Published:Updated:

நகைச்சீட்டு இப்போது வேண்டவே வேண்டாம்... ஏன்? - சில உஷார் டிப்ஸ்

நகை
நகை

கோவிட்-19 காலத்தில் நகைச் சீட்டு சேர்வது உச்சபட்ச ஆபத்து.

சிறிய நகைக்கடைகள் முதல் பல கிளைகளைப் பரப்பியிருக்கும் நகைக் கடைகள் வரை நகைச்சீட்டில் முதலீடு செய்வது ஆபத்துதான். காரணம், பல வர்த்தக நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. சில காலத்துக்கு முன்னால் ஒரு பிரபல நகைக்கடை இதே போன்று மூடப்பட்டது நினைவிருக்கலாம். அதில் சீட்டு போட்டிருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் முதலீடு திரும்ப கிடைக்கவேயில்லை.

முதலீடு செய்த இடத்தில் ஏதோ பிரச்னையாகி விட்டது என்றால் என் பணத்தை மீட்பதற்கு எங்கு போய் நிற்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

வங்கிகளில் செய்யப்பட்ட முதலீட்டில் ஏதாவது பிரச்னை என்றால் ரிசர்வ் வங்கி தீர்வளிக்கும். இதுபோன்று நகைக்கடைகளில் சீட்டுப் போட்டு பணத்தை இழந்தால் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். நீதிமன்றத்துக்குச் சென்றால் அதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது நாமறிந்ததே.

வேலையிழப்பு, குறைந்த சம்பளம் போன்ற சூழல் நிலவும் நேரத்தில் ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதே சிறந்தது.

கொரோனாவுக்குப் பிறகான புதிய இயல்பு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்காது... குறிப்பாக, பெண்களுக்கு. கோவிட்-19 பெருந்தொற்று 1.2 கோடி இந்தியர்களை வறுமைக்குத் தள்ளும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது.

முதலீடு
முதலீடு

புதிதாக வறுமைக்குள் விழுவோரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும். இதன் பாதிப்பு, வீடுகளின் நலன், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பு அனைத்தையும் பாதிக்கும். மேலும், அடுத்த தலைமுறையினரின் பள்ளிப் படிப்பில் பாதிப்பு, சுகாதாரத்தில் பெரிய பின்னடைவு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு மற்றும் முதலீட்டைச் சரியாகத் திட்டமிட்டால், பெண்களால் ஓரளவு இந்தத் துயரத்திலிருந்து மீள முடியும். பொதுவாகவே, பெண்களின் முக்கிய முதலீடாகவும் சேமிப்பாகவும் இருப்பது தங்கம்தான். நகைக்கடைகளில் மாதாமாதம் சிறிய தவணைத் தொகையைச் செலுத்தி ஓராண்டு முடிவில் நகை வாங்குவார்கள். நிலையற்ற தன்மை நிலவுவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாலும் தவணை செலுத்தி நகை வாங்குவதை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

`அப்படியென்றால் பெண்கள் சேமிப்புக்காக எதில் முதலீடு செய்யலாம்?' என்ற கேள்வியுடன் பிரைம் இன்வெஸ்டர் அமைப்பின் இணை நிறுவனர் வித்யா பாலா அடுக்கும் வழிகாட்டுதல்களை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > நிலையற்ற காலம்... நிதானமான முதலீடு... உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்! https://bit.ly/32Ex72M

நிலையற்ற காலம்... நிதானமான முதலீடு... உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்! https://bit.ly/32Ex72M

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
அடுத்த கட்டுரைக்கு