Published:Updated:

செல்வத்தை வேகமாகச் சேர்ப்பது எப்படி?

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 8

உலகில் வெறும் 4 சதவிகித பணக்காரர்கள் மட்டும் வெற்றிகரமாக சிரமமின்றி பணத்தை, செல்வத்தை ஈர்க்கிறார்கள். மற்றவர்களால் அப்படி ஏன் செய்ய முடிய வில்லை? பணக்காரர்கள் எப்போதும் தொட்ட தெல்லாம் பொன்னாகும் மைதாஸ் (Midas) ஆக இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் எந்த ஒரு செயலையும் செய்து பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அவர்களின் பணத்தை ஈர்க்கும் ரகசியம் என்ன?

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

கற்றுக்கொள்வது முக்கியம்...

சிட்டி பேங்கில் பணிபுரிந்த நாள்களில் நீண்ட காலமாக நிதி ரீதியாகச் சுதந்திரமாக இருந்த பலரின் அனுபவத்தைப் பெற்றிருக் கிறேன். மற்றும் எனது கடந்த 20 வருட செல்வம் பற்றிய ஆய்வின் பலனாக இந்த அத்தியாயத்தை என்னால் சிறப்பாக எழுத முடிகிறது. செல்வத்தை ஈர்ப்பது மற்றும் செழிப்பை உருவாக்குவது பற்றி நான் கற்றுக் கொண்டது, செல்வத்தைப் பற்றிய மதிப்பு மிக்க ஆராய்ச்சி அறிக்கைகளைப் படித்தது மட்டுமல்ல, கூடவே பண ஈர்ப்பு மற்றும் செல்வத்தை உருவாக்கும் கருத்துகள் நேர்மறை பண உளவியல் மற்றும் பண மனப்பான்மை யிலிருந்து (Positive Money Psychology and Money Mindset) கற்றுக்கொண்டவையாகும்.

பணத்தை அறிந்துகொள்ளுங்கள்...

பணம் சேர்வதற்கான, கோடீஸ்வரர் ஆவதற்கான நம்பர் 1 ரகசியம், உங்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளின் முழு விவரப் பட்டியலும் உங்களிடம் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.

உதாரணமாக, வங்கிக் கணக்கு, தங்கம், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள் போன்ற நிதிச் சொத்துகள் மற்றும் உங்கள் ரியல் எஸ்டேட் சொத்து விவரங்கள் போன்றவற்றைக் கணக்கிடுங்கள். உங்கள் நிகர மதிப்பு (Net worth), உங்கள் சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகள் (Assets and Liabilities) பற்றி முழுமையாக அறிந்திருப்பது அவசியமாகும்.

உங்களிடம் இருக்கும் சொத்து விவரங்களை அறிந்து, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது அவசியமாகும். அது சிறிய அளவிலான பணமாக இருந்தாலும், பணத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடையுங்கள். நீங்கள் மேலும் அதிகமாகப் பெறுவீர்கள். உங்களிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்தி கவலைகொண்டால், உங்களுக்கு எதுவும் ஒருபோதும் போதுமானதாக இருக்காது.

தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி யாக இருப்பவர்கள், குறைந்த மனச்சோர்வு, குறைந்த மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக கட்டுப்பாட்டை உணர்கிறார்கள். மேலும், அதிக சுயமரியாதையுடன் இருக்கிறார்கள்.

முக்கியமாக, தங்கள் வாழ்க்கையின் கடின மான சூழ்நிலைகளைச் சிறப்பாகச் சமாளிக்கும் தனித் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.நன்றியுணர்வு (Gratitude) குறித்த பயிற்சி உங்கள் நிதிச் செல்வத்தை அதிகரிக்க உதவுவதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல முடிவுகளுக்கான கதவுகளைத் திறக்க உதவும். உங்களிடம் இருப்பதை ஒப்புக்கொள்வது வாழ்க்கையை உண்மையிலேயே வளமாக்கு கிறது; மேலும், செல்வத்தைப் பெற உதவுகிறது.

செல்வத்தை வேகமாகச் சேர்ப்பது எப்படி?

பணத்துடனான உங்கள் உறவு என்ன?

இன்று நம்மில் பெரும்பாலோரின் மிகப் பெரிய பிரச்னை, பணத்தைக் கண்டு மிகவும் பயப்படுவதாகும். சிறுவயதிலிருந்தே பல பணச் சிக்கல்களை (கொடுத்த கடன் வராதது, ஜாமீன் கொடுத்து மாட்டியது), பண அதிர்ச்சிகளை, பண மோசடிகளை அனுபவித்திருக்கிறோம். கடந்த காலத்தில் பணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தும் பல சங்கடமான சூழ்நிலைகளை நாம் சந்தித்திருக்கலாம். சம்பாதிக்கும் குடும்பத் தலைவர் / தலைவிகளின் மன அழுத்தத்துக்கு பணம் முக்கிய காரணம் என்று பல புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சிறு வயதிலிருந்தே பணத்தைப் பற்றிய வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகளை நாம் வைத்திருக்கிறோம். அவற்றில் மிக முக்கியமானவற்றைப் பட்டியலிட்டிருக்கிறேன்.

1. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மேலும் ஏழையாகிறான்

2. பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்க வேண்டும்

3. பணமே எல்லாத் தீமைகளுக்கும் முக்கியமான காரணம்

4. அதிக பணம் வைத்திருப்பது சுயநலம்.

துரதிர்ஷ்டவசமாக, பணம் குறித்த பல நம்பிக்கைகள் ஆழ்மனதில் (subconsciously) செயல்படுகின்றன. நாம் அவற்றை ஏற்றுக் கொண்டவுடன், அது நமது யதார்த்தமாக மாறும். மேலும், நமது வாழ்க்கை நமது நம்பிக்கை அமைப்புடன் இணங்கிப் போகிறது. ஆகவே, பணத்தைப் பற்றிய இந்த வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகள் எப்போதும் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். செல்வம் சேர்க்க, கோடீஸ்வரர் ஆக பணம் குறித்த எதிர்மறை நம்பிக்கைகளை மாற்றுவது முதல் படியாகும்.

பணமும் உணர்வுகளும்...

நிலையான செல்வத்தை உருவாக்கும் உங்கள் திறன் பெரும்பாலும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் உள்ளது.

1. முதலீட்டில் வருமானக் குறைவு. இந்த நிலையை எவ்வாறு கையாள்வது?

2. முதலீட்டு மதிப்பின் ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

3. முதலீட்டின் ஏற்றத்தாழ்வுகளைக் கையாள நீங்கள் உணர்ச்சி ரீதியாக வலுவாக இருக்கிறீர்களா?

ஒவ்வோர் உண்மையான முதலீட்டாளரும், பங்குச் சந்தையில் குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் என்பது முதலீட் டாளர்களின் உணர்வுகளால் (Sentiment) நிகழ்கின்றன என்பதை அறிவார்கள். பங்குச் சந்தையின் ஏற்றம் மற்றும் சரிவுகள் முக்கியமாக இரண்டு உணர்ச்சிக் காரணிகளால் ஏற்படுகின்றன. அவை பயம் மற்றும் பேராசை ஆகும்.

வெற்றிகரமான முதலீட் டாளர்கள், நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும்போது, தங்களைச் சுற்றியுள்ள அனைவரும் பீதியடைந்து விற்றுவிட்டு வெளியேறும்போது, அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கும் திறனையும் கொண்டுள் ளனர். வெற்றிகரமான முதலீட் டாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரும் நிதானம் இழந்து வெறித்தனமாக இருக்கும்போது அமைதியாக இருக்கிறார்கள்.

வாரன் பஃபெட் “ஒரு முதலீட் டாளருக்கு மிக முக்கியமான தகுதி, மனோபாவம் ஆகும்: அறிவு அல்ல” என்று குறிப் பிட்டுள்ளது இங்கே கவனிக்கத் தக்கது. முதலீட்டு வெற்றிக்கு மிக முக்கியமான மூலப்பொருள் மனோபாவம் என்று அவர் மதிப்பிடுகிறார்.

முதலீடு செய்வது என்பது வெறும் நிதி அறிவைக் காட்டிலும் மனோபாவத்தைப் பற்றியதாகும். பங்குச் சந்தையின் குறுகிய கால ஏற்ற இறக்கங் களின்போது நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பது தான் நீண்ட காலத்தில் செல்வம் உருவாவதைத் தீர்மானிக்கிறது.

(கோடீஸ்வரர் ஆவோம்)