Published:Updated:

வட்டி விகிதம் குறைவு... முதலீட்டில் கவனிக்க வேண்டியவை..! நிபுணர்கள் வழிகாட்டல்...

வ.நாகப்பன், ஏ.கே.நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், ஏ.கே.நாராயண்

M E E T I N G

வட்டி விகிதம் குறைவு... முதலீட்டில் கவனிக்க வேண்டியவை..! நிபுணர்கள் வழிகாட்டல்...

M E E T I N G

Published:Updated:
வ.நாகப்பன், ஏ.கே.நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், ஏ.கே.நாராயண்

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `வட்டி விகித குறைவும் வேறு முதலீட்டு வழிகளும்...’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின. இதில் முதலீட்டு ஆலோசகர்கள் வ.நாகப்பன், ஏ.கே.நாராயண், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள். ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

வ.நாகப்பன், ஏ.கே.நாராயண்
வ.நாகப்பன், ஏ.கே.நாராயண்

“வட்டி விகிதம் குறைந்திருப்பதால் டெபாசிட் செய்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டிந்தாலும், தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைத்திருப்பது, வீட்டுக் கடன் வட்டி கணிசமாகக் குறைந்திருப்பது என இரு நன்மைகள் நடந்திருக்கின்றன” என்றார் வ.நாகப்பன். “முதலீட்டில் ரிஸ்க் எடுக்காமல் நிம்மதி தேடினால் பணவீக்கத்தைத் தாண்டி நல்ல வருமானம் கிடைக்காது” என்றார் ஏ.கே.நாராயண்.

“வட்டி விகித ஏற்ற இறக்கம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஒரு முதலீட்டாளர் கவனிக்கத் தேவையில்லை. அஸெட் அலொகேஷன்படி பிரித்து முதலீடு செய்தாலே சராசரியாக லாபம் கிடைக்கும்” என்றார் எஸ்.குருராஜ். நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க: https://bittylink.com/1tu