நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எல்.ஐ.சி எம்.எஃப் வெளியிடும் புதிய ஃபண்ட்... ரூ.1,500 கோடி நிதி திரட்ட இலக்கு..!

 டி.எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.எஸ்.ராமகிருஷ்ணன்

மியூச்சுவல் ஃபண்ட்

கடந்த 33 ஆண்டு களுக்கும் மேலாக கடன், ஈக்விட்டி, ஹைபிரிட், பேசிவ் போன்ற பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை முதலீட்டாளர்களுக்கு வழங்கிவரும் எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தற்போது முதன் முறையாக மல்ட்டிகேப் பிரிவில் புதிய ஃபண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.10 என்.ஏ.வி மதிப்பு கொண்ட இந்த ஃபண்ட், கடந்த வாரம் என்.எஃப்.ஓ விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஃபண்ட் மூலம் ரூ.1,500 கோடி திரட்ட திட்டமிட் டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட ஃபண்ட் குறித்தும் பங்குச் சந்தையின் போக்கு குறித்தும் பேசினோம்.

“1989-ல் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் பல ஆண்டுகளாகவே கடன் சார்ந்த ஃபண்டுகளிலேயே கவனம் செலுத்திவந்தது. கடந்த மூன்று வருடங்களாகத் தான் ஈக்விட்டி பிரிவில் தீவிரமாகக் களம் இறங்கி இருக்கிறோம். பங்குச் சந்தை யின் போக்குக்கேற்ப முதலீட் டாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஃபண்டுகளை அறிமுகப் படுத்தி வருகிறோம். அந்த வகையில், எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்டில் கடன், ஈக்விட்டி, ஹைபிரிட், பேசிவ் என 27 வகையான ஃபண்டுகள் உள்ளன. இப்போது மல்ட்டி கேப் பிரிவில் புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.”

 டி.எஸ்.ராமகிருஷ்ணன்
டி.எஸ்.ராமகிருஷ்ணன்

புதிய மல்ட்டிகேப் ஃபண்ட் குறித்து சொல்லுங்கள்?

‘‘மல்ட்டிகேப் பிரிவில் முதன்முறையாக ஒரு பண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த ஃபண்டில் லார்ஜ்கேப் பங்குகளில் 25%, மிட்கேப் பங்குகளில் 25%, ஸ்மால்கேப் பங்குகளில் 25% என முதலீடுகள் பிரித்து மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 25% முதலீடுகள் பங்குச் சந்தையின் போக்குக்கு எற்ப ஃபண்ட் மேனேஜர் களின் ஆய்வின் அடிப் படையில் ரிஸ்க்கைக் குறைத்து ரிட்டர்னை அதிகப் படுத்தும் வகையிலான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யப்படும். மேலும், பி.இ விகிதம் மட்டும் இல்லாமல் பி.இ.ஜி (PEG) விகிதமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த ஃபண்டின் முதல் கட்ட விற்பனை அக்டோபர் 6 தொடங்கி அக்டோபர் 20 வரை நடக்கிறது. மீண்டும் நவம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.’’

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடந்த ஆண்டில் அறிவித்த 5 ஆண்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

‘‘நிறுவனத்தின் மொத்த நிர்வகிப்பு சொத்து மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டு வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மார்ச் 2022-ல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ரேங்கிங் பட்டியலில் எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் 22-ம் இடத்தில் உள்ளது.

கடந்த 5 வருடங்களில் டாப் 10 இடங்களுக்குள் கொண்டு வர இலக்கு வைத்திருக்கிறோம். தற்போது நிறுவனத்தின் மொத்த நிர்வகிப்பு சொத்து மதிப்பு ரூ.18,000 கோடி அளவில் உள்ளது. இதில் 65% கடன் சார்ந்த ஃபண்டுகளே உள்ளன. பங்குச் சார்ந்த ஃபண்டுகள் 35 சதவிகிதமாக உள்ள நிலையில், இதை 45 சதவிகிதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக புதிய ஃபண்டுகளை அறிமுகப்படுத்து வதுடன், பிற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்டுகளைக் கையகப்படுத்தும் திட்டமும் வைத் திருக்கிறோம். முதல் கட்டமாக, ஐ.டி.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் 22 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டிருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.’’

இப்போது பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?

‘‘பங்குச் சந்தை பல்வேறு சர்வதேச மற்றும் பொரு ளாதார காரணங்கள் சார்ந்து இயங்கக் கூடியது. ஏற்ற இறக்கங்கள் என்பதுதான் அதன் இயல்பு. இதை மிகத் தெளிவாக முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டிருக் கிறார்கள். ஊடகங்கள் மூலமாகவும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மூலமாகவும் முதலீட் டாளர்கள் பங்குச் சந்தை சார்ந்தும், மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்தும் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்.

இப்போது உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி குறித்த அச்சம் நிலவுகிறது. வாரன் பஃபெட் குறிப்பிடுவது போல, எல்லோரும் பயப்படுகிற நேரத்தில்தான் நாம் முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருந்தாலும் இதை மனதில் வைத்தே செயல்பட வேண்டும்."