Published:Updated:

மருத்துவக் காப்பீடு... ஆயுஷ் சிகிச்சைகளுக்கு வழங்கப்படுகிறதா..? விளக்கும் ஆலோசகர்...

ஆயுஷ் சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
ஆயுஷ் சிகிச்சை

Q & A கேள்வி - பதில்

மருத்துவக் காப்பீடு... ஆயுஷ் சிகிச்சைகளுக்கு வழங்கப்படுகிறதா..? விளக்கும் ஆலோசகர்...

Q & A கேள்வி - பதில்

Published:Updated:
ஆயுஷ் சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
ஆயுஷ் சிகிச்சை

ஆ.பாண்டியராஜ், சேலம்.

மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் ஆயுஷ் சிகிச்சைகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறதா?

மருத்துவக் காப்பீடு... ஆயுஷ் சிகிச்சைகளுக்கு வழங்கப்படுகிறதா..? விளக்கும் ஆலோசகர்...

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்பதைக் குறிக்கும். இதில் எந்த முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன. எந்த முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி, முன்அனுமதி பெற்று சிகிச்சைபெறும் பட்சத்தில் கிடைக்கும். இப்போதெல்லாம் புது திட்டம் அறிமுகப்படுத்தும்போதே ஆயுஷ் முறைகளில் சிகிச்சை பெறலாம் என்பதைச் சொல்லிவிடுகிறார்கள்.”

கே.சாந்தினி, இ-மெயில் மூலம்.

நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர். முதலீடு செய்ய குறைந்தபட்சம் எவ்வளவு தொகை வேண்டும்? மேலும் என்னென்ன ஆவணங்கள் வேண்டும் எனச் சொல்லவும்?

அனுபிரியா பட், பர்சனல் ஃபைனான்ஸ் பிளானர், http://www.aniram.in/

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்க, ஒரு முறை முதலீடு எனில், ரூ.5,000 தேவைப்படும். இதன் பிறகு கூடுதலாக ரூ.1,000 என்பது போல் முதலீடு செய்து வரலாம். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்கிறபோது மாதம் ரூ.500-லிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். சில நிறுவனங்கள் நடத்தும் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையின்மூலம் ரூ.100கூட முதலீடு செய்ய முடியும். கே.ஒய்.சி படிவத்துடன் மார்பளவு புகைப்படம் - 1, சுய கையொப்பமிட்ட ஆதார் மற்றும் பான் அட்டை நகல், முதலீட்டாளரின் பெயர் அச்சிட்ட காசோலை ஆகிய வற்றை இணைத்துக் கொடுக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள மியூச்சுவல் ஏஜென்ட் மூலம் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.”

க.முரளிதரன், அனுபிரியா பட்,  வி.கோபால கிருஷ்ணன், கே.கார்த்திக் ராஜா, ஏ.அருணன், ஶ்ரீகாந்த் மீனாட்சி
க.முரளிதரன், அனுபிரியா பட், வி.கோபால கிருஷ்ணன், கே.கார்த்திக் ராஜா, ஏ.அருணன், ஶ்ரீகாந்த் மீனாட்சி

ஏ.கார்த்திகேயன், சாத்தூர்.

பங்குச் சந்தை முதலீட்டில் பிராபிட் புக்கிங் என்றால் என்ன, அதில் எப்போது ஈடுபட வேண்டும்?

வி.கோபால கிருஷ்ணன், நிறுவனர், www.moneyavenues.in

“பங்குச் சந்தை வர்த்த கத்தில் பிராபிட் புக்கிங் எனப்படுவது ஒரு வகையான யுக்தி. பங்குகளை வர்த்தகம் செய்ய அல்லது முதலீட்டு நோக்கில் வாங்கிய பின் அந்தப் பங்கின் விலையில் எதிர்பார்த்த அல்லது கணிசமான ஏற்றம் இருந்தால், அந்தப் பங்கை முழுவது மாகவோ, ஒரு பகுதியாகவோ விற்று லாபத்தை வெளியே எடுப்பதுதான் ‘பிராபிட் புக்கிங்.’ பங்கு வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை வாங்கிய பின் ஏறும்போது, அதன் மதிப்பு உயரும். ஆனால், அந்த மதிப்பானது, பங்கை விற்று, லாபம் நம் கைக்கு வரும்போதுதான் நிஜமான மதிப்பாக மாறும். அந்த அடிப்படையில்தான் ‘பிராபிட் புக்கிங்’ எனும் யுக்தி பங்கு வர்த்தகம் மற்றும் பங்கு முதலீட்டில் நமக்குக் கைகொடுக்கும்.”

இ.பிரகாஷ், புதுவண்ணாரப்பேட்டை, சென்னை - 600 081.

நான் ஐந்து வருடம் முன்பு யெஸ் பேங்க் பங்குகள் 256 வாங்கினேன். அதை இப்போது விற்கத் தடை ஏதும் இருக்கிறதா?

கே.கார்த்திக் ராஜா, செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட், Rupeedesk.in

“யெஸ் பேங்கின் பங்குகள் உங்களிடம் 100 என்கிற எண்ணிக்கைக்கு மேல் இருப்பதால், அவற்றுக்கு மூன்று ஆண்டுகள் லாக் இன் உள்ளது. அவற்றை நீங்கள் விற்க முடியாது. 2020 மார்ச் 13-ம் தேதியில் உங்களிடம் இருக்கும் பங்குகளில் 25 சதவிகிதத்தை மட்டுமே விற்க முடியும். ஒருவரிடம் 100 பங்குகளுக்கும் குறைவாக இருந்தால், அவர் அனைத்துப் பங்குகளையும் விற்று பணமாக்க முடியும். 100 பங்குகள் இருந்தால், அவற்றில் 75 பங்குகளை மூன்று ஆண்டு களுக்கு விற்க முடியாது. அதே நேரத்தில் 99 பங்குகள் இருந்தால், அனைத்துப் பங்கு களையும் விற்றுப் பணமாக்க முடியும்.

2020 மார்ச் 16, அதன் பிறகு புதிதாக வாங்கிய பங்குகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. 2020, மார்ச் 13-ம் தேதிக்கு முன்னர் நீங்கள் வாங்கிய பங்குகளுக்குத்தான் இந்த 75% கட்டுப்பாடு உண்டு.”

வி. சுந்தரகுமாரி, படப்பை.

ஒரு காலத்தில் மக்கள் ஒரு கிரவுண்ட் (5.5 சென்ட்- 2,400 சதுர அடி) வாங்கினார்கள். அப்புறம் அரை கிரவுண்ட் (2.75 சென்ட் - 1,200 ச.அடி) மனை வாங்கினார்கள். இப்போது அப்ரூவல் லே அவுட்டில் (சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி) குறைந்தபட்சம் எவ்வளவு சதுர அடி மனை வாங்க முடியும்?

ஏ.அருணன், சொத்து ஆலோசகர்

“தற்போது அங்கீகரிக்கப் பட்ட மனைப் பிரிவில் (CMDA & DTCP) குறைந்த வருவாய் பிரிவினரும் (EWS - ECONOMICALLY WEAKER SECTION) வாங்கக்கூடிய வகையில் 495 மற்றும் 600 சதுர அடி அளவிலான மனைகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன.”

எஸ்.பாலாஜி, முகநூல் மூலம்.

நான் மாதச் சம்பளம் வாங்கு கிறேன். முதல் வீட்டுக் கடனுக்கு 6.8% வட்டி கட்டி வருகிறேன். வரிச் சலுகை அசல் மற்றும் வட்டிக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் கடனை விரைந்து முடிப்பதா, இல்லை அதிகப்படி யான தொகையை முதலீடு செய்வதா என்பதில் குழப்பம் இருக்கிறது. நீண்டகாலத்தில் வரிச் சலுகையைவிட அதிக வருமானம் தரும் ஏதாவது திட்டம் இருக்கிறதா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“முதல் வீட்டுக்கு ஓரளவுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் வரிச் சலுகையும் கிடைக்கும்போது, இந்தக் கடனை அவசரமாக அடைக்கத் தேவையில்லை. உங்கள் வருமானத்தில் அதிகப்படியான தொகை இருக்குமென்றால், அதைத் தொலைநோக்குடன் முதலீடு செய்வதே சரியாக இருக்கும்.

நீண்டகால அடிப்படை யில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளிலிருந்து அதிக லாபம் (சுமார் 12%) வரும் என்று எதிர்பார்க்கலாம். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் அதிகமுள்ள ஒரு தொகுப்பில் முதலீடு செய்துவருவதே நல்ல திட்டமாக இருக்கும்.”