Published:Updated:

கிரிக்கெட் போட்டிக்கும் ஃபண்ட் முதலீட்டுக்கும் என்ன தொடர்பு?

 ஏ.கே.நாராயண்,  ஜீவன் கோஷி தரியன்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி தரியன்

விழிப்புணர்வு

கிரிக்கெட் போட்டிக்கும் ஃபண்ட் முதலீட்டுக்கும் என்ன தொடர்பு?

விழிப்புணர்வு

Published:Updated:
 ஏ.கே.நாராயண்,  ஜீவன் கோஷி தரியன்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி தரியன்

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘நிதித் திட்டமிடலில் சொத்து ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்..!’ என்ற நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் முதலில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன், ‘‘எப்போது, எந்த சொத்துப் பிரிவு எப்படிச் செயல்படும் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. அதனால்தான் அஸெட் அலொகேஷன்படி, முதலீட்டைப் பிரித்து செய்யும்படி சொல்கிறோம். கிரிக்கெட்டில் 6, 4 என ரன் எடுப்பது ரிஸ்க்கான ஈக்விட்டி ஃபண்டின் வருமானம் போன்றது. நிதானமாக விளையாடி 1, 2 என ரன் சேர்ப்பது ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்ட் வருமானத்துக்குச் சமம். ஒரு கிரிக்கெட் டீமில் வேகமாக விளையாடும் வீரர்களும், நிதானமாக விளையாடும் வீரர்களும் இருக்க வேண்டும். அதேபோல, நாம் முதலீட்டை ஈக்விட்டி, டெப்ட், தங்கம் என பிரித்து செய்ய வேண்டும்.

ஏ.கே.நாராயண்,  ஜீவன் கோஷி தரியன்
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி தரியன்

ஒரு முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்க அஸெட் அலொகேஷன் முக்கியமான காரணி ஆகும். அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளில் பங்குச் சந்தை மந்தமாக இருக்கும் கால கட்டத்தில் பங்குகளில் முதலீடு அதிகமாக இருக்கும். இதுவே, பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது பங்குகளில் முதலீடு குறைக்கப் படும். இதனால், இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைக் கப்பட்டு, வருமானம் அதிகரிக்கப்படுகிறது’’ என விளக்கம் தந்து பேசினார் ஜீவன் கோஷி.

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ‘‘கோல்டு இ.டி.எஃப் திட்டத்தைக் காகிதத் தங்கம் என்கிற மாதிரி, ரெய்ட் (REIT -Real Estate Investment Trust) திட்டத்தைக் காகித ரியல் எஸ்டேட் என்று சொல்லலாம். இந்த ரெய்ட் திட்டமானது செபியின் அங்கீகாரம் பெற்றதாகும். வீடு, மனை வாங்கி வருமானம் பெற நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். தங்கத்தை அணிந்து அழகு பார்க்கிற அளவுக்கும் குடியிருக்க ஒரு வீடு இருந்தால் போதும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க https://bit.ly/3zHQ1bc