Published:Updated:

பாண்ட் ஃபண்ட்... ஃபிக்ஸட் டெபாசிட்... எது யாருக்கு ஏற்றது?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பாண்ட் ஃபண்ட்... ஃபிக்ஸட் டெபாசிட்... எது யாருக்கு ஏற்றது?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கே.ஊர்வசி, கன்னியாகுமரி.

பாண்ட் ஃபண்டுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம், எது யாருக்கு ஏற்றதாக இருக்கும்? எது மிகவும் பாது காப்பானது என விளக்கிச் சொல்லவும்...

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“முதலீட்டுக் காலம் குறித்து தெளிவாக இருப்பவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் உகந்ததெனக் கொள்ளலாம். மேலும், சற்றே குறைவான வட்டி விகிதமாக இருந்தாலும் பரவாயில்லை, உத்தரவாதமான வட்டி வேண்டும் என்று நினைப்பவர்களும் அதைத் தேர்வு செய்யலாம்.

மாறாக, உத்தரவாதம் இல்லையென்றாலும் பரவாயில்லை, சற்று அதிக வட்டி / வருமானம் கிடைக்க வாய்ப்பிருந்தால் நல்லது என்று நினைப்பவர்களும், தனக்கு எப்போது வேண்டுமானாலும் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் பாண்ட் ஃபண்டுகளை நாடலாம். மேலும், நீண்ட காலம் (மூன்று வருடங்களுக்கு மேல்) முதலீடு செய்பவர்களும் வரிச் சலுகைக்காக பாண்ட் ஃபண்டுகளைப் பயன்படுத்தலாம்.

ஆனால், பாதுகாப்பு என்று பார்த்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளே ரிஸ்க் குறைவானது.”

அ.தங்கையா, சுரண்டை.

என் வயது 35. நான் 5 வருடத்துக்கு முன் ரூ.20 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுத்தேன். அந்தக் கவரேஜ் தொகையை இப்போது ரூ.30 லட்சமாக அதிகரிக்க முடியுமா, முடியும் எனில், நான் என்ன செய்ய வேண்டும்?

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பாலிசியும் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தமாக இருப்பதால், எந்தவொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் டாப்அப் பண்ண முடியாது. ஆனால், தாங்கள் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க விரும்பினால், வேறு ஒரு தனி பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.”

பாண்ட் ஃபண்ட்... ஃபிக்ஸட் டெபாசிட்... எது யாருக்கு ஏற்றது?

எஸ்.விஜயகுமார், முகப்பேர்.

நிலையான வைப்பு / தொடர்ச்சியான வைப்பு (FD/RD) முதலான முதலீடுகள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுமா?

சு.செந்தமிழ்ச் செல்வன், ஜி.எஸ்.டி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்.

“ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டுகளில் (FD/RD) செய்யப்படும் முதலீட்டுத் தொகைக்கு ஜி.எஸ்.டி கிடையாது. மத்திய ஜி.எஸ்.டி (CGST) சட்டம் 2017 பிரிவு 2 (52)-ல் வழங்கப்பட்டுள்ள பொருள்களின் வரையறையிலிருந்து குறிப்பாக, பணம் விலக்கப்பட்டுள்ளது. எனவே, எஃப்.டி/ ஆர்.டி-யில் முதலீடு செய்யும்போது ஜி.எஸ்.டி பொருந்தாது.”

பாண்ட் ஃபண்ட்... ஃபிக்ஸட் டெபாசிட்... எது யாருக்கு ஏற்றது?

திருமலை, நெல்லூர்.

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்மால்கேப் ஃபண்ட் ஒன்றில் மூலம் மாதம் ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன். இப்போது என்னிடம் ரூ.50,000 மொத்தப் பணம் உள்ளது. அதை இந்த ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, மாதம் ரூ.5,000 வீதம் எடுத்து வந்தால், எனக்கு வெளியேறும் கட்டணம் வருமா? விளக்கிச் சொல்லவும்.

பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.com

“மூன்று வருட காலத்தில் முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.1.8 லட்சம் ஆகும். அந்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.2.5 லட்சம் என எடுத்துக்கொண்டு, இப்போது அதே ஃபண்டில் ரூ.50,000 முதலீடு மேற்கொண்டால் மொத்தத் தொகை ரூ.3 லட்சம் ஆகும். இதில் மாதம் ரூ.5,000 எடுத்தால் உங்களுடைய அசல் வேகமாகக் குறையும். நீங்கள் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்பவர்கள் பணத்தை எடுக்க மாட்டார்கள். நீங்கள் முதலில் முதலீடு செய்து, அந்தத் தொகை பெரிய அளவில் வளர்ந்த பின் பணத்தை எடுப்பது பற்றி முடிவெடுங்கள்.”

ஆர்.பிரபு, கொரட்டூர், சென்னை.

நான் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவன். இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இண்டெக்ஸ் ஈக்வல் வெயிட் ஃபண்ட்... இவற்றில் எனக்கு எது ஏற்றதாக இருக்கும்?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“எந்த ஒரு செயலிலும் அனுபவம்தான் நம் செயலைத் தொடர்ந்து செய்ய வைக்கும். பங்குச் சந்தை முதலீடு அதேபோலத்தான். முதல் அனுபவம் மகிழ்ச்சி தரும்படி அமையவில்லை எனில், உங்களுக்கு அதன் மீது இருக்கும் நாட்டம் மிகவும் குறைந்துவிடும். ஆகையால், முதலில் இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன், அதைவிட ரிஸ்க் குறைவான பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் இண்டெக்ஸ் ஃபண்ட் தந்திருக்கும் வருமானம் ஏறக்குறைய பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் வருமானத்துக்கு நிகரானதாகும். ஆகையால், உங்கள் முதல் முதலீடு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் இருக்கட்டும். 1 - 2 ஆண்டுகளுக்குப் பிறகு, லார்ஜ்கேப் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்குங்கள். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க மிக முக்கியமான தேவை, பொறுமையாக இருப்பதுதான்.’’

குணசீலன், அடையாறு, சென்னை.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் சேர்த்து ஆக்ஸிடென்ட் டெத், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் பாலிசியை எடுப்பது நல்லதா அல்லது பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் தனியாக பாலிசி எடுப்பது நல்லதா?

என்.சத்யமூர்த்தி, சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், Ruwise.in

“இந்த வகை ரைடர்களுக்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைவிட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பிரீமியம் சற்று அதிகமாக உள்ளது. பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஆக்ஸிடென்ட் டெத், விபத்து மூலமாக முழுமையாகச் செயல்பட முடியாமல் போவது, பகுதியாகப் பாதிப்பு ஏற்படுவதற்கு க்ளெய்ம் போன்ற அனைத்து பலன்களையும் அளிக்கும் பாலிசிகளைக் குறைந்த பிரீமியத்தில் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பாலிசிகளில் இழப்பீடு, முழுக் காப்பீட்டுத் தொகை அல்லது பகுதி காப்பீட்டுத் தொகை பாதிப்புக்கு ஏற்ப கிடைக்கும். கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் பாலிசியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுமார் 15 நோய்களில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டால் காப்பீட்டுத் தொகை மொத்த மாகக் கிடைக்கும்.

இந்த கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகளில் அடுத்து வரும் ஆண்டுகளில் பிரீமியம் சற்று அதிகரிக்கக்கூடும். ஆக்ஸி டென்ட் டிஸெபிலிட்டி பாலிசி களில் பிரீமியம் அதிகரிப் பதில்லை. பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் தனியாகவும் ஆக்ஸிடென்ட் டிஸெபிலிட்டி மற்றும் கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியைத் தனியாகவும் எடுத்துக்கொள்வது சிறந்தது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism