Published:Updated:

விரைவாக கோடீஸ்வரர் ஆக என்ன வழி?

மாடல்: ஆர்.வில்சன் குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடல்: ஆர்.வில்சன் குமார்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 4

நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா. . . அதையும் எவ்வளவு சீக்கிரமாகச் சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்க விரும்புகிறீர் களா..? இந்த இரு கேள்விகளுக்கும் நீங்கள் ‘ஆம்’ என்று பதில் சொன்னால், உங்களுக்கான அடுத்த கேள்வி இதோ... நீங்கள் எப்படி கோடீஸ்வரர் ஆகப்போகிறீர்கள்..?

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதிக்கப் போவதாக நினைத்தால், நீங்கள் உங்களின் 50-வது வயதில் கோடீஸ்வரர் ஆகலாம். இது செல்வம் பெருகுவதற்கான பாரம்பர்யமான வழி. ஆனால், இந்தப் பாரம்பர்யமான வழியை இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்பு வதில்லை. வாழ்க்கையில் எவ்வளவு சீக்கிரமாக கோடீஸ்வரராக முடியுமோ, அவ்வளவு சீக்கிர மாக ஆகிவிட வேண்டும் என்றே நினைக் கிறார்கள். உண்மை என்னவெனில், உங்கள் சொந்த வியாபாரம் அல்லது தொழில் மூலம் விரைவாகச் செல்வத்தை உருவாக்க மிகச் சிறந்த நேரம் இது. இன்று, மின்னல் வேகத்தில் நிறைய சம்பாதிக்க வாய்ப்புள்ள நல்ல தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. உலகம் வேகமாக மாறிவருகின்றன. அதற்கேற்ப, பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகள் விரை வாக மாறிவருகின்றன. ஒவ்வொரு முறையும் தொழில்நுட்பமும் பொருளாதாரமும் மாறும் போது புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகி, பலரும் பணக்காரர் ஆகிறார்கள். இந்த மாற்றங்கள் இன்றைக்கு நிமிடத்துக்கு நிமிடம் நிகழ்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அன்றாடம் பலர் கோடீஸ்வரர்களாக மாறுகின்றனர். இந்த சூழ்நிலையில், உங்க ளாலும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆக முடியும்!

என் தந்தை உட்பட முந்தைய தலைமுறை யினர் சுமார் 30 அல்லது 40 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வாழ்நாள் முழுக்க பணியாற்றிய வர்கள்தான். ஆனால், வேலை, தொழில் மற்றும் வணிகம் ஆகியவை சமீப காலங்களில் நிறைய மாறிவிட்டன. எனது எம்.பி.ஏ நிகழ்ச்சிக்காக நான் தயாரானபோது, திட்டம் அல்லது பொருள்களின் சுழற்சி (Product Cycle) எனக்கு ஒரு முக்கிய விஷயத்தைக் கற்றுக் கொடுத்தது. அதாவது, தொடக்கம் - வளர்ச்சி- முதிர்வு - செறிவு மற்றும் சரிவு (Start – Growth– Mature – Saturation and Decline) என்பதாக ஒரு பொருள்/திட்டத்தின் சுழற்சி இருக்கிறது.பொதுவாக, பொருள்களின் சுழற்சி மற்றும் வணிக சுழற்சி நீண்டது. ஆனால், இன்று வணிகமானது சுமார் ஐந்தாண்டுகளுக்குள் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் மாறி விடுகிறது.

மாடல்: ஆர்.வில்சன் குமார்
மாடல்: ஆர்.வில்சன் குமார்

யூனிகார்ன் நிறுவனங்கள்...

பெரும்பாலான பிசினஸ் யூனிகார்ன் (யூனி கார்ன் என்பது ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி) ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆகும். இந்த யூனிகார்ன் நிறுவனங்கள் ஐந்து வருடங்களுக்குள் பெரிதாக, பிரமாண்டமாக வளர்ச்சி கண்டவை ஆகும். அக்கோ இன்ஷூரன்ஸ் (Acko Insurance), க்ரெட் (Cred), குரோ ஆப் (Groww App), குப்ஷுப் (Gupshup) மற்றும் டிஜிட் இன்ஷூரன்ஸ் (Digit Insurance) ஆகிய நிறுவனங்கள் 2016–ம் ஆண்டில் நிறுவப்பட்டன. இவை ஐந்து ஆண்டுகளுக்குள் பில்லியன் டாலர் மதிப்பைப் பெறும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டன. இதுபோல், இன்னும் பல நிறுவனங் கள் உதாரணங்களாக உள்ளன.

டிஜிட்டல் யுகம்...

பணக்காரர்கள் மட்டுமே கோடீஸ்வரர்கள் ஆக முடியும் என்பது பழங்காலத்து புரிந்துகொள்ளல். இப்போதைய டிஜிட்டல் யுகத்தில் உலகம் முழுக்க அனைவருக்கும் சம வாய்ப்பு உருவாயிருக்கிறது. இதனால், யார் வேண்டு மானலும் கோடிகளில் வருமானம் ஈட்ட முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. உலக அளவில் மிகச் சிறந்த புத்தக விற்பனையாளர்களின் பட்டியலைப் (Best Seller List) பாருங்கள். ஒரு புதிய நிறுவனம் ஒரு வருடத்துக்குள்கூட மிகச் சிறந்த புத்தக விற்பனை நிறுவனமாக மாற முடியும். உங்கள் நம்பிக்கைகள்தான், உங்கள் செயல்களைத் தீர்மானிக்கின்றன என்பதை நீங்கள் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இனியாவது அதைப் புரிந்துகொள்வது அவசியம்.

இரண்டு விஷயங்கள்...

கோடீஸ்வரர்களுக்கான மனநிலையைப் பெற, பின்வரும் இரண்டு விஷயங்களை நீங்கள் கட்டாயம் நம்ப வேண்டும்.

1. நீங்கள் விரைவில் பணக்காரர் ஆகலாம்.

2. நீங்கள் விரைவில் பணக் காரர் ஆவது உங்களுக்கு நிச்சயம் சாத்தியம்.

உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் அல்லது செஸ் வீரராக நீங்கள் மாற விரும்பினால், என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தினமும் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல, உலகின் பிரபல பிசினஸ்மேன் ஆவதற்கு, நீங்கள் வணிக விளை யாட்டைக் கற்றுக்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். பெரும்பாலான பிசினஸ் மேன்கள் வெற்றி பெறாததற்குக் காரணம், அவர்கள் அவர் களுடைய நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்காததே. நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கவில்லை அல்லது நல்ல நிதிநிலை முடிவு களைத் தரவில்லை எனில், வணிகத்தில் வெற்றி கிடைக்காது.

பலருக்கு நல்ல யோசனைகள், படைப்பாற்றல், நல்ல திட்டங்கள் / பொருள்கள் அல்லது சேவைகளைத் தரும் நிலை இருக்கலாம். ஆனால், இன்றைய சந்தையில் அவை மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படவில்லை. அல்லது அவை போதுமான அளவுக்கு மதிப்பை வழங்காமல் இருக்கலாம்.

தொழிலில் ஒரு பழமொழி உண்டு. “நன்றாக செய் அல்லது செய்யவே வேண்டாம். அதைச் சிறந்ததாக ஆக்குங்கள் அல்லது உருவாக்கவே வேண்டாம். (Do it well or don’t do it at all. Make it great or don’t make it at all). நீங்கள் அதிகம் வருமானம் ஈட்ட, சம்பாதிக்க விரும்பினால், சிறந்ததை வழங்க வேண்டும். இதைப் பின்பற்றினால் நீங்கள் விரைவாக கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

கூர்மையான இருமுனை வாள்!

தொழில்முனைவு என்பது கூர்மையான இருமுனைகள் கொண்ட வாள் போன்றதாகும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 80% நிறுவனங்கள், ஆரம்பித்து மூன்று ஆண்டுகளில் தோல்வி அடைகின்றன. தொழிலில் வெற்றி பெற, ஒரு போதும் பணத்தைத் துரத்த வேண்டாம். பணம் என்பது வணிகத்தின் துணைப் பொருள் ஆகும். பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். அது உங்களை நிச்சயம் கோடீஸ்வரர் ஆக்கும்.