Published:Updated:

அக்கவுன்ட் ஸ்டேட்மென்டைக் கவனியுங்கள்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் உஷார்..!

அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்

வாசகர் அனுபவம்

அக்கவுன்ட் ஸ்டேட்மென்டைக் கவனியுங்கள்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் உஷார்..!

வாசகர் அனுபவம்

Published:Updated:
அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள அக்கவுன்ட் ஸ்டேட்மென்டை அவசியம் கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற மாதிரி காரைக்குடியைச் சேர்ந்த முதலீட்டாளர் எம்.எஸ்.லெட்சுமணனுக்கு ஒரு சம்பவம் நடந்தது. அதைப் பற்றி அவரே சொல்கிறார்...

எம்.எஸ்.லெட்சுமணன்
எம்.எஸ்.லெட்சுமணன்

‘‘கடந்த ஜூலையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்தேன். உடனடி யாக வந்த ஆகஸ்ட் மாத அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில் ‘மோட் ஆஃப் ஹோல்ட்டிங்’ என்ற இடத்தில் ‘single’ என்றும், எனது பெயர் மட்டுமே இருந்தது. ஆனால், நவம்பரில் வந்த அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில் ‘ஜாயின்ட் ஹோல்டர்’ என ஒருவரின் பெயர் இணைக்கப் பட்டிருந்தது. மேலும், ‘மோட் ஆஃப் ஹோல்டிங்’ என்ற இடத்தில் ‘anyone or survivor’ என்று மாற்றப்பட்டிருந்தது. அதாவது, நான் சொல் லாமலே வேறு ஒருவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த நான் உடனடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மற்றும் எம்.எஃப் யூட்டிலிட்டி நிறுவனத்துக்கு மெயில் அனுப்பினேன். ஏழு நாள்கள் கழித்து ‘மோட் ஆஃப் ஹோல்ட்டிங்’ என்கிற இடத்தில் ‘single’ என்றும், புதிதாக சேர்த்தவரின் பெயரை எடுத்து விட்டு, புதிய ஸ்டேட்மென்டையும் அனுப்பினார்கள்.

அக்கவுன்ட் ஸ்டேட்மென்டைக் கவனியுங்கள்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் உஷார்..!

சில நாள்களுக்கு முன்பு, இதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வங்கி விவரத்தை ஆன்லைன் மூலம் மாற்றக் கோரிக்கை வைத்தபோது, முடியாது என்றார்கள். ஆவணங்களை அனுப்பினால்தான் மாற்ற முடியும் என்றார்கள். ஆவணங்களைத் தபால் வழியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு அளிக்கும் ஆர்.டி.ஏ நிறுவனத்துக்கு அனுப்பி, அதன்மூலம் வங்கி விவரத்தை மாற்றினேன். வங்கியை மாற்றும்போது எனக்கு மெசேஜ் வந்தது. ஆனால், ‘ஜாயின்ட் ஹோல்ட’ராக வேறு ஒருவரைச் சேர்த்தபோது எனக்கு மெசேஜ் வராதது ஏன்?

இது குறித்து பல மெயில்கள் அனுப்பிய பிறகு, ‘ஆர்.டி.ஏ நிறுவனத் தில் தவறு நடந்திருக்கிறது. அதைச் சரிசெய்துவிட்டோம்’ என்று பதில் வந்தது. ஆனால், இந்தத் தவறு எப்படி நடந்தது என்கிற விளக்கம் தரப்படவில்லை. எனவே, முதலீட்டாளர்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது விவரங்கள் அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லை எனில், பிற்பாடு பெரிய சிக்கல் வரலாம். இதன் மூலம் நம் பணத்தை நமக்குத் தெரியாமலே எடுக்கவும் வாய்ப்புண்டு’’ என எச்சரிக்கை செய்து முடித்தார்.

பா.பத்மநாபன்
பா.பத்மநாபன்

நிதி ஆலோசகர் என்ன சொல்கிறார்?

“மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் செய்த முதலீட்டில் இன்னொருவரின் பெயரை சேர்க்கவோ, மாற்றவோ முடியாது. இப்படித் திடீரென வேறு ஒருவரின் பெயர் முதலீட்டுக் கணக்கில் சேர்க்கப்படுவது ஆபத்தானது. இது முதலீட்டாளருக்கு மட்டுமல்ல, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும் சிக்கல்தான். ஆர்.டி.ஏ நிறுவனங்களில் முதலீட்டாளரின் கணக்கில் ஒரு பணியாளர் செய்யும் திருத்தங்கள் சரியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிஸ்டம் மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகள் தொடராமல் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் நடந்தாலும், முதலீட்டாளரின் பணத்தை யாரும் எடுத்துச் சென்று விட முடியாது’’ என்றார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism