Published:Updated:

முதலீட்டைத் தேர்வு செய்யும் கலை..!

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 26

முதலீட்டைத் தேர்வு செய்யும் கலை..!

சேமிப்பும் முதலீடும் - 26

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

இன்றைக்கு நிறைய முதலீட்டுத் திட்டங்கள் நம் முன்னால் இருக்கின்றன. இதில் சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி என்கிற குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது. அந்தக் குழப்பத்தை சரிசெய்து, சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

முதலீட்டின் முக்கிய நோக்கம்...

முதலீட்டை ஆரம்பிக்கும் முன், உங்களை நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி, இந்த முதலீட்டை எதற்காக ஆரம்பிக்கிறீர்கள் என்பதுதான்.

செல்வம் சேர்க்கவா, பிள்ளை களின் உயர்கல்வி, கல்யாணம் மற்றும் ஓய்வுக்கால செலவுகளுக் காகவா அல்லது தொடர் வருமானத்துக்காகவா என்கிற கேள்விக்குப் பதில் அளித்த பின், உங்கள் முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை தேவையா, இல்லையா என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்.

வரிச் சலுகை வேண்டும் எனில், ஐந்து ஆண்டு வங்கி டெபாசிட், தபால் அலுவலக ஐந்து ஆண்டு டைம் டெபாசிட், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால்), தேசிய சேமிப்புச் சான்றிதழ், நேஷனல் பென்ஷன் திட்டம் (என்.பி.எஸ்), வரிச் சலுகை அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் (இ.எல்.எஸ்.எஸ்) போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

வரிச் சலுகை தேவை இல்லை எனில், வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட், கிஷான் விகாஸ் பத்திரங்கள், நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் செய்யப்போவது, தொடர் வருமானத்துக் கான முதலீடு எனில், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் பத்திரங் கள், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்து வரலாம்.

இவை தவிர, முதலீட்டாளரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்துக்கேற்ப முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

முதலீட்டைத் தேர்வு செய்யும் கலை..!

சொத்து ஒதுக்கீடு...

அடுத்து, உங்கள் முதலீட்டை சொத்து ஒதுக்கீட்டின் படி (Asset allocation) பிரித்து மேற்கொள்வது அவசியம்.

அஸெட் அலொகேஷன்படி, முதலீட்டாளர் 100 என்கிற எண்ணிலிருந்து அவரின் வயதைக் கழிக்க கிடைக்கும் எண்ணை சதவிகிதமாக பாவித்து, முதலீட்டுத் தொகையில் அந்தச் சதவிகிதத்தை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள்) போட வேண்டும். மீதித் தொகையைக் கடன் சந்தை சார்ந்த திட்டங் களில் (ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், கடன் பத்திரங்கள்) முதலீடு செய்து வர வேண்டும்.

தங்கம் என்பது நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானம் தரக்கூடியது; மேலும், பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருக்கும் காலத்தில் லாபம் ஈட்டித் தரக் கூடியது. எனவே, ஒருவர் தன் முதலீட்டுக் கலவையில் (Portfolio) டிஜிட்டல் கோல்டு (ஆர்.பி.ஐ-யின் தங்கப் பத்திரம், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்) திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒருவரின் வயது 40 என வைத்துக்கொள்வோம். 100 - 40 = 60, அவரின் மொத்த முதலீட்டுத் தொகையில் 60 சதவிகிதத்தை அவர் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மீதி 40% தொகையில் 30 சதவிகிதத்தைக் கடன் சார்ந்த திட்டங்களிலும், 10 சதவிகிதத்தைத் தங்கத்திலும் முதலீடு செய்து வரலாம். அணிந்து அழகு பார்க்க வாங்கும் தங்க நகைகளை இந்தக் கணக்கில் சேர்க்கக் கூடாது. இது 5 - 10% முன் பின் இருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அஸெட் அலொகேஷன்படி முதலீடு செல்கிறதா என்பதைக் கவனிப்பது அவசியமாகும்.

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதாலும் குடியிருக்கும்போது அதன்மூலம் வருமானம் கிடைக்காது என்பதாலும், அதை முதலீடாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவரின் நிதி இலக்குகள் எல்லாம் நிறைவேற, பணி ஓய்வுக் காலத்துக்குத் தேவையான தொகை எல்லாம் சேர்ந்து விட்டது எனில் மட்டுமே முதலீட்டு நோக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வீடுகளை கைப்பணம் மூலமோ வீட்டுக் கடன் மூலமோ வாங்க வேண்டும்.

ஓய்வுக்கால முதலீடுகள்...

நம்மில் பெரும்பாலானோர் செய்யத் தவறும் விஷயம், ஓய்வுக் காலத்துக்கென தனியே முதலீடு செய்யாமல் இருப்பதாகும். மேலும், பணி ஓய்வுக்காலத்துக்கென சம்பளத்தில் பிடிக்கப்படும் பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் (EPF) தொகையையும் இடையிடையே வேறு செலவு களுக்கு எடுத்துவிடுவதாகும். இப்படிச் செய்வதால் வேலையை விட்டு நிற்கும்போது இ.பி.எஃப் கணக்கில் குறைவான தொகையே இருக்கும். இதைக் கொண்டு ஓய்வுக்கால செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

இ.பி.எஃப் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை நிதி ஆண்டில் வருமான வரிச் சலுகை இருக்கிறது. தற்போதைய நிலையில், இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கப் படுகிறது.

அண்மையில் ஆர்.பி.ஐ வட்டியை அதிகரித்துள்ளது. அந்த வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் இ.பி.எஃப்-க்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம். வட்டி வருமானத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை வேறு இருக்கிறது. நிதி ஆண்டில் ஒருவர் செய்யும் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்ட இ.பி.எஃப் தொகைக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

இந்த அளவுக்கு அதிக தொகையை இ.பி.எஃப்பில் முதலீடு செய்பவர்கள் மிகக் குறைவான பேரே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தப் பணத்தைக் கடைசி வரைக்கும் எடுக்காமல் இருந்தால் ஒருவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்கூட இந்தக் கணக்கில் சேர வாய்ப்புள்ளது. அடுத்து, அனைவருக்குமான பொது பிராவிடன்ட் ஃபண்ட் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த முதலீட்டுக்கும் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. ஆனால், வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை இல்லை. முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், ஓய்வுக் காலத்தில் அதிக தொகை தேவைப் படும் என நினைத்தால், பிபிஃப்பில் பணம் சேர்த்து வரலாம். இதன் லாக் இன் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

அடுத்து, நேஷனல் பென்சன் சிஸ்டம் (NPS). இது, ஓய்வுக் காலத்துக்கான சிறந்த முதலீடாக இருக்கிறது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.50,000 வரைக்கும் நிதி ஆண்டில் 80சி பிரிவைத் தாண்டி வரிச்சலுகை இருக்கிறது. இதில் பங்குச் சந்தை, கடன் பத்தி ரங்கள் என முதலீட்டு விருப்பங்கள் அல்லது வயதுக்கு ஏற்ற முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. இந்த முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கிடைத்து வருகிறது. 60 வயதுக்குப் பிறகு, மொத்தத் தொகையில் 60% தொகையை வரி எதுவும் இல்லாமல் எடுத்துக் கொள்ள முடியும். மீதி 40% தொகை, ஆயுள் காப்பீட்டு நிறுவ னங்களின் பென்ஷன் பிளான் களில் முதலீடு செய்யப்பட்டு பென்ஷனாக வழங்கப்படும்.

உங்களுக்கு முதலீடு குறித்த அறிவு மற்றும் அனுபவம் ஓரளவுக்கு இருந்தால் அல்லது நிதி ஆலோசகரின் உதவியோடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் நீண்ட காலத்துக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (SIP) முதலீடு செய்து வரலாம். அப்படி முதலீடு செய்து சேர்த்த தொகையை சிஸ்ட மேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் பென்ஷன் போல் பெற்றுவரலாம். ஓய்வுக் காலத்துக்காக மேற்கண்ட ஏதாவது ஒரு திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்து வர வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. மேற்கண்ட திட்டங்கள் அனைத்திலும் கலந்துகூட முதலீடு செய்து வரலாம். இப்படிச் செய்யும்போது உங்கள் முதலீட்டு ரிஸ்க் பரவலாக் கப்படுகிறது என்பதை மறக்காதீர்கள்.

நல்ல நிதி ஆலோசகரின் உதவி..!

முதலீடுகள் மற்றும் காப்பீடுகள் விஷயத்தில் முதலீட்டாள ரால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை எனில், நல்ல அனுபவம் கொண்ட நிதி ஆலோசகரின் உதவியைப் பெற்று, அவர் சொல்கிற மாதிரி முதலீடு செய்வது புத்திசாலித்தனமாகவும் லாபகரமானதாகவும் இருக்கும். இதுநாள் வரை முதலீடு ஏதும் செய்யாதவர்கள் இனியாவது தங்கள் முதலீட்டைத் தொடங்குவது அவசியம்!

(நிறைவு பெற்றது)

முதல் வேலையாக இன்ஷூரன்ஸ்..!

முதலீட்டை ஆரம்பிக்கும் முன், முதல் வேலையாக காப்பீடு பாலிசிகளை எடுப்பது அவசியம் என்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில், அவரின் ஆண்டு வருமானத்தைப்போல் சுமார் 10 - 15 மடங்கு தொகைக்கு, குறைவான பிரீமியத் தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளானை எடுத்துக்கொள்ள வேண்டும். கணவன் - மனைவி இருவரும் வேலைபார்க்கும்பட்சத்தில் அல்லது வருமானம் ஈட்டும்பட்சத்தில் இருவருக்கும் தனித் தனியாக டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுமார் ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரைக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருந்தால், அவர் களுக்கு தனிப் பாலிசி எடுத்துக்கொள்ளவும். மற்றவர் களுக்கு உங்களின் வாய்ப்பு வசதியைப் பொறுத்து தனி பாலிசி அல்லது ஃப்ளோட்டர் பாலிசியை எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகே முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்.