Published:Updated:

குறைவான சிபில் ஸ்கோர்... வீட்டுக் கடன் வாங்க வாய்ப்புள்ளதா..? வழிகாட்டுகிறார் நிபுணர்...

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

Q & A கேள்வி - பதில்

குறைவான சிபில் ஸ்கோர்... வீட்டுக் கடன் வாங்க வாய்ப்புள்ளதா..? வழிகாட்டுகிறார் நிபுணர்...

Q & A கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

அருண் ராஜ், இ-மெயில் மூலம்

என் சிபில் ஸ்கோர் மிகவும் குறைவாக உள்ளது. எனக்கு வீட்டுக் கடன் கிடைக்க ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?

அதில் ஷெட்டி, சி.இ.ஓ, BankBazaar.com

“வீட்டுக் கடன் வழங்க கிரெடிட் ஸ்கோர் மட்டுமே முக்கியமான காரணி அல்ல. ஒருவரின் தற்போதைய சம்பளம் அல்லது வருமான ஆதாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உங்களுக்குக் குறைவான கிரெடிட் ரேட்டிங் இருந்தால், உங்களின் சம்பள உயர்வுக்கான ஆதாரம், போனஸ், இதர வருமான ஆதாரங்களைத் தந்தால், கடன் கிடைக்க வாய்ப்புண்டு.

அதேநேரத்தில், கிரெடிட் கார்டு கடன், நுகர்வோர் கடன் மற்றும் வேறு ஏதாவது கடன்கள் இருந்தால், அவற்றை அடைத்துவிடவும். அப்படிச் செய்யும்பட்சத்தில் உங்களுக்கான கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் அதிகரித்துவிடும். எந்த வங்கியில் நீண்ட காலமாகச் சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கியை வீட்டுக் கடனுக்கு அணுகினால், கடன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்களை அணுகினால், வங்கிகளைவிட சுலபமாக வீட்டுக் கடன் கிடைக்கக்கூடும். அதேநேரத்தில், வங்கிகளை விட இந்த நிறுவனங்களில் சற்று கூடுதல் வட்டி இருக்கும். கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளை என ஜாயின்ட் கடன் வாங்கும்போது கடன் கிடைக்கக் கூடுதல் வாய்ப்புள்ளது. உங்கள் மனைவிக்குக் கூடுதல் கிரெடிட் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில் ஜாயின்ட் கடனுக்கு விண்ணப்பித்தால் வீட்டுக் கடன் கிடைக்கும்.”

பாலசுப்ரமணியம், இ-மெயில்

எனது வயது 52, 2018 செப்டம்பரில் வேலை போனது. என்னுடைய வருங்கால வைப்பு நிதி முழுவதும் எடுத்துவிட்டேன். நான் தற்போது மீதமுள்ள ஓய்வூதியப் பணம் முழுவதையும் எடுக்க முடியுமா, அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆர்.கணேஷ், பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்)

“உங்கள் மொத்த சேவைக் காலத்தில் 10 வருடங்களுக்கு மேல் ஓய்வூதிய சந்தா செலுத்தப்பட்டிருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவராகி இருப்பீர்கள். இந்தச் சூழ்நிலையில், ஓய்வூதியத் தொகையை முழுமையாகத் ‘திரும்பப் பெறும்’ வசதி சட்டத்தில் இடம் பெற வில்லை. உங்களின் மொத்த ஓய்வூதிய சந்தா செலுத்தப் பட்ட நிலுவை சேவைக்காலம் 10 வருடத்துக்குக் குறைவாக இருப்பின் மற்றும் தற்போது ‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்’ அமலில் இருக்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் பணியில் இல்லாதபட்சத்தில், நீங்கள் நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையை முழுமையாகத் திரும்பப் பெறலாம்.”

அதில் ஷெட்டி, ஆர்.கணேஷ், வி.தியாகராஜன்,  ச.ராமலிங்கம்
அதில் ஷெட்டி, ஆர்.கணேஷ், வி.தியாகராஜன், ச.ராமலிங்கம்

சா.ஶ்ரீதர், அம்மாபேட்டை, தஞ்சாவூர்.

P2P முதலீடு என்றால் என்ன, இதிலுள்ள அபாயங்கள் என்னென்ன, சாதாரண முதலீட் டாளர்களுக்கு ஏற்றதா?

வி.தியாகராஜன், ஆடிட்டர்

“பி2பி லெண்டிங் ( Peer to Peer Lending) என்பது கடன் கொடுக்கல், வாங்கல்தான். ஆனால், தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றம் கண்டிருக்கிறது.அதாவது, இணையதளம் மூலம் கடன் வாங்குவது. கடன் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கையைக் கையாள் வதற்கு என்றே சில இணைய தளங்கள் உள்ளன. அந்தத் தளங்களில் நீங்கள் யார், உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வேண்டும் என்பதைத் தெரிவித்தால், பணம் இருக்கும் தனிநபர்கள் உங்களுடைய தகுதியை வைத்துக் கடன் கொடுக்கலாம். இதுதான் பி2பி லெண்டிங் ஆகும்.

வங்கியில் கடன் வாங்க முடியாத நிலை, என்னிடம் அடமானம் வைக்க சொத்து கள் இல்லை, உடனடி யாகக் கடன் வேண்டும் என்னும் பட்சத்தில் இது போன்ற இணைய தளங்களை நாடலாம்.

இப்படி வாங்கும் கடனுக்கான வட்டி மிக அதிகம் என்பதால், பலரும் இந்த முறையின் மூலம் கடன் தருகிறார்கள்.

கடன் வாங்குபவர் களுக்கும் தருபவர்களுக்கும் இடையே பாலமாக மட்டுமே இது போன்ற நிறுவனங்கள் இருக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் வங்கிபோல செயல்பட்டு பணத்தைக் கையாளக் கூடாது. நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் நடக்க வேண்டும். வட்டி தொடர்பாக எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்க கூடாது. 

இத்தகைய நிறுவனங்களை நெறிமுறை செய்வதற்கு ரிசர்வ் வங்கி அக்டோபர் 2017-ம் ஆண்டு நெறிமுறை களை வகுத்துள்ளது. இத்தகைய நிறுவனங்கள் மூலமாகக் கடன் பெறுபவர் களின் தகவல்களை சிபில் போன்ற கடன் தகவல் அமைப்பிடம் ஒழுங்காகத் தெரிவிக்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும், இத்தகைய நிறுவனங்கள் / இணைய தளங்களின் மூலம் கடன் கொடுத்தவர்கள் அதாவது முதலீடு செய்தவர்கள், ஏதேனும் நஷ்டத்தைச் சந்தித்தார்களா அல்லது பாதிப்புக்கு உள்ளானார்களா என்பதைப் பற்றி முழு விவரங்கள் இல்லை. எனவே, எச்சரிக்கையுடன் செயல் படுவது அவசியம்.”

சந்திரிகா, இ-மெயில் மூலம்

என் மகளின் வயது 11. அவளின் திருமணத்துக்கு நீண்டகால நோக்கில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் குழப்பமாக உள்ளது. நான் எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

ச.ராமலிங்கம், பார்ட்னர், என்.ஜெ.இந்தியா

‘‘உங்கள் மகள் மேற்படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த பிறகு, கல்யாணம் செய்வீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் முதலீட்டுக் காலமாக 14 - 15 வருடங்கள் இருக்கும்.

சைக்கிள் ஓட்டப் பழகிய பின் ஸ்கூட்டர், 100 சிசி பைக் பிறகு புல்லட் என்று தேர்வு செய்வதுபோல் நீங்கள் முதன்முதலாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முற்படும்போது உங்கள் நலனில் அக்கறையுள்ள அனுபவம் உள்ள சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோ கிப்பாளர் உதவியுடன் தொடங்குவது நலம். உங்கள் முதலீட்டுக் காலவரம்பு, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் ஃபண்டுகளைத் தேர்வு செய்து வழங்குவார்.

2,000 ரூபாயை கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டி லும் 1,500 ரூபாயை யூ.டி.ஐ ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டிலும் 1,500 ரூபாயை எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும் மாதாந்தர எஸ்.ஐ.பி முறையில் 15 வருடங் கள் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள். ஆண்டுக்கு சராசரி வருமானம் (சி.ஏ.ஜி.ஆர்) 12% எனக் கணக்கிட்டால் ரூ.23,79,000 கிடைக்கக்கூடும். ஆண்டுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து வாருங்கள்."

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism