Election bannerElection banner
Published:Updated:

`சார்ஸ்' தந்த மூன்று பாடங்களும், தொழில் - வேலையில் கொரோனா நிகழ்த்திய மாற்றமும்!

கொரோனா
கொரோனா

உலக அளவில் நாம் சந்திக்கும் கொரோனா வைரஸ் போன்ற சவால்கள், அவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மீறி சில மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

உலக அளவில் கொரோனோ போன்ற சவாலை மனித இனம் சந்திப்பது இது முதன்முறை அல்ல. 2003-ம் ஆண்டு `சார்ஸ்' உலகத்தை உலுக்கியபோது, உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) ஆய்வு செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதிலிருந்து சில பாடங்களை நாம் கற்கலாம்.

முதலாவது பாடம்... உலகம் முழுவதும் பரவக்கூடிய ஆப‌த்திருக்கும் நோய்கள் பற்றித் தெரியவரும்போது, அவை குறித்து உடனே தகுந்த நிர்வாகிகளிடம் தெரிவிப்பது.

இரண்டாவது பாடம்... பயணம் தொடர்பானது. குறிப்பாக, விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை செய்வது. இதைச் சரியாகச் செய்தால் உள்நாட்டில் நோய் அதிகம் பரவாமல் தடுக்கலாம்.

மூன்றாவது பாடம்... விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் அதிகாரிகள் இது போன்ற நேரத்தில் ஒரு போட்டியாகப் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் நோய் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது.

`சார்ஸ்'  தந்த மூன்று பாடங்களும், தொழில் - வேலையில் கொரோனா நிகழ்த்திய மாற்றமும்!

நாம் வருத்தப்பட வேண்டியது, `சார்ஸி'லிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளாதது. நோய் பரவாமலிருக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததற்கான உதாரணங்களும் இருக்கின்றன. சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் செல்லத் தடை, உலகத்தரமான சுகாதாரம், பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல், விதிமுறைகளை மீறுபவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற கறாரான முயற்சிகள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்படாமல் நிலைமையைக் கையாண்டது சிங்கப்பூர் அரசு. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/3b1fg8Q

நம் நாட்டில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கேரளா. கேரள அரசு வெளிநாடு சென்று திரும்பியவர்களில் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, பூரண‌ குணமடையும் வரை அவர்களைக் கண்காணித்து நோயைக் கட்டுப்படுத்தியது.பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நோய் உருவாகும் ஊரில் கிடைக்கும் முக்கியமான தகவல்களைப் புறக்கணிக்காமல் பயன்படுத்துவது.

உலக அளவில் நாம் சந்திக்கும் கொரோனா வைரஸ் போன்ற சவால்கள், அவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மீறி சில மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் ஒரு மாற்றம் நாம் வேலை செய்யும் விதத்திலும் நிகழ்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வீட்டிலிருந்து வேலை செய்வது புதிதல்ல. ஆனால், இந்த நோயால் மற்ற துறைகளும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் நிலை உருவாகும். உலகின் எந்த மூலையிலிருந்தும் தங்கள் சக ஊழியர்களிடம் தொடர்புகொண்டு, வேலையை முடிக்கும் பழக்கம் அதிகரிக்கும்.

`சார்ஸ்'  தந்த மூன்று பாடங்களும், தொழில் - வேலையில் கொரோனா நிகழ்த்திய மாற்றமும்!

- இன்றைக்கு தொழில்துறை நிர்வாகிகள் மட்டுமல்ல, வலுவான நாடுகளின் தலைவர்களும்கூட தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு பயப்படுவது ஆயுதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்காக அல்ல... சீனாவிலிருந்து கிளம்பியிருக்கும் கொரோனா வைரஸுக்கு. அதுதான் இப்போது உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது.

`கொரோனா வைரஸால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என்ன... அதிலிருந்து மீண்டுவர என்ன செய்வது...' என்பது பலருடைய கேள்வி.

- இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறார், Infosys Knowledge Institute தொழில்நுட்ப ஆலோசகர் சு.ராமச்சந்திரன். நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள அந்தச் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > தொழில்துறையைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்! - சமாளிக்கும் வழிமுறைகள் https://www.vikatan.com/business/news/how-the-industry-can-come-back-from-the-damage-caused-by-corona-virus

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு