Published:Updated:

கடன் ஃபண்ட் லாபத்துக்கு டி.டி.எஸ் பிடிப்பார்களா?

 ஏ.கே.நாராயண், செந்தில்பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.கே.நாராயண், செந்தில்பாபு

முதலீடு

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘முதலீட்டுக் கலவை: கடன் ஃபண்ட் ஏன் முக்கியமானது?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் செந்தில்பாபு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டின் வகைகள், எப்போது எந்தக் கடன் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும், வரிக்குப் பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டைவிட கடன் ஃபண்டுகள் எப்படி லாபகரமாக இருக்கிறது என்பதை உதாரணத்துடன் விளக்கிச் சொன்னார்.

செந்தில்ராஜ்குமார் என்கிற முதலீட்டாளர், கடன் ஃபண்டுகளில் லாபத்தை வெளியே எடுக்கும்போது மூலத்தில் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே. நாராயண் (Aknarayanassociates.com) பதில் அளித்தார்.

 ஏ.கே.நாராயண், செந்தில்பாபு
ஏ.கே.நாராயண், செந்தில்பாபு

‘‘இந்தியக் குடிமக்களுக்கு குறுகிய கால மூலதன ஆதாயம் அல்லது நீண்ட கால மூலதன ஆதாயம் எதுவாக இருந்தாலும் டி.டி.எஸ் பிடிக்கமாட்டார்கள். முதலீட் டாளர்கள்தான் லாபத்தைக் கணக்கிட்டு வரிக் கட்ட வேண்டும். வழங்கப்படும் டிவிடெண்டுக்கு நிதி ஆண்டில் ரூ.5,000 தாண்டும்போது டி.டி.எஸ் பிடிப்பார்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் மூலதன ஆதாயத்துக்கு டி.டி.எஸ் பிடிப்பார்கள்” என பதில் அளித்தார்.

முகமது என்கிற முதலீட்டாளர், “ஒருவரின் முதலீட்டுக் கலவையில் கடன் ஃபண்டுகளுக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்க வேண்டும்” என்று கேள்வி கேட்க, அதற்கு செந்தில் பாபு, “பொதுவாக, 10% முதல் 20% இருக்கலாம். இது ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், வயது, முதலீட்டுக் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்” என்றார்.

முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் விரிவாக பதில் அளிக்க நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க https://www.facebook.com/NaanayamVikatan/videos/438906840950439