Published:Updated:

வருமான வரிவிதிப்பு முதலீட்டின் லாபத்தை எப்படிப் பாதிக்கும்?

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

முதலீடு

வருமான வரிவிதிப்பு முதலீட்டின் லாபத்தை எப்படிப் பாதிக்கும்?

முதலீடு

Published:Updated:
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `வரிவிதிப்பு மற்றும் முதலீடுகளில் அதன் தாக்கம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்கி பங்குச் சந்தை வரை பல்வேறு முதலீடுகளுக்கு வருமான வரி எப்படி விதிக்கப்படுகிறது என்பதை ஜீவன் கோஷி விளக்கிச் சொன்னார்.

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

‘‘முதலீட்டின் லாபத்தை வருமான வரியும் பணவீக்க விகிதமும் விழுங்கிவிடுகின்றன. ஒரு முதலீட்டின் மூலம் 9% வருமானம் கிடைக்கிறது. அதற்கு வருமான வரி 30% கட்டினால் வருமானம் 6 சதவிகிதமாகக் குறைந்துவிடும். இதில் பணவீக்க விகிதம் 5% கழித்துவிட்டால் உண்மையில் கிடைத்திருக்கும் வருமானம் 1% மட்டுமே. எனவே, வரி அணுகூலம் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வது கட்டாயம்” என்று ஜீவன் கோஷி குறிப்பிட்டார்.

வரிச் சேமிப்பு அளிக்கும் திட்டங்களான இ.எல்.எஸ்.எஸ் (ஈக்விட்டி லிங்க் சேவிங்ஸ் ஸ்கீம்) மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப் (பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்) ஆகியவற்றில் எது வரிக்கு பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும் என்கிற கேள்விக்கு ஏ.கே.நாராயண் விரிவாக விளக்கம் அளித்தார். ‘‘ரிஸ்க் எடுக்கக் கூடியவர்களுக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு பி.பி.எஃப் முதலீடு ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில், பி.பி.எஃப்பில் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% வரிக் கட்ட வேண்டும் என்றாலும், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் தான் வரிக்குப் பிந்தைய நிலையில் அதிக ஆதாயமாக இருக்கும்’’ என்றார்.

முதலீட்டாளர்களின் வருமான வரி குறித்த தங்களின் சந்தேகங்களுக்கு, நிபுணர்கள் விளக்கமாகப் பதில் அளிக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை வீடியோவில் காண https://bit.ly/3kVm6Dj

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism