நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்... என்ன செய்ய வேண்டும்..?

விழிப்புணர்வு கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘நீண்டகால நிதி இலக்குகளுக்கான வழிமுறை - சரியான சொத்துகளில் நிதி ஒதுக்கீடு!’ என்ற நிகழ்ச்சியை சென்னையில் கடந்த 8-ம் தேதி நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக பேசிய குவான்டம் அட்வைஸர் பிரிவின் மேலாண்மை இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம், “முதலீட்டை எப்போதும் இலக்குகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களின் திருமணம் போன்ற இலக்குகளுக்கு அதிக வருடங்கள் இருக்கும். நீண்டகால அடிப்படையில் செய்யும் முதலீடுகள் நிச்சயமாக நல்ல வருமானத்தைத் தரும். ஆனால், ஒரே முதலீட்டு வகைகளில் அனைத்துத் தொகையையும் முதலீடு செய்யா மல், சரியான சொத்துகளில் நிதி ஒதுக்கீடு செய்து முதலீடு செய்வது அவசியம். அப்போது தான் இழப்பைத் தவிர்க்க முடியும். தவிர, நீங்கள் செய்யும் முதலீடானது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தருவதாக இருக்க வேண்டும்’’ என்றார்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்... என்ன செய்ய வேண்டும்..?

இவரைத் தொடர்ந்து பேசிய குவான்டம் ஏ.எம்.சி-யின் ஃபண்ட் மேனேஜர் ஜார்ஜ் தாமஸ் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய டெக்னிக்கல் விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

அடுத்து பேசிய முதலீட்டு ஆலோசகர் என்.சத்தியமூர்த்தி, “காலம்காலமாக ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற முதலீடுகளில் நம் முன்னோர்கள் முதலீடு செய்து வந்திருக்கிறார் கள். அதனால், அதன் மீது நமக்கு பற்று அதிகமாக இருக்கிறது. அந்த வகை முதலீடுகளே அதிக லாபம் தரும் என்று இன்றும் நாம் நம்ப காரணமும் அதுதான். ஆனால், காலம் மாறி விட்டது. இன்று ஏராளமான முதலீடுகள் வந்துவிட்டன. அதில் மிக முக்கியமான, பாதுகாப்பான முதலீடு மியூச்சுவல் ஃபண்ட்’’ என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்களின் கேள்விக்கு விரிவான விளக்கம் தரப்பட்டது.