய 78 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றனர். ரூ.5 - 10 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.29,681 கோடி மதிப்புள்ள 59 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றனர்.

ரூ.10-20 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.21,681 கோடி மதிப்புள்ள 43 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், ரூ.2 - 5 லட்சம் வருமானம் உடையவர்களே அதிகம் தங்கம் வாங்குவது தெளிவாகப் புரியும்.

தவிர, தங்கத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதாலோ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாலோ, தங்கம் வாங்குகிற எண்ணம் குறையவில்லை. ஏறக்குறைய 94% தங்கத்தைப் பணமாகத் தந்து வாங்கவே விரும்புகின்றனர். டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க பணக்காரர்கள்தாம் விரும்புகிறார்கள் என்கிற மாதிரியான பல தகவல்களும் இந்த சர்வே மூலம் தெரிய வந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism