Published:Updated:

அர்த்தம் உள்ள முதலீடு... எப்படிச் செய்ய வேண்டும்?

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி?’ என்ற நிகழ்ச்சியை நடத்தின. இதில், நிதி ஆலோசகர் வித்யா பாலா (https://primeinvestor.in/), ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசினார்கள்.

ஜீவன் கோஷி பேசும்போது, “தேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்டை உங்களின் நிதி இலக்குடன் இணைப்பதன்மூலம் முதலீட்டை அர்த்தம் உள்ளதாக மாற்ற முடியும். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்கவும், கடன் ஃபண்டுகள் சேமிப்புத் திட்டமாகவும், கலப்பின ஃபண்டுகள் சேமிப்பு மற்றும் செல்வம் சேர்க்கும் திட்டமாகவும் செயல்படுகின்றன. மேலும், குறுகிய கால நிதித் தேவைகளுக்குக் கடன் ஃபண்டு களிலும், நடுத்தரக் காலத் தேவைக்குக் கலப்பின ஃபண்டுகளிலும், நீண்ட காலத் தேவைக்கு ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

ஜீவன் கோஷி, வித்யா பாலா
ஜீவன் கோஷி, வித்யா பாலா

நிதி ஆலோசகர் வித்யா பாலா பேசும்போது, “சரியான முதலீட்டைத் தேர்வு செய்ய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ‘பாயின்ட் டு பாயின்ட்’ என்கிற ஆரம்பம் தொடங்கி இன்றைக்கு வரைக்குமான மொத்த வருமானத்தைப் பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக, ‘ரோலிங் ரிட்டர்ன்’ என்னும், மூன்றாண்டுக்கு முன், ஐந்தாண்டுக்கு முன், பத்தாண்டுக்கு முன் அந்த ஃபண்ட் எப்படி வருமானம் தந்திருக்கிறது எனப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

செபி அமைப்பின் புதிய அறிமுகமான ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் பற்றிய கேள்விக்கு ஜீவன் கோஷி பதில் அளிக்கும்போது, “குறைந்தது ஐந்தாண்டுகளுக்குமேல் முதலீட்டுக் காலத்தைக் கொண்ட புதிய முதலீட்டாளர் களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றதாக இருக்கிறது. இந்த ஃபண்டின் ரிஸ்க் என்பது லார்ஜ்கேப் ஃபண்டைவிட சிறிது அதிகம். அதே நேரத்தில், அந்த ஃபண்டைவிட வருமானம் அதிகமாக இருக்கும்” என்றார். முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் விரிவாகப் பதில் அளிக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் காண: https://bit.ly/3uAyw80

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு