Published:Updated:

நிதிச் சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்?

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 26

நிதிச் சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்?

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 26

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

நிறைய முதலீட்டாளர்கள் என் மாதச் சம்பளம் 25,000 ரூபாய்தான், என் மாதச் சம்பாத்தியம் 40,000 ரூபாய்தான், நான் எப்படி ஒரு மில்லியனர் ஆவது எனக் கேட்கிறார்கள். மில்லியன் டாலர் எனில், சுமார் ரூ.7.5 கோடியாகும். இந்தியாவில் எத்தனை பேரிடம் ரூ.7.5 லட்சம் கோடி இருக்கிறது எனில், சுமார் 0.03% பேரிடம்தான் இருக்கிறது.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

இந்தியாவைப் பொறுத்தவரை, வேலை பார்ப்பவர்கள் மற்றும் வணிகம், தொழில் செய்பவர்களின் சராசரி மாத வருமானம் ரூ.25,000-ஆகத்தான் இருக்கிறது. இதுவே பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் எனில், மாத சராசரி வருமானம் ரூ.40,000 முதல் ரூ.50,000-ஆக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் நடுத்தர வருமானப் பிரிவினரின் நிலையாக இருக்கிறது. இந்த நிலையில், மில்லியன் டாலர் என்னும் இலக்கை எப்படி அடைவது எனப் பார்ப்போம்.

ஒருவரின் வாழ்க்கையில் நேர சுதந்திரம் மற்றும் நிதிச் சுதந்திரம் என்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் இந்த இரண்டு விஷயங்களை உள்ளடக்கித்தான் செய்கிறார்.

ஓய்வுக்காலத்தில் உங்களுக்குத் தேவையான விஷயங்களை நினைத்த நேரத்தில் செய்வது நேரச் சுதந்திரம் ஆகும். அதேபோல், செலவு களை யாருடைய கையையும் எதிர்பார்க்கா மலும் எந்த ஓர் உழைப்பையும் போடாமலும் செய்யும் நிலை இருந்தால், அதை நிதிச் சுதந்திரம் என்று சொல்லலாம்.

நிதிச் சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்?

நம்மிடம் போதிய அளவுக்கு ஏன், மிக அதிக அளவுக்கு செல்வம் இருந்தாலும் அதை செலவு செய்து மகிழ போதிய நேரம் இருப்பது அவசியமாகும். சிலர் காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பார்கள். மளிகைக் கடைக்காரர்கள், தேநீர் கடைக்காரர்கள், மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் காலை சுமார் 7 மணி முதல் இரவு 9 - 10 மணி வரை கடையைத் திறந்து வைத்து வேலை பார்த்துக்கொண்டிருக் கிறார்கள். இவர்கள் பண்டிகை தினங்களில் கூட விடுமுறை விடமாட்டார்கள். உண்மை யைச் சொல்லப்போனால் அன்றைய தினங் களில்தான், கூடுதலாக வேலை பார்ப்பார்கள்.

தொழில் செய்பவர்களாகட்டும், மாதச் சம்பளம் வாங்குபவர்களாகட்டும், சுமார் 80 சதவிகித பேர் நேரச் சுதந்திரம் இல்லாமலும் நிதிச் சுதந்திரமும் இல்லாமலும்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கார்ப்ப ரேட் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு லட்சக்கணக்கில் கை நிறைய சம்பளம் கிடைக்கும். அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிந்தாக வேண்டும். ஆனால், அனைவருக்கும் 24 மணி நேரம் தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

நீங்கள் ஒரு காகிதம் மற்றும் பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். மனதில் நினைப்பதைவிட ஒரு காகிதத்தில் எழுதுவது அதிக பலனைத் தருவதாக இருக்கும். மேலும், இன்னும் தெளிவு கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள் என்பதைக் காகிதத்தில் தெளிவாக எழுத வேண்டும்.

24 மணி நேரத்தை மூன்று 8 மணி நேரமாகப் பிரித்துக்கொள் ளுங்கள். முதல் எட்டு மணி நேரத் தில் ஓய்வு, புத்துணர்வுக்கான செயல்கள், முக்கியமான செயல் களான சாப்பிடுதல், தூங்குதல் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த எட்டு மணி நேரம் வேலை, தொழில்- வணிகம் செய்வதற்கானது. மீதி எட்டு மணி நேரத்தை நீங்கள் எப்படி செலவிடுகிறீர்கள் என யோசித்துப் பாருங்கள்.

பயணம் செய்வது, பிடித்த பொழுது போக்குகள், விளையாட்டுகள், நண்பர்களுடன் அரட்டை அடித்தல், தொலைக் காட்சி பார்த்தல், பாடல்கள் கேட்டல், யூடியூப் வீடியோக்கள் பார்த்தல் போன்றவற்றைக் கடைசி எட்டு மணி நேரத்தில் மேற்கொண்டு வரலாம்.

ஒருவரின் சம்பளம் ஆண்டுக்கு ஆண்டு 10 - 12%தான் அதிகரித்து வருகிறது எனில், அவர் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒரே போன்ற வேலையைச் செய்துகொண்டிருக்கும் போது, இப்படித்தான் சம்பள அதிகரிப்பு இருக்கும்.

மேலும், எந்த ஒரு நபரும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை பார்த்து மில்லியன் டாலர் தொகை சேர்த்ததாக சரித்திரம் இல்லை. நீங்கள் வழக்கமான எட்டு மணி நேர வேலையைப் பார்த்துக்கொண்டு கூடவே, கடைசி எட்டு மணி நேரத்திலிருந்து சில மணி நேரங்களை எடுத்துக்கொண்டு உங்களின் திறமையை மேம்படுத்த முடியுமா எனப் பாருங்கள்.

இன்றைய காலகட்டத்தில் திறமையை மேலும் மேலும் வளர்த்துக்கொள்வது மிக முக்கியம். இது ஒருவர் தொடர்ந்து வேலையைத் தக்கவைக்க உதவி செய்வதுடன், அலுவலகத்தில் கூடுதல் சம்பளம் மற்றும் பதவி உயர்வு பெற உதவும். இவை தவிர, தனியே பகுதி நேரமாகக் கூடுதல் வருமானம் ஈட்டவும் வழிவகுக்கும்.

எம்.பி.பி.எஸ் டாக்டரைப் பார்த்திருப்பீர்கள் அவர்கள் வெறும் டாக்டர் மட்டும் பெற்றிருக்க மாட்டார்கள். கூடுதலாக எம்.எஸ் மற்றும் பல படிப்புகளைப் படித்திருப் பார்கள். அவர்கள் குறைந்த பட்சம் 3 - 4 பிரிவுகளில் சிறப்பு தகுதி பெற்றிருப்பார்கள்.

சமூகத்தில் மரியாதைக்குரிய ஒரு தொழில் மற்றும் அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக மருத்துவம் இருந்தாலும், மருத்து வர்கள் தங்களின் திறமைளை மேம்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் தொழில் அல்லது வேலை சார்ந்து கூடுதல் திறமை களை மேம்படுத்தி இருக்கிறீர்களா?

எங்களைப் போன்ற நிதி ஆலோசகர்கள்கூட சான்றி தழுக்கு மேல் சான்றிதழ் படிப்பு களாகப் படித்துக்கொண்டிருக் கிறோம். உயில் மற்றும் எஸ்டேட் பிளான் கோர்ஸ் படித்திருப்பவர் களால் தங்களின் முதலீட்டாளர் மற்றும் அவரின் குடும்பத்தினர் சொத்துக்காக பிரச்னை செய் யாமல் இருக்கும்படி சிறப்பாக உயில் எழுதிக்கொடுக்க முடியும். இதைத் தனியாகச் செய்யும் போது, இதற்கென தனியே கட்டணமும் வசூலிக்க முடியும்.

நிதிச் சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் அவர் சார்ந்த துறையில் முதல் 5 சதவிகித் திற்குள் இருக்கும்பட்சத்தில் மிக அதிகமாகச் சம்பாதிக்க முடியும். ஒரு துறையை எடுத்துக் கொண்டால், கடைசி 5 சதவிகித்துக்குள் இருப்பவர்கள் பெரிதாக பணம் எதுவும் சம்பாதிக்க மாட்டார்கள். முதல் 50 சதவிகிதத்துக்குள் இருப்பவர்களால் நன்றாகச் சம்பாதிக்க முடியும்.

ஒருவர் ஒரு தொழில் அல்லது துறையில் அல்லது வேலையில் பத்தாண்டுகள் இருந்தால், அவர் தொழில் முறை வல்லுநர் (Professional) ஆவார். இது மட்டுமே போதாது. இதையும் தாண்டி நிபுணர் (Expert) என்கிற தகுதி வேண்டும், நிபுணருக்கு அடுத்து அங்கீகாரம் பெற்ற நபர் (Authority) என்கிற தகுதி இருக்கிறது. அதாவது, உங்கள் துறையில் நீங்கள் சொல்வதுதான் வேத வாக்கு என்பதாக இருப்பதாகும்.

இதற்கு அடுத்த நிலை, பிரபலம் (Celebrity) ஆகும். உங்கள் பெயரைச் சொன்னாலே அனைவருக்கும் உங்களைத் தெரியும் என்கிற நிலையாகும். உங்களுக்கு எங்கும் எந்த ஓர் அறிமுகமும் தேவை இருக்காது. அடுத்த இறுதி நிலை, சின்னம் (Icon) ஆகும். குறிப்பிட்டத் துறையையும் உங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு தனித்துவமாக இருப்பதாகும்.

இந்த ஐந்து நிலைகளில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்களின் வருமானம் ஈட்டும் திறன் இருக்கிறது. மேலும், நிதிச் சுதந்திரத்தை அடையும் நிலையும் இருக்கிறது.

நிதிச் சுதந்திரம் அடைய அடுத்து ஒருவர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதாகும். உங்களுக்கு ஏற்கெனவே வந்து கொண்டிருக்கும் வருமானம் / சம்பாத்தியம் மற்றும் புதிதாக வர ஆரம்பித்திருக்கும் பணத்தைப் புத்திசாலித் தனமாக முதலீடு செய்வது கட்டாயமாகும். அப்போது தான் விரைவில் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும்.

சராசரி பணவீக்க விகிதத்தைப்போல் இரு மடங்கு வருமானம் வருவது போன்ற நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது மிக முக்கியமாகும். உதாரணத்துக்கு சராசரி பணவீக்க விகிதம் 6 - 7% எனில், உங்களின் முதலீடு மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரி யாகக் குறைந்தது 12% - 14% வருமானம் கிடைக்க வேண்டும்.

இப்போது எங்கே எல்லாம் முதலீடு செய்திருக் கிறீர்கள் என்பதைப் பட்டியல் போடுங்கள். இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு எனப் பாருங்கள். பணவீக்கத்தைப் போல, இரு மடங்கு வருமானம் இல்லை எனில், அந்த முதலீட்டை மாற்றி செய்ய வேண்டும். பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் மற்றும் குறை வான வரிகட்டும் முதலீடுகளாக பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) உள்ளன.

நம்மில் பலருக்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவரம் எல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் நிதிச் சுதந்திரம் அடைந்திருக்க மாட்டார்கள். காரணம், அவர்கள் புத்திசாலித்தனமாக முதலீடு எதையும் செய்திருக்க மாட்டார்கள்.

நிதிச் சுதந்திரம் அடைய வேண்டும் எனில், சரியான முதலீட்டை ஆரம்பிப்பதுதான் முதல் செயலாகும். நீங்களும் நிதிச் சுதந்திரம் பெற இன்றே உங்கள் முதலீட்டைத் தொடங்குங்கள்..!

(நிறைவு பெற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism