தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

முதலீட்டில் தவிர்க்க வேண்டிய முக்கியமான 7 தவறுகள்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

எஸ்.கிஷோர், நிறுவனர், https://www.shreeconsultants.in

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சரியாகச் செலவு செய்யும் போது அதில் ஒரு பகுதி நிச்சயமாக மிச்சமாகவே செய்கிறது. மிச்சமான இந்தப் பணத்தை நமக்காக உழைக்கச் செய்வதில்தான் நம்முடைய புத்திசாலித்தனம் இருக்கிறது. நிறைய படித்தவர்கள்கூட இந்த விஷயத்தை சரியாகச் செய்யாமல் தப்பும் தவறு மாகச் செய்கிறார்கள். முதலீடு செய்யும்போது நம்மில் பலர் செய்யும் முக்கியமான 7 தவறுகள் என்னென்ன?

எஸ்.கிஷோர் 
நிறுவனர், 
https://www.shreeconsultants.in
எஸ்.கிஷோர் நிறுவனர், https://www.shreeconsultants.in

1. விவரம் தெரிந்தவர்களிடம் முதலீட்டு ஆலோசனை கேட்காமல் இருப்பது...

நம் நாட்டைப் பொறுத்த வரை, முதலீடு செய்வதற்கான ஆலோசனை வேண்டும் எனில், நண்பர்கள், பழகிய வர்கள், உறவினர்களிடம் கேட்கிறார்கள். இது மிகவும் தவறான பழக்கமாகும். வீட்டில் தண்ணீர்க்குழாய் வேலை செய்யவில்லை, மின் விளக்கு எரியவில்லை எனில், பிளம்பரையும் எலெக்ட்ரிஷிய னையும்தான் நாம் தேடிப் போகிறோம். ஆனால், முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கென இருக்கும் நிதி ஆலோசகர்களை நாடாமல், அதுபற்றி எந்த அறிவும் இல்லாதவர்களை அணுகுகிறோம். இதனால் தவறான திட்டங்களில் நாம் முதலீடு செய்து, பெரும் பணத்தை இழக்கிறோம். நிதி ஆலோசனை வேண்டும் எனில், அதற்கென இருக்கும் முதலீட்டு ஆலோசகர்களிடம், அதுவும் நல்ல அனுபவம் கொண்டவர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். அதுதான் சரியாகவும் லாபகரமாகவும் இருக்கும்.

2. முன்யோசனை இல்லாமல் செயல்படுவது...

யார் எந்த முதலீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், காப்பீட்டு பாலிசி யைக் கொண்டு வந்தாலும் வாங்கிவிடுகிறோம். இந்த முதலீடு, காப்பீடு நமக்குத் தேவையா என முன்யோசனை இல்லாமல் செயல்படுகிறோம். விளைவு, பண இழப்பாகும்.

உதாரணமாக, காப்பீடு என்பது நமக்குப் பிறகு, நம் குடும்ப உறுப்பினர் நிதி இழப்பு இல்லாமல் வாழ உதவும் ஓர் ஏற்பாடாகும். இந்தக் காப்பீட்டுத் திட்டங் களைத் தேர்வு செய்யும்போது, அதற்கென இருக்கும் காப்பீட்டு ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்து, குறிப்பிட்ட ஒரு காப்பீட்டுத் திட்டம் உங்களுக்கு சரியாக வருமா என்பதை ஆராய்ந்தறிந்த பின்பே, அதை எடுப்பது நல்லது.

3. சேமிப்பு, முதலீட்டுக்குத் திட்டம் எதுவும் இல்லாமல் செயல் படுவது...

பிள்ளைகளின் உயர் கல்விக்கு இவ்வளவு பணம் தேவை, பிள்ளையின் திருமணத்துக்கு இவ்வளவு பணம் தேவை, அதற்கு இவ்வளவு தொகையை மாதம் தோறும் முதலீடு செய்ய வேண்டும் என எந்த நிதித் திட்டமும் இல்லாமல் பணத்தை ஏதோ ஒரு திட்டத்தில் போட்டு வருவதால், எந்த பிரயோஜன மும் இல்லை. இது தவறான வழியில் மிக வேகமாக ஓடுவதற்கு ஒப்பானதாகும். எந்த வகையான திட்டத் தில் முதலீடு செய்கிறோம், அதில் உள்ள ரிஸ்க் என்ன, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தெளிவு இல்லாமல் பலரும் செயல்பட்டு வருகிறார்கள். இப்படிச் செய்வதை விட்டுவிட்டு, ஏதேதோ திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, சரியான நிதித் திட்டமிடலுடன், காப்பீடுகள், அவசரகால நிதி, சேமிப்பு, முதலீடு எனக் கலந்து செய்வதுதான் சரியாக இருக்கும்.

முதலீட்டில் தவிர்க்க வேண்டிய
முக்கியமான 7 தவறுகள்..!

4. எதையும் முழுமையாகப் புரியாமல் முதலீடு செய்வது...

உலகின் முன்னணி முதலீட்டாளரான 92 வயது வாரன் பஃபெட், தனக்குப் புரியாத முதலீடு எதிலும் பணத்தைப் போட மாட்டார். ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும்முன், அந்த நிறுவனத்தின் தொழில், வணிகம் எல்லாவற்றையும் அலசி ஆராய்வார். அவருக்குப் புரிந்தால் மட்டுமே அதில் முதலீடு செய்வார்.

ஒரு திட்டத்தில் பணம் போடும்முன் அந்தத் திட்டம் நமக்குப் புரிகிற மாதிரி இல்லை எனில், சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போட்டால், எந்த ரிஸ்க்கும் கிடையாது என்கிற எண்ணம் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது. ஆனால், வங்கி திவாலாகும்போது, ஒருவர் டெபாசிட் செய்த பணத்தில் ரூ.5 லட்சத் துக்கு மட்டும்தான் காப்பீடு மூலமான உத்தரவாதம் இருக்கிறது. இது மாதிரி ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்களை ஆராய்ந்தறிந்த பின் முதலீட்டை மேற்கொள்வது நல்லது!

5. நிதி ஆலோசகர்கள் சொல்லும் ஆலோசனைகளை அரைகுறையாகப் பின்பற்றுவது...

சிலர், நிதி ஆலோசகர்களை அணுகி ஆலோசனை பெற்றாலும், அவர் சொல்வதை முழுமையாகப் பின் பற்றாமல், அரைகுறையாகக் கேட்டு நடக்கிறார்கள். மருத்துவர் ஆறு நாள்களுக்கு மாத்திரை தந்தால், இரண்டு நாள்களுக்கு மட்டுமே மாத்திரை வாங்கி சாப்பிடுகிற மாதிரி, நிதி ஆலோசகர்கள் சொல் வதில் ஒன்றிரண்டை மட்டுமே பின்பற்றுகிறோம். இதனால், நமக்குக் கிடைக்க வேண்டிய முழுப் பலன் கிடைக்காமல் போய்விடுகிறது. நிதி ஆலோசகர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டும்.

முதலீட்டில் தவிர்க்க வேண்டிய
முக்கியமான 7 தவறுகள்..!

6. வயதான காலத்தில் பங்கு சார்ந்த திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்வது...

நம் மக்கள் இளம் வயதில் ரிஸ்க் எதுவும் எடுக்காமல், பணத்தை எல்லாம் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் பாதுகாப்பாக வைக்கிறார்கள். அதாவது, ரிஸ்க் எடுக்க வேண்டிய இளம் வயதில் ரிஸ்க் இல்லாத திட்டத்தில் முதலீடு செய் கிறார்கள். ஆனால், ரிஸ்க் எடுக்கக் கூடாத வயதான காலத்தில் ரிஸ்க்கான முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். அதுவும், ‘60 வயதில் வேலை எதுவும் இல்லை. சும்மாதானே இருக்கிறேன்’ என பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிக ரிஸ்க் எடுக்கிறார்கள். இளம் வயதிலேயே பங்குச் சந்தையில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்டில் மறை முகமாகவும் முதலீடு செய்யத் தொடங்குவது அவசியம்.

7. முதலீட்டில் ஒழுங்கு இல்லாமல் இருப்பது...

‘என் மகனுக்கு இப்போது 8 வயது. இன்னும் 10 வருடம் கழித்து அவன் உயர்கல்விக்கு ரூ.20 லட்சம் தேவை என முதலீட்டை ஆரம்பிக்கிறார்கள். 2, 3 ஆண்டு கழித்து உறவினர்கள், நண்பர்கள் வீடு வாங்கிவிட்டார்கள், எனவே, நாமும் வீடு வாங்கிவிடுவோம். பையனின் படிப்புக்குப் பிற்பாடு பணம் சேர்ப்போம் அல்லது கல்விக் கடன் வாங்கி, படிக்க வைப்போம் என்று நினைத்து, அந்தப் பணத்தை முன்பண மாகப் போட்டு கடன் மூலம் வீடு வாங்கிவிடுகிறார்கள்.

வீட்டுக் கடன் வாங்கிய பிறகு, அதற்கான மாதத் தவணை வீட்டு வாடகையைப் போல் இரண்டு மடங்கு கட்ட பலர் விழிபிதுங்கித் தவிக்கிறார்கள். மாதத் தவணையைக் கட்டவே பணம் சரியாக இருக்கும்போது, மாதத் தவணையைக் கட்டுவதே பெரிய விஷயமாகிறது. இதனால் வீட்டை விற்க வேண்டிய நிலைக் குத் தள்ளப்படுகிறார்கள்.

முதலீடு செய்து செல்வம் சேர்த்தவர்கள் எல்லாம் புத்தி சாலிகள் எனச் சொல்ல முடியாது. அவர்கள் எல்லாம் முதலீட்டில் ஓர் ஒழுங்கைப் பின்பற்றியவர்கள்தான். உங்கள் பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும் எனில், முதலீட்டில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மேலே கூறப்பட்ட 7 தவறுகளைத் தவிர்த்தால் நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர்தான்..!