Published:Updated:

கல்விக் கடன் வாங்காமல் கல்லூரிச் செலவை எதிர்கொள்வது எப்படி? வழிகாட்டும் ஆலோசனை...

கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

I N V E S T M E N T

கல்விக் கடன் வாங்காமல் கல்லூரிச் செலவை எதிர்கொள்வது எப்படி? வழிகாட்டும் ஆலோசனை...

I N V E S T M E N T

Published:Updated:
கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

இன்றைக்கு 5 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் 50 கோடிக்கும் அதிகம். இவர்களில் கணிசமானவர்கள் உயர்கல்வி பயில விரும்புகிறார்கள். என்ன செலவானாலும் சரி நம் பிள்ளைக்குத் தரமான கல்வியைத் தந்துவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட பெற்றோரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு முக்கியமான காரணம், நம் நாட்டில் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ இனிவரும் காலங்களில் அவர்களின் திருமணச் செலவு என்பது ஒரு சுமையாக இருக்காது என்ற எண்ணம் துளிர்விடத் தொடங்கிவிட்டதுதான். எனவே, பெற்றோர்கள் பிள்ளை களுக்கான முதன்மைச் செலவாக கல்விச் செலவைக் கருத ஆரம்பித்திருக்கிறார்கள்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

திட்டமிடுவது அவசியம்...

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், கல்விச் செலவு என்பது நிச்சயமான ஒன்று. அது மட்டுமல்ல, பத்து வயது வரை தொடக்கக் கல்வி, 17 வயது வரை பள்ளிக்கல்வி அதற்குமேல் கல்லூரிக் கல்வி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றும்கூட. அப்படி இருக்கும்போது, ‘பள்ளிக்கல்வி முடியும்போது கல்லூரிக் கல்விக்கான செலவைப் பற்றி யோசிக்கலாம்’ என்று அதற்காக எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இருப்பதோ, ‘கல்விக் கடன் இருக்க, நமக்கு எதற்குக் கவலை’ என்று இருப்பதோ பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுவதாக இருக்கிறது. இந்த எண்ணம் கடந்த காலத்தில் தவறான ஒன்றாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனிவரும் காலத்தில் இந்த எண்ணம் சரியானதாக இருக்காது. ஏன் தெரியுமா?

பணம் சேர்க்க வேண்டியதன் அவசியம்...

தரமான கல்விக்கான கல்விச் செலவு ஆண்டுதோறும் சராசரியாக 12% அளவில் கூட்டு வளர்ச்சி பெற்று உயர்ந்து வருகிறது. கல்விக் கடனுக்கான வட்டியும் சராசரியாக 12% கூட்டு வளர்ச்சி பெறுவதாக உள்ளது.

உயர்தரமான கல்வியை நம் பிள்ளை களுக்குத் தர வேண்டும் என்று விரும்புவோர் எண்ணிக்கை அதிகம். ஆனால், அத்தகைய படிப்புகளுக்கு உரிய மாணவர் சேர்க்கை (Seats) குறைவு. எனவே, மேம்பட்ட கல்விக்கான கல்விக் கட்டணமும் அதிகமாகவே இருக்கும்.

கல்விக் கடன் மூலம் கிடைக்கக்கூடிய தொகை நாம் தேர்வு செய்துள்ள கல்விப் பிரிவுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் செலவுகளை எதிர் கொள்ளப் போதுமானதாக இருக்காது. இத்துடன் கல்விக்கடனுக்கான 12% கூட்டு வட்டி என்கிற கூடுதல் சுமை வேறு. எனவே, மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டு கடைசி நேரத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதில் பயனில்லை.

கல்விக் கடன் கிடைக்காதபட்சத்தில், வேறு ஏதாவது ஒரு கடனை வாங்கியாவது பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் வேறு இலக்குகளுக்காகச் சேர்த்து வைத்த பணத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும். இது மாதிரி எதுவும் நடக்காமல், பிள்ளைகள் படிக்க நினைத்த படிப்பை பெரிய பணச் சிக்கல் இல்லாமல் படிக்க வைக்க ஒரே வழி, குழந்தை பிறந்தவுடன் அல்லது பிறக்கும் முன்பேகூட, அதன் உயர்கல்விக்கான செலவை சரியான முதலீட்டின் மூலம் சேர்க்க ஆரம்பித்து விடுவதுதான்.

கல்விக் கடன் வாங்காமல் கல்லூரிச் செலவை எதிர்கொள்வது எப்படி? வழிகாட்டும் ஆலோசனை...

எவ்வளவு சேர்ப்பது?

கடந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் 4 - 8% வரை இருந்து வருகிறது. அதே சமயம், கல்விச் செலவும் இரட்டை இலக்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. உதாரணமாக, அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் (Indian Institute of Management) இரண்டு வருடஎம்.பி.ஏ படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.4.5 லட்சம் என்ற அளவில் இருந்தது, தற்போது ரூ.19 லட்சத்துக்கும் அதிகமாகிவிட்டது.

இதேபோல, பி.டெக் படிப்புக் கான கட்டணம் முன்பு ரூ.3.6 லட்சம்; தற்போது அது ரூ. 10 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட்டணம் 10% என்ற அளவில் உயர்ந்துகொண்டே வருகிறது.

சில குறிப்பிட்ட படிப்புகளுக் கான கட்டணம் அடுத்த 5, 10 அல்லது 15 ஆண்டுகளில் எவ்வளவு அதிகரிக்கும் என ஓர் உத்தேச மதிப்பீடும் உண்டு.

அதாவது, பி.டெக் படிப்புக்கான கல்விக் கட்டணம் இன்னும் ஐந்து ஆண்டு கழித்து ரூ.16.5 லட்ச மாகவும் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.25 லட்சமாகவும், அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.42 லட்சம் என்ற அளவிலும் உயரக்கூடும். எம்.பி.ஏ படிப்புக்கு கட்டணம் 5 ஆண்டு களில் ரூ.30 லட்சமாகவும் 10 ஆண்டுகளுக்குப்பின் ரூ.50 லட்சமாகவும், 15 ஆண்டுகள் கழிந்தபின் ரூ.80 லட்சமாகவும் உயரக்கூடும். இதேபோலஎம்.பி.பி.எஸ் கட்டணம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.40 லட்சமாகவும், 10 ஆண்டுகளில் ரூ.64 லட்சமாகவும் 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி அளவுக்கும் உயரக்கூடும். இவையெல்லாம் உத்தேசமான கணக்கீடு. இதைவிடவும் அதிகரிக்கலாம். (இந்த கணக்கீட்டின்படி மாதாந்தர முதலீடு எவ்வளவு என்பதை அட்டவணையில் பார்க்க)

கல்விக் கடன் வாங்காமல் கல்லூரிச் செலவை எதிர்கொள்வது எப்படி? வழிகாட்டும் ஆலோசனை...

எதில் முதலீடு செய்வது?

சேமிப்பு, முதலீடு என்றாலே நமக்கு ‘சட்’டென்று நினைவுக்கு வருவது ரெக்கரிங் டெபாசிட்டும் ஃபிக்ஸட் டெபாசிட்டும்தான். ஆனால், இந்த இரண்டின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் அதிகபட்சம் 7 சதவிகிதம் மட்டுமே. வட்டி வருமானத்துக்கு வரியைக் கழித்துவிட்டால் நிகர வருமானம் 5 சதவிகிதமாக ஒடுங்கிவிடும். ஆனால், கல்விக் கட்டண வளர்ச்சி 10 - 12% என்கிற அளவில் இருக்கும்போது, ஆர்.டி மற்றும் எஃப்.டி சரியான முதலீட்டுத் தேர்வாக இருக்காது.

சிலர், இன்ஷூரன்ஸ் திட்டம் மூலம் குழந்தையின் உயர்கல்விக்கான பணத்தைச் சேர்க்க நினைக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக் காக எடுக்கப்படுவதே தவிர, அத்தியாவசியமான செலவுக்குப் பணம் சேர்ப்பதற்காக அல்ல. காரணம், இன்ஷூரன்ஸ் மூலமான வருமானம் அதிகபட்சம் 4 - 5% மட்டுமே.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்

கடந்த 20 ஆண்டுகளில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 10 முதல் 12% வருமானம் தந்துள்ளன. அதாவது, கல்விக் கட்டண வளர்ச்சிக்கு இணையான வருமானத்தைத் தந்துள்ளன. இன்றைய தேதியில் ஒருவர் தன் பிள்ளையை பொறியியல் படிப்பில் சேர்க்க கடந்த 10 ஆண்டுகளில் மாதம் ரூ.6,500 வீதம் ரெக்கரிங் டெபாசிட்டில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.4,300 வீதம் முதலீடு செய்திருந்தாலே பொறியியல் படிப்புக் கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி விட முடியும் அதாவது, மாதம் 2,000 ரூபாய் மிச்சம் என 10 ஆண்டுகளில் எவ்வளவு மிச்சமாகும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

எந்த வகை மியூச்சுவல் ஃபண்ட்..?

கல்லூரியில் சேர்வதற்கு இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளே இருக்கும்பட்சத்தில் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டைத் (Aggressive hybrid fund) தேர்வு செய்யலாம். இதில் 75% பங்குச் சந்தையிலும், மீதமுள்ள தொகை கடன் சந்தையிலும் முதலீடு செய்யப்படுகின்றன.

ஏழு வருடமும் அதற்குப் பின்னரும்தான் கல்லூரியில் சேர வேண்டும் எனில், பங்குச் சந்தையில் முழுக்க முதலீடு செய்யும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் ஃபண்டுகளைத் தேர்வு செய்து எஸ்.ஐ.பி (Systematic Invest Plan) மூலம் முதலீட்டைத் தொடங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism