பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

SIP, STP, SWP வசதியை எப்போது பயன்படுத்தினால் லாபம்?

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

விழிப்புணர்வு

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP’ என்கிற தலைப்பில் மியூச்சுவல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தின.

முதலில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அடிப்படை விஷயங்கள் குறித்தும், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (SIP), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (STP), சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்.

மேலும், ‘‘வீட்டுக் கடனை கூடுதல் இ.எம்.ஐ கட்டி விரைந்து அடைப்பதுபோல், எஸ்.ஐ.பி முதலீட்டில் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது கூடுதல் முதலீடு செய்ய வேண்டும். அப்போது விரைந்து நிதி இலக்கு நிறைவேறும். மற்றும் தொகுப்பு நிதியும் அதிகமாகச் சேரும். சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது எஸ்.ஐ.பி முதலீட்டு முறையின் மூலம் அதிக லாபம் கிடைக்கும்” என்றார்.

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ‘‘எஸ்.ஐ.பி என்பதை ஒரு முதலீட்டுத் திட்டம் எனப் பலரும் தவறாக நினைக்கிறார்கள். எஸ்.ஐ.பி என்பது குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்ய உதவும் ஒரு முதலீட்டு முறையாகும்” என்று விளக்கினார்.

ஜீவன் கோஷி, கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போது, பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம், குறைவான வரி ஆகிய வற்றுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்ததாக இருக்கிறது. பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் ஓராண்டுக்குப் பிறகும் கடன் ஃபண்டுகளில் மூன்றாண்டுக்குப் பிறகும் முதலீடு பணவீக்க விகிதத்தைவிட அதிக மாகவும் வருமான வரி குறைவாகவும் இருக்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க... https://bit.ly/3JDmL8d