Published:Updated:

கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப் பட்டா வாங்குவது எப்படி? வழிகாட்டுகிறார் ஆலோசகர்...

Q & A - கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

இசக்கி முத்து, வேளச்சேரி, சென்னை

நான் திருநெல்வேலி அருகே சீதற்பநல்லூரில் லே அவுட் ஒன்றில் மனை வாங்கினேன். அந்த இடத்துக்கு லே அவுட் போட்டவர்களே கூட்டுப் பட்டா வாங்கித் தந்தார்கள். அந்த இடத்துக்கு நான் இப்போது தனிப் பட்டா பெறுவது எப்படி?

ஜீவா, வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக், சென்னை

“சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் தனிப் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் தங்களின் கிரயப் பத்திரம், தாய் பத்திரம் தற்போதைய பட்டா, வில்லங்கச் சான்று, மனுதாரரின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். தற்போது பெரும்பாலான தாசில்தார் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் ஆவணங்களைச் சரி பார்த்தபின் ரூ.100 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மனுவை ஆராய்ந்து தேவைப்பட்டால் நேரில் மனையைப் பார்வையிட சர்வேயர் வருவார். அதன்பின் தனிப் பட்டா வழங்குவார்கள்.”

ராம்பாபு லலிதா, இ-மெயில் மூலம்

என் வயது 39. என் முதலீட்டுக் காலம் 7 முதல் 10 ஆண்டுகள். நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது பங்குச் சந்தையா அல்லது மியூச்சுவல் ஃபண்டா?

வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்

“நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது பங்குச் சந்தையே; எனினும், அதற்கான நேரமும் புரிந்துகொள்ளலும், ரிஸ்க் எடுக்கும் மனோபாவமும் குறைவு என்பதால், எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே நல்லது.’’

ஜீவா, வ.நாகப்பன், தி.ரா.அருள்ராஜன், எஸ்.வெங்கட்ராமன், பி.ராமசாமி
ஜீவா, வ.நாகப்பன், தி.ரா.அருள்ராஜன், எஸ்.வெங்கட்ராமன், பி.ராமசாமி

வ.நாகப்பன்கே.குமார், நாகர்கோவில்

என் வயது 30. முதலீட்டுக்கு புதியவன். என்னிடம் ரூ.5 லட்சம் இருக்கிறது. முதலீட்டுக் காலம் 8 ஆண்டு. நான் எனக்கு ஏற்ற பங்குச் சந்தை முதலீட்டுக் கலவையை (ஈக்விட்டி போர்ட் ஃபோலியோ) எப்படி உருவாக்குவது என விளக்கிச் சொல்லவும்.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தக ஆலோசகர், Ectra.in

“உங்கள் பணத்தை 80% லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். அடுத்து, 15% மிட்கேப் ஃபண்டிலும், 5% ஸ்மால்கேப் ஃபண்டிலும் முதலீடு செய்வது நல்லது. நிறுவனப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதாக இருந்தால், முறையாகப் பயிற்சி பெற்று, நிறுவனங்களை ஆய்வு செய்து தேர்வுசெய்து, தொடர்ந்து கண்காணித்து முதலீடு செய்ய வேண்டும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் போதிய அனுபவம் பெற்றபின் நேரடிப் பங்கு முதலீட்டுக்கு நீங்கள் வரலாம்.”

பாலசுந்தரம், கொடைக்கானல்

ஐ.பி.ஓ முதலீடு நீண்ட காலத்துக்கு ஏற்றதா?

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

‘‘தற்போதைய புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) முற்றிலும் குறுகியகால லாபத்தைக் கணக்கில்கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இது முதலீடல்ல. வர்த்தகம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐ.பி.ஓ பெரிய வெற்றி பெற்றால், முதலீட்டாளர் களுக்கு பங்கு ஒதுக்கீடு வாய்ப்பு குறைவு. அப்படியே கிடைத்தாலும் பங்கு எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஐ.பி.ஓ அதிக வரவேற்பைப் பெறவில்லை எனில், லாபம் மிகக் குறைவாக இருக்கக்கூடும்; பல சமயம், நஷ்டம்கூட உண்டாகும். எனவே, ஐ.பி.ஓ-வில் சிறு முதலீட்டாளருக்கு நன்மை அதிகம் இல்லை.

மேலும், கடந்த காலத்தில் நிறைய ஐ.பி.ஓ-க்கள் தோல்வி அடைந்துள்ளன. முதலில், நன்றாக இருந்த ஐ.பி.ஓ-க்கள் கூட பின்னாளில் சரிவைச் சந்தித்துள்ளன. இவற்றால் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை அடைந்திருக் கிறார்கள். ஆனாலும், பலர் அந்தப் பங்குகளை வந்த விலைக்கு விற்று தங்கள் இழப்பைக் குறைத்துக் கொள்வதில்லை. பங்கின் விலை பின்னாளில் உயரும் என்னும் எண்ணத்தில் வைத்திருப்பார்கள். ஆனால், பல நேரங்களில் அது நடக்காமல், இறுதியில் அவை பயனற்ற பங்குகளாக மாறிவிடும். நமது நாட்டின் பங்குச் சந்தை சரித்திரம் இந்த மாதிரி புகட்டிய பாடங்கள் ஏராளம். மக்களின் பேராசையும், அளவு மிகுந்த தன்(மூட)னம்பிக்கையும் தான் இதற்குக் காரணம். இதை முதலீட்டாளர்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நீண்டகாலநோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய் பவர்கள் ஐ.பி.ஓ-க்களைத் தவிர்ப்பதே நல்லது.”

எம்.கண்ணன், மன்னார்குடி

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுக்கும் அஸெட் அலொகேஷன் ஃபண்டுக்கும் என்ன வித்தியாசம், இவை யாருக்கு ஏற்றது?

பி.ராமசாமி, ஆலோசகர், Easyinvest.co.in

“பங்குச் சந்தையில் ஏற்றத் தாழ்வு நிகழும்போது ஒரே பங்கின் விலை கேஷ் மார்க் கெட்டிலும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டிலும் வேறுபடு கிறது. இந்த வேறுபாடுகளைக் கண்டறிந்து, அவற்றில் முதலீடு செய்து ஆதாயம் அடைவதுதான் ஆர்பிட்ராஜ் ஃபண்டின் நோக்கம். உதாரணமாக, ஒரு பங்கின் விலை கேஷ் மார்க்கெட்டில் ரூ.100 மற்றும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் ரூ.110 என்று இருந்தால், கேஷ் மார்க் கெட்டில் வாங்கிவிட்டு, ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் விற்றுவிட்டால், ரூ.10 லாபம் எளிதாகக் கிடைக்கும். இதுதான் ஆர்பிட்ராஜ் ஃபண்டின் யுக்தி.

அஸெட் அலொகேஷன் ஃபண்ட் என்பது பங்குச் சந்தை, கடன் பத்திரம் மற்றும் தங்கம் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்வது. ஒரே முதலீட்டில் இந்த மூன்று விதமான முதலீட்டையும் மேற்கொள்ள முடிவதால், இதை அஸெட் அலொகேஷன் ஃபண்ட் என்று அழைக் கிறார்கள். சந்தை ஏற்ற இறக்கத்தில், இந்த மூன்று சொத்துப் பிரிவுகளின் விகிதம் மாறும். அதை சீரமைத்து (re-balance) முதலீட்டை வளர்ப்பதுதான் அஸெட் அலொகேஷன் ஃபண்டின் சிறப்பாகும்.

பங்குச் சந்தையில் மிகக் கவனமாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் முதலீடு செய்ய லாம். லாபம் குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால், ரிஸ்க் குறைவு. முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால், இதற்கு ஈக்விட்டி ஃபண்டுக்கு உரிய வரி பொருந்தும்.

‘என்னால் பலவித முதலீடு களை மேற்பார்வை செய்ய முடியவில்லை’, அல்லது ‘அடிக்கடி முதலீட்டை மாற்றி அமைக்க முடியவில்லை’ என்பவர்கள், அஸெட் அலொகேஷன் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதற்குக் கடன் ஃபண்டுகளுக்குரிய வரி விதிப்பு பொருந்தும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு