Published:Updated:

‘‘முதலீடு ரூ.25,000... வருமானம் 25%, நிம்மதியான வாழ்க்கை...!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பி.சதீஷ்குமார் மனைவி ரேவதி மகள் சமுத்திராவுடன்
பி.சதீஷ்குமார் மனைவி ரேவதி மகள் சமுத்திராவுடன்

சூப்பர் இன்வெஸ்டார்

பிரீமியம் ஸ்டோரி

"எனது சொந்த ஊர் தாராபுரம் ரெட்டாலவலசு. என் குடும்பம் விவசாயக் குடும்பம். சீட்டு போடுவது, ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தைப் போட்டு வைப்பது போன்ற சேமிப்பு நடவடிக்கைகளை என் பெற்றோர்கள் மேற்கொண்டிருந்தனர். நான் படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகுதான், முதலீடு மற்றும் நிதிசார்ந்த விஷயங்களை, கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். கடந்த எட்டு வருடங்களாக நாணயம் விகடனைத் தொடர்ந்து படித்து வருகிறேன். முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியதே நாணயம் விகடன்தான்” என்று சொல்லும் 35 வயதேயான பி.சதீஷ்குமார், பெங்களூரில் பன்னாட்டு ஐ.டி நிறுவனம் ஒன்றின் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். ஐ.டி ஊழியரான அவர், சூப்பர் இன்வெஸ்டராக மாறியதை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

பி.சதீஷ்குமார் மனைவி ரேவதி 
மகள் சமுத்திராவுடன்
பி.சதீஷ்குமார் மனைவி ரேவதி மகள் சமுத்திராவுடன்

“என் மனைவி ரேவதி, இல்லத்தரசி. மகள், சமுத்திராவுக்கு வயது ஆறு. முதலாம் வகுப்பு படிக்கிறாள். ஐ.டி துறை சார்ந்த வேலை என்பது நிரந்தரம் இல்லாதது என்பதை நான் 2014-ம் ஆண்டிலேயே புரிந்துகொண்டேன். ஏனெனில், அப்போது நான் செய்து வந்த வேலை எப்போது வேண்டுமானாலும் போகும் என்கிற நிலையில் இருந்தது. ஆனால், அதிர்ஷ்ட வசமாக நான் தப்பித்துக்கொண்டேன். அப்போதுதான், சம்பாதிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

ஏழு வருடங்களுக்கு முன், நாணயம் விகடன் பெங்களூரில் ஒரு முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில்தான், நிதி ஆலோசகர் பி.பத்மநாபனின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் அவ்வப்போது முதலீடு சார்ந்த விவரங்களைப் பேசி வந்தேன். அது எனக்கு முதலீட்டின் மீது ஆர்வத்தை அதிகப் படுத்தியது. மகள் பிறந்ததும், அவளுடைய எதிர்காலத் தேவைக்காக, எதில் முதலீடு செய்யலாம், எப்படி முதலீடு செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள அவரை நேரில் சென்று பார்த்தேன். அப்போது அவர் கொடுத்த ஆலோசனை, அவருடைய வழிகாட்டுதல்கள் இன்று என்னுடைய நிதி வாழ்க்கையை வளமாக மாற்றியிருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஆரம்பத்தில் 6,000 ரூபாயை மாதாந்தர எஸ்.ஐ.பி திட்டத்தின்மூலம் இரண்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்தேன். என் முதலீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இன்று மாதம்தோறும் 25,000 ரூபாயை ஐந்து ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து வருகிறேன். இது போக, சேமிக்கும் பணம், போனஸ் தொகை என மொத்தமாகக் கிடைக்கும் பணத்தையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறேன்.

எனக்கு பூர்வீகச் சொத்துகள் இருந்தாலும், நான் சொந்த மாக சம்பாதித்த பணத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என வீட்டுக் கடன் மூலம் பெங்களூருவில் ஒரு வீடு வாங்கினேன். இந்த வீட்டுக் கடனை லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி, கடன் மதிப்புக்கு இணையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் உருவாக்குவது எப்படி என்கிற ஆலோசனையை என்னுடைய நிதி ஆலோசகர் வழங்கினார். என்னுடைய வீட்டுக் கடனுக்கு இணையான ரூ.30 லட்சம் சொத்து மதிப்பைத் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் சேர்த்திருக்கிறேன். வீட்டுக் கடனை சரியாகத் திரும்பக் கட்டிவருவதால், வருமான வரியை மிச்சம் பிடித்திருக்கிறேன்.

‘‘முதலீடு ரூ.25,000... வருமானம் 25%,    நிம்மதியான வாழ்க்கை...!”

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். குறைவான பணத்தைதான் இன்று வரை அதில் முதலீடு செய்திருக்கிறேன். என் கவனம் அனைத்தும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு களின் மீதுதான்.

தற்போதைய நிலையில் மகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் என அனைத்துக்கும் முறையாகத் திட்டமிட்டு இருப்பதால், வாழ்க்கை நிம்மதி யாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பெற்றோர்கள் செய்துவரும் விவசாயத்துக்காகவும் என் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்குவதால், என்னால் 25,000 ரூபாயைத்தான் மாதம்தோறும் ஒதுக்க முடிகிறது. சம்பளத்தில் இருந்து அவ்வப்போது சேமிக்கும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதாலும், என் முதலீட்டின் மீது கிடைத்திருக்கும் வருமானம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில், எனக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் சுமார் 25% வருமானம் கிடைக்கிறது.

சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி இருக்கிறது. போதுமான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். இதனால் நானும் என் குடும்பமும் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம்” எனப் பெருமிதத்துடன் பேசி முடித்தார் சூப்பர் இன்வெஸ்டார் சதீஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு