Published:Updated:

ஆப்பிள் கற்றுத் தரும் பாடங்கள்! - முதலீட்டு ஆலோசனைகள்..!

ஆப்பிள் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்பிள் நிறுவனம்

முன்பு அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பிய ஆப்பிள், பிறகு, உலகம் முழுக்க சந்தையை விரிவாக்கியது!

லகின் எந்தப் பங்கு நிறுவனமும் செய்திராத ஒரு சாதனையை அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் செய்திருக்கிறது. பங்கின் சந்தை மதிப்பு இரண்டு டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்பதே அந்தச் சாதனை. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வளர்ச்சியிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதலீடு சார்ந்த ஐந்து பாடங்களை இனி பார்ப்போம்.
ஆப்பிள் கற்றுத் தரும் பாடங்கள்! - முதலீட்டு ஆலோசனைகள்..!

1. உயரத்தை அடைய கால அளவு அவசியம்!

ஆப்பிள் நிறுவனம் 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இரண்டு டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டிப் பிடிக்க 44 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. எந்தவொரு தொழிலாக இருந்தாலும், குறிப்பிட்ட உயரத்தைத் தொட கால அளவு என்பது மிகமிக முக்கியம். நாம் செய்யும் முதலீடும் நல்ல லாபத்தைத் தர வேண்டுமெனில், நீண்டகாலம் காத்திருக்க வேண்டும். முதலீட்டை ஆரம்பித்த சில மாதங்கள் அல்லது சில வருடங்களில் பெரிய அளவு வளர்ச்சியை எதிர்பார்க்காமல், நீண்ட நாள் நோக்கில் உங்களது வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகப் புலப்படும். அதுவும் குறிப்பாக, பங்கு சார்ந்த முதலீடுகள் என்று வரும்போது, கால அளவு அத்தியாவசியமான ஒன்று என்பதை உணர வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

2. கூட்டு வட்டி என்பது விளையாட்டல்ல..!

பொதுவாகவே, பங்கு சார்ந்த நீண்டகால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், சிறந்த லாபத்தைக் கொடுப்பவையாகவே இருந்து வருகின்றன. இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லக்கூடிய கூட்டு வட்டியே. உதாரணமாக, 12% ஆண்டு வளர்ச்சி கிடைக்கக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் நீங்கள் செய்யக்கூடிய ரூபாய் 10,000 முதலீடானது, 20 வருட கால அளவில் சுமார் 1 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும். அதே முதலீடானது 25 ஆண்டுக்காலத்தில் சுமார் 2 கோடி ரூபாயாகவும் 30 ஆண்டுகளில் 3.5 கோடி ரூபாயாகவும் வளரும். இதுவே கூட்டு வட்டியின் மகிமை.

1976-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் 1 டிரில்லியன் டாலர் என்ற இலக்கைத் தொட 44 வருடங்கள் ஆகின. ஆனால், இரண்டு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே, உங்களது முதலீட்டில் கூட்டு வட்டியின் மகத்துவத்தைக் குறைவாக எண்ணிவிட வேண்டாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்!

ஆப்பிள் நிறுவனம் இந்த அளவு வளர்ந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, மக்களின் தேவைக்கேற்ப பல கேட்ஜெட்டுகளை வெளியிட்டு சந்தைப்படுத்தியதே. தேவைகளுக்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறார்கள். இதே காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நோக்கியா மொபைல் நிறுவனம், கால சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவராத காரணத்தால் அதன் வளர்ச்சி தடைபட்டது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இது உங்கள் முதலீட்டுத் திட்டங்களுக்கும் பொருந்தும். உங்கள் முதலீடுகள் நீண்டகால நோக்கில் இருந்தாலும், முதலீடுகளையும் மற்றும் முதலீட்டுத் திட்டங்களையும் வருடம் ஒரு முறையாவது பரிசீலனை செய்து தேவைப்படும் மாற்றங்களைச் செய்வது அவசியம்.

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

4. அயல்நாட்டுச் சந்தை வாய்ப்புகள்!

20 ஆண்டுகளுக்கு முன்புவரை அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருந்த ஆப்பிள், அதன்பின் உலகம் முழுக்க தன் சந்தையை விரிவாக்கியது. இதன் விளைவுதான், இன்றைக்கு அந்த நிறுவனம் அடைந்திருக்கும் அசூர வளர்ச்சி. நமது முதலீடுகளும் வெறும் இந்திய நிறுவனப் பங்குகளில் மட்டும் இருக்காமல், வெளிநாட்டுப் பங்குகளிலும் இருக்க வேண்டிய காலம் இது.

உலகப் பெரு நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், ஆல்பாபெட் (கூகுள்) மற்றும் அமேசான் போன்ற அயல்நாட்டு பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இந்தியாவில் உள்ளன (பார்க்க, அட்டவணை). இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதால் லாபத்தைப் பெருக்கும் வாய்ப்பை நாம் அதிகரித்துக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. செல்வத்தை உருவாக்கும் வழிமுறைகள்!

ஆப்பிள் நிறுவனம் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் ஒன்றை மட்டுமே தயாரித்து சந்தைப்படுத்தி வந்தது. பிறகு ஐபாட், ஐபேட், செல்போன்கள் எனப் பல கேட்ஜெட்டுகளை உருவாக்கி சந்தைப்படுத்தியதன் விளைவாக, இன்று மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மாறியிருக்கிறது.

ஆப்பிள் கற்றுத் தரும் பாடங்கள்! - முதலீட்டு ஆலோசனைகள்..!
ஆப்பிள் கற்றுத் தரும் பாடங்கள்! - முதலீட்டு ஆலோசனைகள்..!

நம் மக்கள் முதலீடு என்றாலே நிலம், தங்கம், வங்கி போன்றவற்றிலேயே முதலீடுகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பங்குச் சந்தைகள் நல்ல வளர்ச்சியைக் கொடுக்க வாய்ப்புள்ள்ளது. இந்த நிலையில், நல்லதொரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி முதலீடு செய்வதாலேயே செல்வம் சேர்க்க முடியும்.

இந்த ஐந்து முதலீட்டுப் பாடங்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டால், ஆப்பிள் நிறுவனத்தைப்போல நாம் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியும்!