Published:Updated:

மணி மந்த்ரா @ மலைக்கோட்டை.. இளமையில் SIP, முதுமையில் SWP..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

மணி மந்த்ரா @ மலைக்கோட்டை.. இளமையில் SIP, முதுமையில் SWP..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாணயம் விகடனும் ஆதித்ய பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திருச்சியில் மணி மந்த்ரா @ மலைக் கோட்டை என்கிற தலைப்பில் நேரடியாக நடத்திய நிகழ்ச்சிக்கு திருச்சியில் உள்ள முதலீட் டாளர்கள் மட்டுமல்ல, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிதம்பரம் எனப் பல்வேறு ஊர்களில் இருந்து பல நூறு முதலீட்டாளர்கள் வந்து கலந்துகொண்டதைப் பார்த்த போது நமக்கே ஆச்சர்யம்!

மணி மந்த்ரா @ மலைக்கோட்டை..
இளமையில் SIP, முதுமையில் SWP..!

ஆதித்ய பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் (IE & DD - Content Development) எஸ்.குருராஜ், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு மந்திரங்களை மழைபோல பொழிந்தார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த நோட்டில் குறிப்பெடுத்துக்கொண்டனர்.

அடுத்து பேசிய பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், சந்தை இறங்கியிருக்கும் இந்த நிலையில், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எப்படி அணுகு முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றி வடிவேலு, விவேக், கவுண்டமணி படங்களுடன் பேச, முதலீட்டாளர் ரசித்துக் கேட்டனர்.

அடுத்து, ஆதித்ய பிர்லா சன்லைப் நிறுவனத்தின் தமிழகப் பிரிவின் மேலாளர் க.சுவாமிநாதன் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளைக் கேட்க, அதற்கு விரிவான பதிலைத் தந்தார்கள் நாகப்பனும் குருராஜும்.

இந்தக் கூட்டத்துக்கு இளைஞர்கள், இளம் பெண்கள், முதலீட்டாளர்கள் தங்கள் மனைவியுடன் குடும்ப சகிதமாக வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism