Published:Updated:

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... நிராகரிக்கப்பட்ட 10 லட்சம் விண்ணப்பங்கள்!

எல்.ஐ.சி ஐ.பி.ஓ
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி ஐ.பி.ஓ

ஐ.பி.ஓ

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... நிராகரிக்கப்பட்ட 10 லட்சம் விண்ணப்பங்கள்!

ஐ.பி.ஓ

Published:Updated:
எல்.ஐ.சி ஐ.பி.ஓ
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி ஐ.பி.ஓ

எல்.ஐ.சி பங்குகளை வாங்க விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், விண்ணப் பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஐ.பி.ஓ-வில் சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் வந்த விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 7.34 மில்லியன். ஆனால், இதில் 6 - 6.5 மில்லியன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும், மற்ற விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நிராகரிக்கப்பட இருப்பதாகவும் எல்.ஐ.சி நிறுவனத்தின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, கிட்டத்தட்ட 10 லட்சம் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக 2008-ம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ வெளியானபோது 4.8 மில்லியன் விண்ணப்பங்கள் பங்குகள் வேண்டி வந்திருந்தன. அதற்கு பிறகு ஏற்றுக்கொள்ளப் பட்ட விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்திருப்பது எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்குதான்.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ... நிராகரிக்கப்பட்ட 10 லட்சம் விண்ணப்பங்கள்!

கடந்த ஆண்டில் வெளியான ஸொமேட்டோ நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டில்கூட இதே போல 30% விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. பொதுவாக, ஐ.பி.ஓ வெளியீட்டின் போது இது போன்ற நிராகரிப்பு விண்ணப்பங் களின் எண்ணிக்கை ஓரளவுக்கு இருக்கும். ஆனால், ஐ.பி.ஓ வரலாற்றிலேயே எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

முதலீட்டாளர்கள் தொடர்பான விவரங் களில் தவறுகள் செய்வது, பணப் பரிவர்த்த னையில் ஏற்படும் சிக்கல்கள், குறிப்பாக, யு.பி.ஐ பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் தொழில் நுட்பக் குறைபாடுகள் போன்ற பல காரணங் களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுவதாக இந்த ஐ.பி.ஓ-வை நடத்திய முதலீட்டு வங்கிகள் சொல்கின்றன.

வருகிற 17-ம் தேதி அன்று பங்குச் சந்தையில் எல்.ஐ.சி பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கும். அதற்கு முன்பே, ஒவ்வொரு விண்ணப்ப தாரருக்கும் எல்.ஐ.சி-யின் எத்தனை பங்குகள் கிடைக்கும் என்கிற தகவல் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism