Published:Updated:

கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடாமல் ஓட்டினால் என்னவாகும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 வ.நாகப்பன், பி.வி.சுப்ரமணியம்
வ.நாகப்பன், பி.வி.சுப்ரமணியம்

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

''கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடாமல் ஓட்டினால், நாம் காயம் அடைவோம் இல்லையா? அது மாதிரி, முதலீட்டில் அஸெட் அலொகேஷன் என்பது மிக மிக முக்கியம். சம்பளம் மற்றும் சம்பாத் தியம் தவிர, இரண்டாவது வருமானத்துக்கு அனைவரும் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிகவும் சரியாக இருக்கும்’’ - நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய ‘சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் இப்படிப் பேசினார் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் எஸ்.குருராஜ்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆலோசகர் பி.வி.சுப்ரமணியம், ‘‘மனைவியிடம் சமையல் பற்றி கணவன் கேட்டுத் தெரிந்துகொள்கிற மாதிரி, கணவரிடம் முதலீடு பற்றி மனைவி கேட்டுத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் யாருக்காவது ஏதாவது நடந்தால் குடும்பத்தை அதிக சிக்கல் இல்லாமல் வழிநடத்திச் செல்ல முடியும்” எனச் சொன்னது அனைத்துக் குடும்பங்களிலும் பின்பற்ற வேண்டிய மிக நல்ல ஆலோசனை.

 வ.நாகப்பன், பி.வி.சுப்ரமணியம்
வ.நாகப்பன், பி.வி.சுப்ரமணியம்

‘‘முதலீட்டாளர்கள் தங்கள் ஊர்களில் இருக்கும் பிற முதலீட்டாளர்களுடன் கூடிப் பேசுவது அவசியம். சின்ன ஊரில்கூட நிறைய முதலீட்டாளர்கள் இப்போது இருக்கவே செய்கிறார்கள். நேரம், அறிவு, பொறுமை இருப்பவர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம். அப்படி இல்லையெனில், மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். சமீப காலமாக பிரபலமாகி வரும் இண்டெக்ஸ் ஃபண்டுகளை முழுவதும் புறந்தள்ள முடியும். அதிலும் தாராளமாக முதலீடு செய்யலாம்” என்றார், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் குழு விவாதத்தை வழி நடத்திச் சென்றார். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் நான்கு பேரும் பதில் அளித்தது சிறப்பான விஷயம்!

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க: https://bit.ly/3iMcURo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு