Published:Updated:

கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள்... யாருக்கு ஏற்றவை..?

பாண்ட் ஃபண்டுகள்

பிரீமியம் ஸ்டோரி

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதத் தொகையைப் பெரிய நிறுவனங்கள் (கார்ப்பரேட்) வெளியிடும் பாண்டு களில் முதலீடு செய்யும் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு தான் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் (Corporate Bond Fund).

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர்,  https://www.wmsplanners.com/

இந்த ஃபண்டுகள் அதிக தரக் குறியீடு (Highest Rated) பெற்ற கடன் பத்திரங்களில் (Bonds) மட்டுமே முதலீடு செய்யப்படும். குறிப்பாக, டபுள் ஏ பிளஸ் (AA+)-க்குமேல் தரக்குறியீடு கொண்ட பாண்டுகளில் முதலீடு செய்யப்படும் என்பதால், முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி கிடைக்காமல் போகக்கூடிய கிரெடிட் ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குக் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், பாண்டின் முதிர்வுக் காலத்தைப் பொறுத்து சிறிது வட்டி விகித மாற்ற ரிஸ்க் இருக்கிறது.

இந்த ஃபண்டில் எளிதில் பணமாக்கக்கூடிய லிக்விட்டி (High Liquidity) அதிகமாக இருக்கிறது. இதனால், இந்த கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் சற்று ரிஸ்க் குறைவானதாக இருப்பதுடன், அதிக வருமானம் தருவதாகவும் இருக்கிறது.

இந்த ஃபண்டில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; முதலீட்டை (யூனிட்) எப்போது வேண்டு மானாலும் விற்றுப் பணமாக்கலாம் என்கிற மாதிரி இவை ஓப்பன் எண்டட் ஃபண்டாக உள்ளன.

கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள்...
யாருக்கு ஏற்றவை..?

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி தொடர்ந்து குறைந்து வருவதால், அதிக ரிஸ்க் இல்லாத அதே நேரத்தில் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தரும் திட்டங்களை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள் சிறந்த மாற்றாகும்.

கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள்...
யாருக்கு ஏற்றவை..?

இந்த ஃபண்டில் அதிக பாதுகாப்பு, அதிக லிக்விடிட்டி, குறைவான கிரெடிட் ரிஸ்க் இருக்கிறது என ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இதர கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் அதிக ஏற்ற இறக்கம் இல்லாத நிலையான வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்காது; எனினும், கடந்த கால வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

பாரம்பர்ய முதலீடுகளான வங்கி, தபால் அலுவலகம் மற்றும் பெரு நிறுவன டெபாசிட்டுகளுடன் ஒப்பிடும்போது, முதலீடு செய்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, வரிக்குப் பிந்தைய நிலையில் நல்ல வருமானம் கிடைக்கும். அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானம், முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்துடன் இதர வருமானம் என்கிற பிரிவின்கீழ் சேர்க்கப்பட்டு, அவர் எந்த அடிப்படை வருமான வரம்பில் (பழைய முறைப்படி 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள் மூலமான வருமானத்துக்கு மூன்றாண்டு களுக்கு முன் எனில், குறுகிய கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். இது ஒருவர் எந்த அடிப்படை வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். மூன்றாண்டுகள் கழித்து யூனிட்டுகளை விற்றால் கிடைக்கும் மூலதன ஆதாயம் நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும். இதற்கு, பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். இந்த ஃபண்டில் மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத் துக்கு முதலீடு செய்யும் பட்சத்தில், பணவீக்க விகிதத்தைத் தாண்டிய மற்றும் வரி அனுகூலத்துடன் நல்ல வருமானத்தையும் பெற முடியும்.

நடுத்தர அளவு ரிஸ்க்குடன் பணவீக்க விகித்தைத் தாண்டி நல்ல வருமானம் (சுமார் 10%) வேண்டும் என்கிறவர்களுக்கு ஏற்றதாக இந்த கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு