Published:Updated:

வரிச் சலுகை அளிக்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்..!

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 9

வரிச் சலுகை அளிக்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்..!

சேமிப்பும் முதலீடும் - 9

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate - NSC) என்பது மிகவும் பிரபல வருமான வரிச் சேமிப்புத் திட்டம் ஆகும். இதில் செய்யப்படும் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு 100% உத்தரவாதம் இருக்கிறது. காரணம், இது மத்திய அரசின் திட்டமாகும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

இந்தத் திட்டத்தின் முதலீட்டை தபால் அலுவலகங்களில் ஆரம்பிக்க முடியும். இந்தியா போஸ்ட் வங்கி வந்த பிறகு, தேசிய சேமிப்புச் சான்றிதழ் முன்பைவிட அதிகமாக பிரபலமாகி இருக்கிறது.

தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 6.8% வட்டி வருமானம் இந்தத் திட்டத்தில் செய்யப் படும் முதலீட்டுக்குக் கிடைக்கிறது. இந்த வட்டியானது பணவீக்க விகிதத்தைவிட சற்று அதிகமாக இருப்பதால், ஓரளவுக்கு நல்ல முதலீடு எனலாம்.

இந்த முதலீட்டுக்கு ஐந்தாண்டுக் கால ‘லாக் இன் பீரியட்’ உண்டு; 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது என்பதால், வரிச் சலுகையையும் சேர்க்கும் போது வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட்டை விட லாபகரமான முதலீடாக இருக்கும்.

யாருக்கு ஏற்றது?

என்.எஸ்.சி-யில் முதலீடு செய்ய முக்கியமான காரணம், வருமான வரிச் சேமிப்பு மற்றும் நியாயமான உத்தரவாத வருமானம் ஆகும். இந்த முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விருப்பாத, முதலீட்டுக்கு வரிச் சலுகை எதிர்பார்க்கும், முதலீட்டுக் காலம் சுமார் ஐந்தாண்டுகளாக இருப்பவர்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கிறது. மொத்த முதலீடு மேற்கொள்பவர்களுக்கு இந்த முதலீடு சரியாக இருக்கும்.

வரிச் சலுகை அளிக்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்..!

யாருக்கு ஏற்றது அல்ல?

நீண்ட காலத்தில் செல்வம் உருவாக நினைப் பவர்கள், பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள். வருமானத் துக்கு விதிக்கப்படும் வரியில் அனுகூலம் இருக்க வேண்டும்; அதாவது, குறைவான வரியைக் கட்ட வேண்டும் என நினைப்பவர் களுக்கு என்.எஸ்.சி ஏற்றதல்ல. மேலும், மாதம்தோறும் முதலீடு செய்து வரிச் சலுகை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானது அல்ல.

மாற்று முதலீடுகள்

முதலீட்டுக்கு வரிச் சலுகை அளிக்கும் ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபா சிட்டுகள் மாற்று முதலீடுகளாக இருக்கும். ஆனால், அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் என்.எஸ்.சி-யின் வருமானத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகிய வற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் என்.எஸ்.இ வட்டி வருமானத்தைவிட அதிகம். ஆனால், தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கு வரிச் சலுகை கிடையாது. வரிச் சலுகை தேவையில்லை என்பவர்கள் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டைப் பரிசீலிக்கலாம்.

எப்படி முதலீடு செய்யலாம்?

இந்தியக் குடிமக்களாக இருக்கும் யாரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும், அதன் பிறகு ரூ.100-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.

தனியாக, இருவர், மூவர் இணைந்து முதலீடு செய்யலாம். மைனர்கள், பெற்றோர், காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் தாங்களே தங்கள் கணக்கை நிர்வகிக்க முடியும்.

இதற்கு என இருக்கும் படிவத்தை தபால் அலுவலத்தில் பெற்று அல்லது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிரப்பிக் கொடுத்து முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். ஆதார் மற்றும் பான் கார்டு நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் தேவைப்படும். ரொக்கப் பணம், காசோலை, கேட்பு காசோலை மூலம் முதலீடு செய்யலாம்.

வரிச் சலுகை

முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் முதலீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்பட்டு, அது மீண்டும் மறுமுதலீடு செய்யப்படும். இந்த வட்டி வருமானம் மறுமுதலீடு செய்யப் படுவதால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் அந்தத் தொகைக்கு 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை பெற முடியும்.

ஆண்டுக்கு ஒருமுறை வட்டி சேர்ந்தாலும், வட்டி உடனடி யாகத் தரப்படாது. அதை முதிர்வின்போது ஐந்தாண்டு கழித்து அசலுடன்தான் பெற்றுக்கொள்ள முடியும். வட்டிக்கு வரிச் சலுகை கோரவில்லை எனில், வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. அதே நேரத்தில், அந்த வட்டிக்கு மூலத்தில் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய மாட்டார்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

* மூன்று மாதத்துக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றத்துக்கு உள்ளாகும். அதேநேரத்தில், முதலீட்டை ஆரம்பிக்கும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டதோ, அது முதலீட்டுக் காலம் முழுக்க வரவு வைக்கப்படும்.

* தேசிய சேமிப்புச் சான்றிதழ் முதலீட்டு ஆவணத்தின் மீது கடன் வாங்கும் வசதி இருக்கிறது.

* முதலீட்டை அதன் முதிர்வுக் காலத்துக்கு முன் பணம் பெற முடியாது. முதலீட்டாளருக்கு அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் மட்டுமே பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியும். என்.எஸ்.சி ஆவணத்தை ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு நிபந்தனைக்கு உட்பட்டு (முதலீடு செய்திருப் பவர் இறந்துவிடுவது) மாற்றிக் கொள்ள முடியும்.

* பொது அதிகார ஆவணம் கொடுப்பது மூலம் இன்னொரு வருக்கு இந்தப் பணத்தைக் கொடுக்கச் சொல்ல முடியும்.

* முதிர்வுக்குப் பிறகு, இந்தியா விலுள்ள எந்தத் தபால் அலுவலகத்திலும் இந்தப் பத்திரத்தைக் கொடுத்து பண மாக்கிக்கொள்ள முடியும். அப்போது அரசு வழங்கிய புகைப்படத்துடன்கூடிய ஏதாவது அடையாள அட்டை யின் நகலைக் கொடுக்க வேண்டி வரும்; மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடைய அட்டையின் ஒரிஜினலைக் காட்ட வேண்டும்.

* முதலீட்டுக்கு நாமினியை நியமிக்க மறந்துவிடாதீர்கள்.

* என்.எஸ்.சி சான்றிதழ் சேதம் அடைந்தாலோ, காணாமல் போனாலோ, விண்ணப்பித்து புதுச் சான்றிதழைப் பெறலாம். இதற்கு பாண்ட் ஒன்று எழுதித் தர வேண்டும்.

வருமான வரியை மிச்சப் படுத்தும் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு முழு பாதுகாப்பு வேண்டும் என நினைக்கும் ரிஸ்க் எடுக்கவிரும்பாதவர்களுக்கு ஏற்றதாகத் தேசிய சேமிப்புச் சான்றிழ் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism