Published:Updated:

சம்பளம் ரூ.30,000 டேர்ம் இன்ஷூரன்ஸ் எவ்வளவு எடுக்கலாம்? வழிகாட்டுகிறார் நிபுணர்

Q & A கேள்வி பதில்

பிரீமியம் ஸ்டோரி

கா.சந்திரன், இ-மெயில் மூலம்

வருமான வரி கட்டுவதைக் குறைக்க மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாமா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்

‘‘மியூச்சுவல் ஃபண்டில் வருமான வரியைச் சேமிக்க எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஏற்றதாக பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Savings Scheme) ஃபண்ட் உள்ளது. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும். எஸ்.ஐ.பி முறையிலும் குறைந்தபட்ச முதலீடு இதுதான். இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். வரிச் சலுகை கிடைப்பதால், இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தைக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் நன்கு செயல்படும் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களை உங்களுடைய நிதி ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.’’

சா.ஶ்ரீதர், அம்மாபேட்டை, தஞ்சாவூர்

சில கடன் சார்ந்த ஃபண்டுகள் நெகட்டிவ் வருமானம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

‘‘கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் இரண்டு வகைகளில் லாபம் சம்பாதிக் கின்றன. ஒன்று, கடன் பத்திரங்களிலிருந்து வரும் வட்டி; இரண்டாவது, கடன் பத்திரங்களின் சந்தை மதிப்பு. சில சமயங்களில் (உதாரண மாக, ரிசர்வ் வங்கி மத்திய வட்டி விகிதத்தை உயர்த்தும் போது), இந்தச் சந்தை மதிப்பானது கீழிறங்கும். அப்போது, ஒரு கடன் ஃபண்டின் முதலீட்டுத் தொகுப்பின் மதிப்பும் கீழிறங்கும். இத்தகைய சமயங் களில் நஷ்டம் நிகழக்கூடும். ஒரு ஃபண்டின் கடன் பத்திரங்களின் கால வரம்பு அதிகமாக இருந்தால், இந்த நஷ்டங்கள் அதிகமாக இருக்கும். ஆகையால், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது குறுகியகால கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் முதலீட்டு ரிஸ்க்கைக் கட்டுப்படுத்தும்.’’

த.முத்துகிருஷ்ணன், ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஆ.ஆறுமுக நயினார், என்.சத்யமூர்த்தி,  ஶ்ரீதேவி கணேஷ்
த.முத்துகிருஷ்ணன், ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஆ.ஆறுமுக நயினார், என்.சத்யமூர்த்தி, ஶ்ரீதேவி கணேஷ்

ரோஸ் மேரி, நாசரேத்

நாங்கள் வேலை பார்க்கும் தம்பதிகள். நானும் என் கணவரும் சேர்ந்து பணம் போட்டு ஒரு வீட்டு மனையை வாங்கப் போகிறோம். எங்கள் இருவரின் பெயரில் அந்த இடத்தைப் பதிவு செய்ய முடியுமா, இதற்கான நடைமுறை என்ன?

ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத் துறை

‘‘முடியும். இதற்கான நடை எளிதானது. நீங்கள் பத்திரம் எழுதும்போது, உங்கள் இருவர் பெயரையும் வாங்கு பவர்கள் (Purchasers) என்று பத்திரப்பதிவு செய்யுங்கள். நீங்கள் இருவரும் கூட்டாக அதாவது, இணைந்து வாங்கிய வர்களாக (Joint Purchasers) ஆகிவிடுவீர்கள். தேவைப் பட்டால் இந்தச் சொத்தை வாங்க யார் எவ்வளவு பணம் போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பத்திரத்தில் எழுதிக் கொள்ளலாம்.’’

கார்த்திக், நாமக்கல்

நான் இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கிறேன். என் வயது 25. மாதச் சம்பளம் ரூ.30,000. நான் எவ்வளவு தொகைக்கு டேர்ம் பிளான் எடுக்க வேண்டும், பிரீமியம் தோராயமாக ஆண்டுக்கு எவ்வளவு இருக்கும்?

என்.சத்யமூர்த்தி, சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர், Ruwise.in

‘‘டேர்ம் பிளான் எடுக்க இதுவே சரியான வயது. ஒருவர் எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை வருமான மாற்று (Income Replacement) முறை அல்லது தேவை அடிப்படையிலான (Need Based) முறையில் கணக்கிடப் படும். வருமான மாற்று முறையில் ஒரு தனிநபரின் எதிர்கால ஆண்டு வருமானத் தின் அடிப்படையில் கவரேஜ் தொகை நிர்ணயிக்கப்படும். தேவை அடிப்படையிலான முறையில் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகள் மற்றும் நிலுவையிலுள்ள கடன்கள், பிள்ளைகளுக்கான உயர்கல்விக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படியில் கவரேஜ் தொகை முடிவு செய்யப்படும். மூன்றாவது, பொதுவான விதிமுறை (Thumb Rule), கவரேஜ் தொகை யானது வருமானம் ஈட்டும் நபரின் ஆண்டு வருமானத்தை போல் 10 முதல் 15 மடங்காக இருக்க வேண்டும். எந்த முறையில் கணக்கிட்டாலும் உங்கள் வயதுக்கு நீங்கள் குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் ரூபாய்க்கு இப்போது ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வருமானம், கடன், குடும்பப் பொறுப்புகள் (பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணம்) அதிகரிக் கும்போது டேர்ம் பிளான் கவரேஜை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

ரூ. 50 லட்சம் கவரேஜ், 25 ஆண்டுகள் பிரீமியம் கட்டும் டேர்ம் பிளான் எனில், ஆண்டுக்கு ரூ.5,500 முதல் ரூ.6,500 பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். ஏஜென்ட் தவிர்த்து காப்பீட்டு நிறுவனத் தின் இணையதளத்தின் மூலம் பாலிசி எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும். மேக்ஸ் லைஃப், பஜாஜ், டாடா ஏ.ஐ.ஏ, ஹெச்.டி.எஃப்.சி போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் அதிகமாக இருக்கிறது.’’

பொன்குமார், திருச்சி- 2

என் வயது 28. மாத வருமானம் ரூ.60,000. என்னால் மாதம் ரூ.25,000 முதலீடு செய்ய முடியும். இந்தத் தொகை எனக்கு 15 ஆண்டுகள் கழித்துதான் தேவை. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கவும் தயார். நான் நேரடியாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யலாமா அல்லது அந்த வகை ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

ஶ்ரீதேவி கணேஷ், நிதி ஆலோசகர், Financialplanners.co.in

‘‘உங்களின் வருமான நிலை மற்றும் இதர வருமான ஆதாரங்களுக்கேற்ப நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்து இலக்கை நிறைவேற்றுவது முக்கியம். அந்த வகையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்கு களில் நேரடியாக முதலீடு செய்வது அதிக ரிஸ்க் என்ப தால், அவற்றைத் தவிர்த்து விடலாம். நீங்கள் தெரிவித் திருக்கும் விவரங்களின் அடிப்படையில், மாதம் தோறும் ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களில் ரூ.10,000, லார்ஜ் கேப் ஃபண்டுகளில் ரூ.5,000, மிட்கேப் ஃபண்டுகளில் ரூ.10,000 முதலீடு செய்யலாம். முதலீடு ஆரம்பித்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களின் முதலீட்டுக் கலவையை மாற்றி அமைப்பது குறித்து ஆராய வேண்டும்.

உங்கள் முதலீட்டுக் கலவை யில் இருக்கும் ஃபிக்ஸட் இன்கம் திட்டங்கள் (கடன் சந்தை சார்ந்த திட்டங்கள்), உங்கள் போர்ட்ஃபோலி யோவின் வருமானத்துக்கு நிலைத்தன்மை அளிக்கும். உங்கள் பணத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்யவும் உதவும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு