நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சிறு வியாபாரிகளுக்கு கைகொடுக்கும் கிரெடிட் கார்டு! புதிய அறிமுகம்...

புதிய அறிமுகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய அறிமுகம்...

N E W S C H E M ES - சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தைக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

பரோடா வங்கியின் புதிய கான் QR கிரெடிட் கார்டு

பரோடா வங்கி மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய Con QR என்கிற கடன் அட்டையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த அட்டையில் கியூ.ஆர் கோடு இருக்கும். பேடிஎம், கூகுள் பே போன்று இந்த அட்டையின் கியூ.ஆர் கோடினை ஸ்கேன் செய்து பணம் பெறலாம். பணம் வாடிக்கை யாளரின் கணக்கில் வரவு வைக்கப் படும்.

மேலும், இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருள் களை வாங்க முடியும். இவ்வாறு ஒரே அட்டை பணம் பெறுவதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுவது இந்தப் புதிய அட்டையின் சிறப்பாகும்.

சிறு வியாபாரிகள் இந்தக் கடன் அட்டையைப் பெறுவதன் மூலம் வியாபாரம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரே அட்டையின்கீழ்க் கொண்டு வர முடியும். இந்தப் புதிய கடன் அட்டையானது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாக சிறு வியாபாரிகளிடம் கொண்டு சேர்ப்பதாக உள்ளது.

எஸ்.பி.ஐ நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (SBI Nifty Next 50 Index Fund)

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதில், மே 11 வரை முதலீடு செய்ய முடியும். மேலும், இது பேசிவ் வகை திட்டம் ஆகும். குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என்கிற அளவிலிருந்து இந்தத் திட்டத்தில் சேரலாம். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரு வகைகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுள்ள முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சிறு வியாபாரிகளுக்கு கைகொடுக்கும் கிரெடிட் கார்டு! புதிய அறிமுகம்...

கனரா ராபிகோ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் (Canara Rabeco Focused Equity Fund)

கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி, பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் மே 7 வரை முதலீடு செய்ய முடியும்.

குறைந்தபட்சம் 5,000 ரூபாய் இதில் முதலீடு செய்யலாம். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரு வகைகளில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ள முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெறலாம்.

ஆக்ஸிஸ் பேங்க்: மொபைல் ஆப் மூலம் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பும் வசதி...

ஆக்ஸிஸ் வங்கி தனது வாடிக்கை யாளர்களுக்கு தனது மொபைல் ஆப் மூலம் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பும் பிரத்யேக வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதி மூலம் இந்திய பணத்தை நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் மாற்றி அனுப்ப முடியும். வங்கிக் கிளைகளுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே பல வெளிநாடுகளுக்கு இந்த வசதி மூலம் பணம் அனுப்பலாம்.

இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் ரூபாய் மதிப்புக்கேற்ப வெளிநாட்டு வங்கிகளில் அந்த நாட்டு கரன்சியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது முக்கியமான விஷயம்!