Published:Updated:

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஐ.வி.சுப்ரமணியம்
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஐ.வி.சுப்ரமணியம்

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் களுக்கு எப்போதும் உள்ள ஒரு பிரச்னை, சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எப்படித் தேர்வு செய்வது என்பதுதான். இந்த பிரச்னைக்குப் பதில் சொல்கிற மாதிரி நாணயம் விகடனும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்டும் இணைந்து ஆன்லைனில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தின.

இதில் முதலில் பேசினார் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம். ‘‘முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெற அஸெட் அலொகேஷன்படி, பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது அவசியம். கடந்த 30 ஆண்டுகளில் தங்கம் சராசரியாக ஆண்டுக்கு 9.5%, ஃபிக்ஸட் டெபாசிட் 6, பங்குச் சந்தை 15% வருமானம் தந்துள்ளன. முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் கிடைத்திருப்பதுடன், நீண்டகாலத்தில் ரிஸ்க்கைக் குறைத்து, எதிர்கால நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்ற முடியும்.

ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஐ.வி.சுப்ரமணியம்
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஐ.வி.சுப்ரமணியம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினியை நியமிப்பது மிக முக்கியம். அப்போதுதான் முதலீட்டாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அவர் யாருக்காக முதலீடு செய் தாரோ, அவர்களுக்கு அந்த முதலீட்டின் பலன் சரியாகப் போய்ச் சேரும். ஒரு முதலீட்டாளர், துணைவர் (கணவர்/மனைவி), பிள்ளைகள் என ஒட்டுமொத்தக் குடும்பத்தையே நாமினியாக நியமிப்பதுடன், யார் யாருக்கு, எத்தனை சதவிகிதம் கிடைக்க வேண்டும் என்பதையும் நாமினியை நியமிக்கும்போது குறிப்பிடலாம்” என்றார்.

முதலீட்டு ஆலோசகர் ஶ்ரீகாந்த் மீனாட்சி பேசும்போது, ``தொடர்ந்து நிலையான வருமானம் தந்துவரும் சந்தை இறக்கத்திலும் அதிக இறக்கம் காணாத மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற முடியும்’’ என்றார்.

இறுதியாக, முதலீட்டாளர்களின் சந்தேகங் களுக்கு நிபுணர்கள் இருவரும் விளக்கமாகப் பதில் அளிக்க, நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் காண https://bit.ly/3vSnUlP

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு