Published:Updated:

நிதிச் சுதந்திரத்தை நீங்கள் விரைவில் அடையும் வழி!

வ.நாகப்பன், பர்வீன் சுல்தானா
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், பர்வீன் சுல்தானா

முதலீடு

நிதிச் சுதந்திரத்தை நீங்கள் விரைவில் அடையும் வழி!

முதலீடு

Published:Updated:
வ.நாகப்பன், பர்வீன் சுல்தானா
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், பர்வீன் சுல்தானா

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `நிதிச் சுதந்திரம் அடையும் வழிகள்..!’ என்ற நிகழ்ச்சியை நடத்தின. இதில் பேராசிரியர், முனைவர் பர்வீன் சுல்தானா, நிதி ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் மற்றும் தமிழ்நாடு பிரிவு தலைவர் கே.சுவாமிநாதன் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

எஸ்.குருராஜ் பேசும்போது, ‘‘ஓய்வுக் காலத்தில் பிள்ளைகளைச் சார்ந்திருக்கக் கூடாது எனில், ஓய்வுக்காலத்துக்கென தனியே இளமையிலேயே முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். நிதிச் சுதந்திரம் விரைந்து அடைய வேண்டும் எனில், முதலீட்டைச் சரியாக மேற்கொள்வது அவசியம். அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கைகொடுக்கிறது” என்றார்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

“இளம் வயதில் ஆரம்பித்தால்தான் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க முடியும். ஏதாவது முதலீட்டைத் தவறாகச் செய்து விட்டாலோ, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் இழப்பு ஏற்பட்டாலோ சரிசெய்ய முடியும். ரிஸ்க் என்பது வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் இருக்கிறது. பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க் இருந்தாலும், அதைக் குறைக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியைப் பெறும்போது முதலீட்டு ரிஸ்க்குகளைக் குறைக்க முடியும்” என்றார் வ.நாகப்பன்.

 பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றும் போது, “நம்மில் பலர் கையில் பணமிருந்தால் அதைக்கொண்டு பல தேவையில்லாத பொருள்களை வாங்கி வீட்டைக் குப்பைக் கூளமாக மாற்றிவிடுகிறார்கள். கையில் மொத்தப் பணம் வைத்திருந்து, அதைச் செலவு செய்யாமல் இருப்பதற்கு பலம் தேவை. யாரிடம் பணம் அதிகம் இருந்தும், அதைச் சரியாகச் சேமிக்கிறார்களோ, அவர்களே விரைவில் நிதிச் சுதந்திரம் அடைவார்கள். சொத்து சேர்ப்பது முக்கியம் இல்லை. இதை முறையாக பராமரிக்க பணம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அந்தச் சொத்து பாழடைந்து வீணாகிவிடும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் காண

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism