Published:Updated:

விரைவாக கோடீஸ்வரர் ஆக உதவும் 3 தங்க விதிமுறைகள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 25

விரைவாக கோடீஸ்வரர் ஆக உதவும் 3 தங்க விதிமுறைகள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 25

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

இன்றைய நம் வாழ்க்கை மிகவும் விரைவானதாக மாறியிருக்கிறது. உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் வீட்டு வாசலுக்கு வர வேண்டும் என நினைக் கிறோம். பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் திரைப்படத்தைப் பார்க்கும்போது, பாட்டு வந்தால், அதை உடனே ஃபார்வேர்டு செய்துவிடுகிறோம்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

இதே மாதிரி, கோடீஸ்வரர் ஆவது, செல்வம் சேர்ப்பது எல்லாவற்றையும் வேகமாக, விரை வாக செய்ய வேண்டும் என நினைக்கிறோம். அண்ணாமலை படத்தில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆகிவிடுகிற மாதிரி, பலரும் குறுகிய காலத்தில் பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஒரே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது ஒரே ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என நினைப்பவர்கள் நம்மிடையே நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஒருவர் விரைவாக கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், மூன்று தங்கமான விதிமுறை களைப் பின்பற்ற வேண்டும். அந்த மூன்று விதிமுறைகள் என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

1. உங்களின் முதலீட்டு வெற்றி, தோல்விக்கு நீங்களே பொறுப்பு

நம்மில் பலர் முதலீட்டில் லாபம் கிடைத் தால், அதற்கு என் திறமைதான் காரணம் என்பார்கள். தோல்வி அடைந்தால் பிறர் மீது பழி போடுவார்கள். ‘என் குடும்பம் எனக்கு முதலீடு பற்றி சொல்லித் தரவில்லை. நான் படித்த படிப்பு சரியில்லை. சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அரசு சரியில்லை’ என்பார் கள். ‘நான் அமெரிக்காவில், ஐரோப்பாவில் பிறந்திருந்தால் முதலீட்டில் பயங்கரமாக லாபம் சம்பாதிருப்பேன்’ என ஏதேதோ காரணங்களை அடுக்குவார்கள்.

ஒருவர் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவரின் வெற்றி, தோல்விக்கு அவர் யாரை வேண்டுமானாலும் காரணம் சொல்லலாம், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்து அல்லது தொழில் தொடங்கி சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார் எனில், அவரின் முதலீட்டு வெற்றி மற்றும் தோல்விக்கு அவர்தான் காரணமே தவிர, வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.

உங்கள் வாழ்க்கையின் வெற்றி, தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம். உங்களுக்குத் திறமை இல்லையா, ஏழையாக இருக்கிறீர்களா, திறமைசாலியாக இருக்கிறீர்களா, பணக் காரராக இருக்கிறீர்களா..? எல்லாவற்றுக்கும் நீங்களே காரணம்.

முதலீட்டில் லாபம் ஈட்டும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அதை மேம்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான், முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோவாக இருக்க வேண்டும். வேறு யாராவது உதவிக்கு வருவார்களா என எதிர்பார்த்தால், நீங்கள் ஹீரோ அல்ல; சப்போர்ட்டிங் ஆக்டர் தான்.

விரைவாக கோடீஸ்வரர் ஆக 
உதவும் 3 தங்க விதிமுறைகள்..!

2. ரிஸ்க் எடுத்தால்தான் ரிவார்டு...

தொழில் ஆகட்டும் அல்லது முதலீடு ஆகட்டும், ரிஸ்க் எடுப்பது அவசியமாகும். நிறுவனப் பங்குகளில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறீர்கள் எனில், அதன் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு (Volatility) உள்ளாகும். எந்த ஈக்விட்டி முதலீட்டை எடுத்துக் கொண்டாலும் ஏற்ற, இறக்கம் என்பது இருக்கத்தான் செய்யும். மிகப் பாதுகாப்பான முதலீடு என்று சொல்லப்படும்

தங்கத்தின் விலையிலும் ஏற்ற, இறக்கம் நிறையவே உண்டு. அந்த ஏற்ற, இறக்கத்தை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், பங்குச் சந்தைப் புள்ளிகள் கொஞ்சம் இறங்கினாலும், நாம் பதற்றம் அடையத் தொடங்கிவிடுகிறோம்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் உள்ள ஏற்ற, இறக்கத்தை ஒருவர் நண்பனாக்கிக் கொண்டால் எளிதில் லாபமீட்ட முடியும். எந்த முதலீட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் ரிஸ்க் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். மேலும், அந்த ரிஸ்க்கை எப்படிக் குறைப்பது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்பட்டால் ஈக்விட்டி முதலீட்டில் லாபம் ஈட்டுவது சுலபமாகும்.

இந்தியப் பங்குச் சந்தை, 2022 ஜனவரி முதல் நடப்பு மே மாதம் வரைக்கும் பக்கவாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. இந்த நிலையில், குறுகிய கால முதலீடு அல்லது பங்கு வர்த்தகம் மூலம் லாபம் ஈட்டுவது என்பது கஷ்டமான காரியமாகும். அப்படிச் செய்பவர்களில் சுமார் 90% பேர் இழப்பில்தான் இருப்பார்கள். காரணம், சந்தை மேலே போகும், கீழே வரும். இதற்கு மாறாகவும் செயல்படும். தற்போது, இந்தியப் பங்குச் சந்தையில் நிலையற்றத்தன்மை காணப்படுகிறது.

இது போன்ற சமயங்களில் பங்குகளில் பொசிஷனை விட்டு வெளியேறும்போது இழப்பு ஏற்படக்கூடும். இதுவே குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில், உங்கள் முதலீட்டு வளர்ச்சி என்பது பணவீக்க விகிதத்தைவிட 4 - 5% அதிகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

நன்றாக வளரும் பொருளாதாரத்தில் அடிப்படையில் வலுவாக இருக்கிற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும். இதே போன்றதுதான் நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளின் முதலீடும். ஆனால், அதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முதலீட்டை ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும்.

எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடர்வதுடன், இடையில் இந்த எஸ்.ஐ.பி முதலீட்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. மேலும், பங்குச் சந்தை நன்றாக இறங்கியிருக்கும் காலத்தில் நிறுவனப் பங்குகளிலும் ஈக்விட்டி ஃபண்டுகளிலும் கூடுதலாக முதலீடு செய்ய மறக்கக் கூடாது.

பிசினஸோ, இன்வெஸ்ட் மென்ட்டோ எந்த இடத்தில் ரிஸ்க் இருக்கிறதோ, அந்த இடத் தில்தான் ரிவார்டு அதிகம் இருக்கும்.

நீங்கள் எடுக்கும் ரிஸ்க் ‘கால்குலேட்டட் ரிஸ்க்’காக அதாவது, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் போக மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். அதிலும் எந்த அளவு நஷ்டத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை நன்கு யோசித்து அறிந்து, முதலீடு செய்ய வேண்டும்.

முகமதிப்புக்கு கீழ் ரூ.2, ரூ.3 என்கிற விலைகளில் வர்த்தக மாகும் பங்குகளில் பணம் போடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ரூ.2 விலையுள்ள பங்கு ரூ.3 ஆக உயர்ந்தால், 50% லாபம் என நினைக்கக் கூடாது. பல சமயங்களில் ரூ.2 விலையுள்ள பங்கு ரூ.1 ஆகவே வாய்ப்புகள் அதிகம்.

பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்வதாக இருந்தாலும், நிறுவனங்களின் அடிப்படைகள், விற்பனை, வருமானம், லாபம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து முதலீடு செய்வதுதான் சரி. அப்படி முதலீடு செய்யும் போது ரிஸ்க் என்பது அளவுடன், கணக்கிடப்பட்டதாக இருக்கிறது.

பங்கு முதலீட்டில் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தால், நீண்ட காலத்தில் சராசரியாகக் குறைந்தபட்சம் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட முடியும்.

இதே போல், வணிகம் மற்றும் தொழிலில் இவ்வளவு ரிஸ்க் எடுத்தால், இவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட முடியும். சூதாட்டம் என்பது வேறு, கால்குலேட்டட் ரிஸ்க் என்பது வேறு என்பதை சரியாகப் புரிந்துகொண்டால், முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

3. மற்றவர்களைக் கவர ஆடம்பர செலவைத் தவிர்ப்பது அவசியம்...

இன்றைக்குப் பலரும் உண்மையில் கோடீஸ்வரர் ஆகாமல் இருக்கக் காரணம், மற்றவர்கள் தங்களைப் பணக்காரர்கள் என நினைக்க வேண்டும் என்பதற்காக ஆடம்பரச் செலவுகளைச் செய்வதால்தான்!

மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும்; ஆச்சர்யப் பட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சத்தில் ஐபோன் வாங்குபவர்கள் எல்லாம் நம்மிடையே இருக்கிறார்கள். இவ்வளவு விலையுள்ள பொருளை சொந்தக் காசில் வாங்கினாலும் பரவாயில்லை; 18 - 24% வட்டியுள்ள கடனை வாங்கி, அதன்மூலம் வாங்குவார்கள்.

ஒரு லட்சத்துக்கு பொருள் வாங்கப்போகிறீர்கள் எனில், இரண்டு லட்சம் ரூபாய் சேமித்துக்கொள்ளுங்கள். ஒரு லட்சத்துக்கு ஆடம்பரப் பொருள் வாங்குகள். மீதி ரூ. 1 லட்சத்தை நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளில் ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யுங்கள். ஒரு பக்கம் உங்களின் ஆடம்பரப் பொருள் தேய்மானம் காரணமாக மதிப்பு குறைந்துவரும் நிலையில், உங்களின் முதலீட்டின் மூலமான மதிப்புக் கூடிக் கொண்டே வரும்.

நீங்கள் இப்படிச் செய்துவரும் வேளையில், உங்களின் தற்போதைய வாழ்க்கையை அனுபவிக்கும் அதே நேரத்தில் எதிர்காலத் தேவைகளுக்கும் பணம் சேர்ப்பீர்கள். இந்த விதிமுறையைப் பின்பற்றினால் வாழ்க்கையை ரசிக்க முடியும். கூடவே எதிர்காலத்தை யும் பாதுகாக்க முடியும்.

நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த கார் வாங்கி இருக்கிறார்கள். இந்தப் பொருள் வாங்கியிருக்கிறார்கள் என அவர் களிடம் பந்தா காட்டபோய், பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். எந்தப் பொருளாக இருந்தாலும் தேவை என்றால் மட்டுமே வாங்குங்கள்.

முதலீட்டு வெற்றி, தோல்விக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்வது, முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது, மற்றவர் களைக் கவர ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல் ஆகிய மூன்று தங்க விதிமுறை களைப் பின்பற்றினால் ஒருவர் விரைவாக நிச்சயம் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதில் சந்தேகம் இல்லை!

(கோடீஸ்வரர் ஆவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism