Published:Updated:

“சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாண்டி 12% முதல் 30% வரை வருமானம்..!”

டி.சுந்தரேசன்
பிரீமியம் ஸ்டோரி
டி.சுந்தரேசன்

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

“சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாண்டி 12% முதல் 30% வரை வருமானம்..!”

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

Published:Updated:
டி.சுந்தரேசன்
பிரீமியம் ஸ்டோரி
டி.சுந்தரேசன்

என்னுடைய இளமைக் காலத்தில், எனக்கு பணம் பற்றிய புரிந்துகொள்ளல் குறைவு. அதனால் முதலீடு, சேமிப்பு என்கிற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தேன். ஆனால், இப்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டு, அதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறேன்” என்று சந்தோஷமாகப் பேசுகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த டி.சுந்தரேசன். தான் சூப்பர் முதலீட்டாளராக மாறிய கதையை நமக்கு தெளிவாக எடுத்துச் சொன்னார்.

டி.சுந்தரேசன்
டி.சுந்தரேசன்

“எங்களுடைய குடும்பம் அளவான குடும்பம். நான் புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் உதவி காசாளராகப் பணியாற்றுகிறேன். மனைவி மல்லிகா, புதுச்சேரியில் இருக்கும் மதர் தெரசா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். மகள் பூவிழி 12-ம் வகுப்பு முடித்திருக்கிறார். மகன் திருச்செம்மல் 7-ம் வகுப்பு படிக்கிறான்.

பல வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் நானும் என் மனைவியும் விலைவாசி உயர்வது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி, அவர்களுடைய திருமணத் தேவைகளுக்கு ஆகும் செலவுகள் எனப் பல விஷயங்களைப் பேசினோம். எங்களின் அந்த உரையாடல் பொருளாதார ரீதியாகப் பல முடிவுகளை எடுக்க வைத்தது. ‘இன்று நம் குடும்பத்தை நடத்தத் தேவைப்படும் தொகையைவிட, பல மடங்கு தொகை எதிர்காலத்தில் தேவைப்படும். இப்படியே தொடர்ந்து விலைவாசி அதிகரித்துக் கொண்டிருந்தால், குடும்பத் தேவைகளுக்கான தொகையும் அதிகரிக்கும். அதனால், அதைக் கணக்கிட்டு, நாம் இப்போதிருந்தே முதலீடு செய்ய வேண்டும்’ என நாங்கள் இருவரும் முடிவு செய்தோம்.

நிதி ஆலோசகர் ராஜசேகரன், என் நண்பர் என்பதால், முதலில் அவரைச் சந்தித்து பேசினோம். நீண்டகால பழக்கம் என்பதால், அவரிடம் குடும்பப் பொருளாதார விவரங்களை தயக்கம் இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொன்னேன். எதிர்காலத் தேவைகள் என்ன என்பதையும் விவரமாக விளக்கிச் சொன்னேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து அவர் சொன்ன விஷயங்களும், என்னுடைய எதிர்காலத் தேவைகளுக்கான தொகை எப்படி அந்த முதலீட்டுத் திட்டங் களிலிருந்து கிடைக்கும் என்று அவர் விளக்கிய விதமும் என்னை அந்த முதலீட்டில் முழுமையாக ஈடுபட வைத்தது.

அன்றைய நிலையில் எனக்கு சம்பளம் மிகக் குறைவு. ஆனாலும், அதிலிருந்து 1,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்தேன். இப்போதும் கை நிறையவெல்லாம் சம்பாதிக்கவில்லை. தேவைகளை சமாளிக்கிற அளவுக்கு வருமானம் வந்துகொண்டிருக்கிறது. வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ, அலுவலகத்தில் வாங்கி யிருக்கும் கடனுக்கு என் சம்பளத்தில் பெரும்பகுதியை ஒதுக்கியிருக்கிறேன். மீதமுள்ள தொகை மற்றும் என் மனைவியின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து மாதம் 5,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் சம்பளம் அதிகமாகும்போதெல்லாம், என் முதலீட்டை நான் ரூ.1,000, ரூ.2,000 என அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறேன். குறிப்பிட்டத் தொகை கைகளில் சேரும்போது, மொத்தமாகவும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறேன். தற்போது பிள்ளைகளின் திருமணம் மற்றும் அவர்களின் படிப்புச் செலவுகளுக்காக ஐந்து ஃபண்டுகள் எனப் பிரித்து முதலீடு செய்து வருகிறேன்.

“சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாண்டி 12% முதல் 30% வரை வருமானம்..!”

என்னுடைய கடந்த 12 ஆண்டுக்கால முதலீடுகளில், பங்குச் சந்தை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. அதே போல, எனது முதலீடுகளும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக் கின்றன. ஆனால், தற்போதைய நிலையில் எனது ஃபண்டுகள் சராசரியாக 12% வரை வருமானம் தருகின்றன. ஓரிரு ஃபண்டுகள் 30% வரையிலும் வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன.

முதலீடு செய்ய ஆரம்பித்த திலிருந்து இன்று வரை ஒரு மாதம்கூட நான் முதலீட்டை நிறுத்தியதில்லை. நிதி நெருக்கடி அதிகம் இருந்த கொரோனா காலத்தில், பலரும் முதலீடுகளை நிறுத்தினார்கள். ஆனால், நான் நிறுத்தவில்லை. ஏனெனில், நான் அப்போது செய்கிற முதலீட்டின் மூலம்தான் என் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன். எந்தத் தேவைகளுக் காக முதலீடுகளை ஆரம்பித் தேனோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வரை நான் முதலீட்டை நிறுத்த மாட்டேன். கடன் வாங்கி வீடு கட்டும் போது, எனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. நான் நினைத்திருந் தால் ஏதாவது ஒரு ஃபண்டை நிறுத்திவிட்டு, அதிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்தி யிருக்க முடியும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை’’ என்றார் டி.சுந்தரேஷன்.

சம்பளம் குறைவாக இருந் தாலும், அதை முறையாக முதலீடு செய்தால் நிச்சயமாக சூப்பர் இன்வெஸ்டார் ஆகலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்!