Published:Updated:

காப்பீட்டுத் திட்டம் முதல் கடன் ஃபண்ட் வரை... கல்விச் செலவுக்கு சிறந்த முதலீடு எது?

கல்வி
கல்வி ( (மாதிரி படம்) )

எந்தவொரு முதலீட்டையும், எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்ப எடுக்கிற மாதிரியான நெகிழ்வுத்தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும்.

``என் இரு பிள்ளைகளின் படிப்புக்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.20,000 இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டி வருகிறேன். இது சரியான முறையல்ல என்கிறான் நண்பன். அவன் சொல்வது சரியா?"

- அ.வெங்கடேஷ், தர்மபுரி

``காப்பீட்டையும் முதலீட்டையும் தனித் தனியாகப் பார்க்க வேண்டும். முதலீடு என்பது நீங்கள் உயிருடன் இருக்கும் போது குறிக்கோளை அடைய உதவும் பணமாகும். நீங்கள் இல்லாவிட்டாலும் இலக்கைப் பாதுகாப்பது காப்பீடு. ஒரே திட்டத்தில் இரண்டு நன்மைகளையும் நீங்கள் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்போது குடும்பத்தைப் பாதுகாக்க காப்பீடு மட்டுமே பலன் அளிக்கும் குறைந்த பிரீமியம் கட்டக் கூடிய டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்துவிட்டு, மீதமுள்ள தொகையை உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் அடிப்படையில் உங்கள் அனைத்து இலக்குகளுக்கும் தேவையான நிதியைப் பெற முதலீடு செய்ய வேண்டும்.

கல்விச் செலவை ஈடுகட்ட எந்தவொரு காப்பீட்டுத் திட்டத்தையும் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை. ஏனெனில், எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் கிடைக்கும் வருமானம், பணவீக்கத்துடன் கணக்கிட்டால் போதாது.”

கல்வி கட்டணம்
கல்வி கட்டணம்

``பிள்ளைகளின் எதிர்கால உயர்கல்விச் செலவுக்காக முதலீடு செய்ய ஆர்.டி., எஃப்.டி., மியூச்சுவல் ஃபண்டில் கடன் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் இவற்றில் எது சிறந்தது, ஏன் சிறந்தது எனச் சொல்ல முடியுமா?"

- ஆர்.ராகேஷ், பெங்களூரு

``இந்த அனைத்து முதலீட்டுத் திட்டங்களின் கலவையும் மிகவும் பொருத்தமானது. முதலீட்டுக் காலம், உங்களின் அடிப்படை வருமான வரி வரம்பைப் பொறுத்து, நீங்கள் முதலீட்டுக் கலவையைத் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு திட்டத்துக்கும் எனப் பிரத்யேக முதலீட்டுப் பிரிவினர் இருக்கிறார்கள். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு தீவிர முதலீட்டாளராக (Aggressive Investor) இருந்தாலும், உங்கள் இலக்கை நெருங்கும்போது, அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் தொகையைப் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். கல்வி இலக்குக்கு கால எல்லை இருக்கிறது; நீங்கள் தயாராக இருக்கிறீர்களா, இல்லையா, சந்தை உங்களுக்கு வருமானத்தை அளித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் காப்பீட்டு பாலிசி முதிர்ச்சியடைந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் தேவைக்கான பணத்தைச் சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.

 நிதி
நிதி

எனவே, எந்தவொரு முதலீட்டையும் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்ப எடுக்கிற மாதிரியான நெகிழ்வுத்தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் இலக்கு செலவை மதிப்பாய்வு செய்வதோடு, உங்கள் பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதையும் மதிப்பிடுங்கள். ஆக செலவுக்கேற்ப உங்கள் முதலீடுகளைத் திட்டமிடுங்கள். பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தொகுப்புத் தொகையைக் கணக்கிடுவது மிக முக்கியம். எதிர்பார்க்கப்படும் தொகைக்கு அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களை உங்களால் தேர்வு செய்ய முடியாவிட்டால், அதே தொகுப்பு நிதியை உருவாக்க நீங்கள் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதிக ரிஸ்க் உள்ள திட்டங்கள், எல்லா நேரத்திலும் அதிக வருவாயைத் தரும் என்ற உத்தரவாதம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.''

- பிள்ளைகளின் உயர்கல்விக்கு எப்படி நிதித் திட்டமிட வேண்டும் என்பது குறித்த மேலும் பல கேள்விகளுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார் நிதி ஆலோசகர் ஸ்ரீதேவி. அவற்றை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க >

கேளுங்கள், பதில் கிடைக்கும்! : கல்விச் செலவுக்கு சில்ட்ரன் ஃபண்டுகள் நிச்சயம் உதவுமா? https://bit.ly/3b8iskg

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு