நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இலக்குடன் இணைத்து செய்தால்தான் உங்கள் முதலீடு வெற்றி பெறும்!

விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு

விழிப்புணர்வு

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் (Mirae Asset Mutual Fund) இணைந்து நடத்தும் ‘உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படித் தேர்வு செய்வது?’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வித்யா பாலா (Primeinvestor.in), மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஏரியா ஹெட் (ரீடெய்ல் சேல்ஸ்) சுரேஷ் பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய சுரேஷ் பாலாஜி, ‘‘நம் வாழ்க்கையில் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், நம்முடைய ஓய்வுக்காலம் எனப் பல இலக்குகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நாம் செய்யும் முதலீட்டை ஏதாவது ஓர் இலக்குடன் இணைத்து செய்தால்தான், அந்த முதலீட்டைக் கடைசி வரை நம்மால் செய்து, அதன்மூலம் கிடைக்கும் பலனை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியும். இலக்கு இல்லாமல் முதலீட்டைத் தொடர்ந்தால், நடுவில் பணத்தை எடுத்துவிடுவோம். இதனால் நம் இலக்கு நிறைவேறாமல் போய்விடும்’’ என்றார்.

இலக்குடன் இணைத்து செய்தால்தான் உங்கள் முதலீடு வெற்றி பெறும்!

அடுத்து பேசிய நிதி ஆலோசகர் வித்யா பாலா (Primeinvestor.in), சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொன்னார். நம்முடைய போர்ட்ஃபோலியோ அஸெட் அலொகேஷன்படி அமைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச்சொல்லி, முதலீட்டுக் காலத்துகேற்ப எந்தெந்தத் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொன்னார். மேலும், இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தையும் எடுத்துச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பான விஷயம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல முதலீட் டாளர்கள் பல கேள்விகளைக் கேட்டதுதான். அவர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கமான பதில் தரப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிலர் குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது!