Published:Updated:

6 மாதங்களில் 35% சரிந்த ஐ.டி இண்டெக்ஸ்... முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

ஐ.டி  இண்டெக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி இண்டெக்ஸ்

கவர் ஸ்டோரி

6 மாதங்களில் 35% சரிந்த ஐ.டி இண்டெக்ஸ்... முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

கவர் ஸ்டோரி

Published:Updated:
ஐ.டி  இண்டெக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி இண்டெக்ஸ்

அமெரிக்கா 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் பணவீக்க உயர்வுக்கு ஆளாகியுள்ள சூழலில், தொடர்ச்சியாக வட்டி விகித உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார சூழல், பணப்புழக்கம், தொழில் விரிவாக்க நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் சிக்கலில் இருந்துவருகிறது. இந்தக் காரணங்களால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக அதிகரித்துவருகிறது.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி உண்டாகும்பட்சத்தில் அதனால் முதலில் பாதிக்கப்படும் துறையாகத் தகவல் தொழில் நுட்பத்துறை உள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால், அமெரிக்காவைப் பெருமளவு சார்ந்துள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அது மிகப்பெரிய அடியாக இருக்கலாம். அப்போது ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சி பாதிப்படைந்து, அந்த நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவுக்குள்ளாக வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஜனவரியிலிருந்தே பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும், ஐ.டி துறை பங்குகளும், ஐ.டி துறை இண்டெக்ஸும் அதிக இறக்கத்தைச் சந்தித் துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் ஐ.டி இண்டெக்ஸ் சுமார் 35% வரை சரிவைச் சந்தித்துள்ளது. ஜனவரியில் 40,000 புள்ளிகளாக இருந்த ஐ.டி இண்டெக்ஸ், இப்போது 26,000 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகிறது. இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா உள்ளிட்டவை அவற்றின் 52 வார அதிகபட்ச இறக்க விலையில் வர்த்தகமாகின்றன. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர், செபி சான்றளிக்கப்பட்ட ரிசர்ச் அனலிஸ்ட் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது...

சரிவு தற்காலிகமானதே...

“தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, அதன் தேவை என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. பொருளாதாரத்தில் எந்த மாதிரியான நெருக்கடிகள் வந்தாலும் அதை சரிசெய்வதில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. எனவே, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனப் பங்குகளின் சரிவானது தற்காலிகமானதாகவே இருக்கும் எனலாம்.

வங்கித்துறை, நிதித்துறை மற்றும் காப்பீட்டுத்துறை ஆகியவை பணவீக்கத்தின் போக்குக்கு எதிர்மாறாகத் தொடர்ந்து தொழில்நுட்பத்துக்கான செலவுகளைச் செய்துவந்துள்ளன. இதுவரை மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களிலும் தொழில் நுட்பங்களுக்கான செலவுகளை இந்தத் துறைகள் மட்டுமல்லாமல், பிற துறைகளும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்கும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியம்.

இது தகவல் தொழில்நுட்பத் துறைக்குச் சாதகமான எதிர்காலத்தை உருவாக்கி, அந்த நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை ஆரோக்கியமான போக்கில் கொண்டு செல்லும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

6  மாதங்களில் 35% சரிந்த  ஐ.டி  இண்டெக்ஸ்... முதலீட்டாளர்கள் இனி  என்ன  செய்யலாம்?

கவனிக்க வேண்டிய பங்குகள்...

அதே சமயம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலால் குறுகிய காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் போக்கு சற்று பிரச்னைக்குரியதாக இருக்கலாம்’’ என்றவர், நீண்டகால அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள் சிலவற்றை நமக்கு தந்தார். அந்தப் பங்கு நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் இனி...

இன்ஃபோசிஸ்...

பிரபல ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸ் கடந்த சில ஆண்டு களாக சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், டி.சி.எஸ்-வுடனான அதன் லாப வளர்ச்சி இடைவெளியைக் குறைக்கும் வகையில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மேலும், நிறுவனத்தின் பணவரவு தொடர்ந்து ஆரோக்கியமானதாக இருக்கிறது. கூடவே, வலுவான மூலதன ஒதுக்கீட்டையும் கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு வரும் பணவரவில் 85% டிவிடெண் டாகவோ, பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டத்துக்காகவோ பயன்படுத்தப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பைப் பொறுத்தவரை, 2024 வரை அதன் வருவாய் மற்றும் வரிக்குப் பிறகான லாபம் 16% ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்துடன் இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும், இதன் பங்கு மதிப்பும் அதன் 5 ஆண்டு சராசரி பி/இ-க்கு அருகில் உள்ளது. எனவே, நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கு பாசிட்டிவான போக்கில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டெக் மஹிந்திரா...

டெக் மஹிந்திராவின் நிகர புதிய தொழில் ஒப்பந்தங்கள் 2022 நிதி ஆண்டில் 3.28 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டைவிடவும் 48% அதிக மாகும். மேலும், ஒரு பில்லியன் டாலருக்கு மேலான நிகர புதிய தொழில் ஒப்பந்தங் களைத் தொடர்ச்சியாகப் பெறும் நிறுவனமாகவும் இது உள்ளது.

கூடுதலாக, கிளவுட், 5ஜி மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. (இதில் இரட்டை இலக்க வளர்ச்சி யைக்கூட எதிர்பார்க்கலாம்). மேலும், இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களுடனான ஒப்பந்தங்களால் இதன் வருவாய் வளர்ச்சி 2022-2024 வரையிலான காலத்தில் 12.4% அடிப்படையில் சராசரி கூட்டு வருடாந்தர வளர்ச்சி யைக் கொண்டிருக்கும். இதனால் நிறுவனத்தின் லாப வளர்ச்சியும் 15% என்னும் அளவில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதன் பங்கு மதிப்பும் அதன் 5 ஆண்டு சராசரி பி/இ-க்கு அருகில் இருப்பதால், நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கு பாசிட்டிவ்வான போக்கில் இருக்கும்.

ஏ.கே.பிரபாகர்
ஏ.கே.பிரபாகர்

எல் அண்ட் டி & மைண்ட்ட்ரீ...

எல் அண்ட் டி, மைண்ட் ட்ரீ நிறுவனங்களின் இணைப்பு, தகவல்தொழில் நுட்பத் துறையில் 3.5 பில்லி யன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கும். இணைப்புக்குப் பிறகான இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவில் 69% பங்களிப் பையும், ஐரோப்பாவில் 17% பங்களிப்பையும், உலகின் பிற நாடுகளில் 14 % பங்களிப்பையும் கொண்டிருக்கும்.

இந்த நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கை அதன் வருவாய் வளர்ச்சி, செலவினங்கள் குறைப்பு ஆகியவற்றில் ஆரோக்கிய மான சாத்தியங்களை உண்டாக்கும். மேலும், இந்த நிறுவனம் புதிய தொழில் ஒப்பந்தங்களைப் பெறுவதி லும் சிறப்பாகச் செயல்படும். துறை சார்ந்த தொழில் நடவடிக்கைகளில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு வீரியத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இதன் பங்கு மதிப்பும் அதன் 5 ஆண்டு சராசரி பி/இ-க்கு அருகில் இருப்பதால், நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கு பாசிட்டிவ்வான போக்கில் இருக்கும்.

பிர்லா சாஃப்ட்...

இந்த நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தங்கள் மிகவும் ஆரோக்கியமான போக்கில் உள்ளன. வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை, டிமாண்ட் ஆகியவையும் நிறுவனத்துக்குச் சாதகமாக உள்ளன. இந்த நிறுவனத் தின் வருவாய் வளர்ச்சி 2022-ம் நிதி ஆண்டைவிடவும் 2023-ம் நிதி ஆண்டில் 16% அதிகமாகவும், அதேபோல் லாப வளர்ச்சி 15.5% அதிகமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் மதிப்பை 2025-ம் நிதி ஆண்டுக்குள் 1 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்து வதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளது. இதற்கான 15% வளர்ச்சியை நோக்கி செயல்படுவதுடன், 150 மில்லியன் டாலர் மதிப்பிலான கையகப்படுத்தல் திட்டத்தையும் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் லாப வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் 0.5% வளர்ச்சியுடன் 2024-ம் நிதி ஆண்டுக்குள் 16% வளர்ச்சி விகிதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நிறுவனத்திலிருந்து வெளியில் வழங்கப்படும் ஒப்பந்தங்களுக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பங்கு நீண்டகால அடிப்படையில் பாசிட்டிவ் போக்குடன் இருக்கிறது.

சென்சர் (Zensar)

தொடர்ச்சியான தொழில் ஒப்பந்தங்கள் காலாண்டு அடிப்படை யில் 32% வளர்ச்சியுடன் ஆரோக்கியமான போக்கில் இருக்கிறது. இதனால் இந்த நிறுவனத் தின் வருவாய் வளர்ச்சி யும் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து வாடிக்கை யாளர்கள் வட்டமும் விரிவடைகிறது. தலைமைப் பொறுப்பு களுக்கு புதிய திறமை யான நபர்களைக் கொண்டுவருவது, விற்பனை வளர்ச்சி, ஹைப்பர்ஸ்கேல் பார்ட்னர்ஷிப் ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளாக உள்ளன. இதன்மூலம் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 2022-24 வரையிலான காலத்தில் 13.7% என்ற ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில் இருக்குமென எதிர்பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சியும் குறுகிய காலத்தில் 15 - 17 சதவிகிதத்திலும், நீண்ட காலத்தில் 16 - 19 சதவிகிதத்திலும் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பங்கு நீண்டகால அடிப்படையில் பாசிட்டிவ் போக்குடன் உள்ளது. மேற்சொன்ன இந்த நான்கு பங்குகளையும் நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்கள் கவனிக்கலாம்” என்று சொல்லி முடித்தார் ஏ.கே.பிரபாகர்.

6  மாதங்களில் 35% சரிந்த  ஐ.டி  இண்டெக்ஸ்... முதலீட்டாளர்கள் இனி  என்ன  செய்யலாம்?

கவனிக்க வேண்டிய ஃபண்டுகள்..

பங்குகளைப் போலவே, ஐ.டி செக்டார் ஃபண்டுகள் குறித்து மை அஸெட் கன்சாலி டேஷன் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் பார்த்த சாரதியிடம் கேட்டோம்.

“உலகம் முழுவதும் டிஜிட் டல் மயமாக மாறிவரும் சூழலில் ஐ.டி துறை நிறுவனங் களுக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கும். பல மேலை நாடு களில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால், அவர்களுடைய வர்த்தகம் சற்று வேகம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் அவற்றின் பங்கு விலையும், ஐ.டி சார்ந்த ஃபண்டுகளும் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை பின்னடைவு அடைய வாய்ப்புள்ளது.

அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் அளவுக்கு அதிக வருமானம் தந்ததுபோல, இனிவரும் காலத்தில் அதிக வருமானத்தைத் தர இயலாமல் போகலாம். பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் அமெரிக் காவில் நுகர்வோர் பொருள்கள், நிதிச் சேவைகள், எனர்ஜி, டெலிகாம், மெடிக்கல் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறை களில் இந்திய ஐ.டி கம்பெனிகள் பெருமளவில் வியாபாரத்தைப் பெறுகின்றன.

6  மாதங்களில் 35% சரிந்த  ஐ.டி  இண்டெக்ஸ்... முதலீட்டாளர்கள் இனி  என்ன  செய்யலாம்?

அமெரிக்காவில் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டால், ஐ.டி கம்பெனிகளுக்கு ஆர்டர் கள் கிடைப்பது குறைந்து போகலாம். எனவே, இதை மனதில் வைத்துக்கொண்டு மூன்றாண்டுகளுக்கு மேல் முத லீட்டைத் தொடங்குவதுதில், ஐ.டி செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஃபண்டில் முதலீடு செய்யும் போது நாம் பரவலாக டைவர் சிஃபைடு ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்தது. அதே வேளையில், நாம் சிறிது அளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் எனில், செக்டார் அல்லது தீமெட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இவற்றில் சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால், இவை பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு தகுந்தாற்போல் அதிக அளவில் இறங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஃபண்டுகளில் நாம் சரியான நேரத்தில் பணத்தை எடுக்கவில்லை எனில், 2 - 3 ஆண்டுகள்கூட இவை தொடர்ந்து சுமாரான வருமானத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் பல பிசினஸ்கள் தடுமாற்றத்தைக் கண்டன. ஆனால், ஐ.டி கம்பெனிகள் பலவும் நல்ல லாபத்தை ஈட்ட முடிந்தது. ஆகையால், அந்த வகை பங்குகள் அதிக லாபத் தைக் கொடுத்தன.

ஐ.டி ஃபண்டுகள் கடந்த மூன்றாண்டுகளில் குறைந்த பட்சமாக 19%, அதிகபட்சமாக 29% லாபம் தந்துள்ளன. அதே போல, ஐந்து வருட காலத்தில் குறைவாக 19 சதவிகிதமும் அதிகமாக 27 சதவிகிதமும் தந்துள்ளன. அதே வேளையில், லார்ஜ்கேப் ஃபண்டுகள் குறைந்தபட்சமாக 4.3 சதவிகித மும் அதிகபட்சமாக 17 சத விகிதமும் கொடுத்துள்ளன.

சுரேஷ் பார்த்த சாரதி
சுரேஷ் பார்த்த சாரதி

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவெனில், செக்டார் ஃபண்டுகள் அதிக வருமானத்தைக் தர வாய்ப்புள்ளது. அதே போல, சந்தை சரியும்போது அதன் வீழ்ச்சியும் அதிகமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் அதிகமாக ஏற்றம் இறக்கம் இருக்கும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது சிறந்தது. ஏனென்றால், மார்க்கெட் அதிக மாக இறங்கும்போது அதிக யூனிட்களைப் பெற முடியும். ஆகையால் அது நீண்டகால அடிப்படை யில் அதிக வருமானத்தை ஈட்டித் தர வாய்ப்புள்ளது.

மார்க்கெட் இறங்குமுகமாக இருக்கும்போது எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டில் இறக்கத்தின் தாக்கம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. உதாரண மாக, மூன்று ஃபண்டுகளை எடுத்தால் கடந்த ஐந்து ஆண்டு காலத்துக்கு மாதம் ரூ.5,000 வீதம் முதலீடு செய்துவந்தால், உங்கள் முதலீடு ரூ.3 லட்சமாக இருக்கும். ஆனால், இன்று அதன் மதிப்பு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.5.2 லட்சமும் அதிகபட்சம் ரூ.5.6-8 லட்சமாகவும் இருக்கும். அதாவது, 22 % - 26% வரை இவ்வகை ஃபண்டுகள் வருமானம் தந்திருப்பதைப் பார்க்கலாம்.

ஐ.டி ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோ

இந்தியாவில் இருக்கும் ஐ.டி ஃபண்டுகள் பெரும் பாலும் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, ஹெச்.சி.எல், டெக் மஹிந்திரா வில் அதிக முதலீடு செய் கின்றன. இவற்றின் பங்களிப்பு ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 60 - 70% வரை உள்ளன.

சந்தையில் பல ஆண்டு முதலீடு செய்து, ஏற்ற இறக்கத்தைப் புரிந்து கொண்டு, கூடுதலாக ரிஸ்க் எடுக்க முடியும் என்ற முதலீட்டாளர் களுக்கு மட்டுமே செக்டார் ஃபண்டுகள் உகந்தது. அத்துடன் செக்டார் ஃபண்டின் போக்கு தெரிந்திருந்தால் உங்களால் அதிக அளவு வருமானம் ஈட்ட முடியும். இருப்பினும், ஆரம்பத்தில் நம் முதலீட்டில் அதிகபட்சமாக 10% இவ்வகையான ஃபண்டில் முதலீடு செய்யலாம். அத்துடன் மிக அதிகமான வருமானம் கிடைக்கும்போது, வருமானத் தைக் கொஞ்சம் வெளியில் எடுப்பது சிறந்தது’’ என்று பேசி முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.

ஐ.டி பங்குகளிலும் ஃபண்டுகளிலும் முதலீடு செய்திருப்பவர்கள் இதை எல்லாம் கவனிக்கலாமே!