Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்.... உங்கள் எஸ்.ஐ.பி கணக்கின் வயது என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்.... உங்கள் எஸ்.ஐ.பி கணக்கின் வயது என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முதலீட்டு முறை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி ஆகும். கடந்த ஓராண்டில் எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 3.72 கோடியிலிருந்து 5.28 கோடியாக அதிகரித்துள்ளது. முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் மட்டும் 1.56 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹசன் அலி 
நிறுவனர் 
Siptiger.com
ஹசன் அலி நிறுவனர் Siptiger.com

ரூ.5.76 லட்சம் கோடி...

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ.37.57 லட்சம் கோடியாக உள்ளது. இதில் எஸ்.ஐ.பி முறை யில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு சுமார் 15% அதாவது, ரூ.5.76 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தத் தொகையில் ஈக்விட்டி ஃபண்டுகளின் பங்களிப்பு 85%, கடன் ஃபண்டுகளில் பங்களிப்பு 3%, ஹைபிரிட் ஃபண்டுகளின் பங்களிப்பு 6 சதவிகிதமாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது, முதலீட்டாளர் கள் சந்தை இறக்கத்தில் குறை வான என்.ஏ.வி மதிப்பில் முதலீடு செய்து, பின்னர் நல்ல லாபம் பார்க்கும் நோக்கத்துடன், ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாக முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்.... உங்கள் எஸ்.ஐ.பி கணக்கின் வயது என்ன?

ஆனால், மொத்தம் நிர்வகிக்கும் எஸ்.ஐ.பி தொகையில் 21% கணக்கு கள்தான் ஐந்து ஆண்டுகளைக் கடந்ததாக இருக்கிறது. எஸ்.ஐ.பி முறையில் ரூ.5.76 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.1.19 லட்சம் கோடி முதலீடு ஐந்து ஆண்டுகளைக் கடந்ததாக உள்ளது.

எஸ்.ஐ.பி கணக்குகளின்படி, பார்த்தால், இது வெறும் 8 சதவிகித மாகத்தான் உள்ளது. அதாவது, மொத்த எஸ்.ஐ.பி கணக்குகளான 5.28 கோடியில் 8% அதாவது, 43.33 லட்சம் கணக்குகள்தான் ஐந்து ஆண்டுகளைக் கடந்ததாக இருக் கிறது. எஸ்.ஐ.பி கணக்குகளில் சுமார் 45% அதாவது, 2.32 கோடி கணக்குகள் கடந்த ஓராண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட்.... உங்கள் எஸ்.ஐ.பி கணக்கின் வயது என்ன?

ரெகுலர் Vs டைரக்ட்

மொத்தமுள்ள எஸ்.ஐ.பி கணக்கான 5.28 கோடியில் 69% அதாவது, 3.66 கோடி கணக்குகள் ரெகுலர் பிளான்கள் (மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டவை) மூலம் முதலீடு செய்யப்பட்டவையாகும்.

மீதியுள்ள 31% அதாவது, 1.62 கோடி கணக்கு முதலீட் டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய டைரக்ட் பிளான்கள் மூலமானவையாகும். இதைத் தொகையில் குறிப்பிட வேண்டுமெனில், ரெகுலர் பிளான் மூலம் ரூ.4.87 லட்சம் கோடியும், டைரக்ட் பிளான் மூலம் ரூ.89,405 கோடியும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்.... உங்கள் எஸ்.ஐ.பி கணக்கின் வயது என்ன?
மியூச்சுவல் ஃபண்ட்.... உங்கள் எஸ்.ஐ.பி கணக்கின் வயது என்ன?

ரெகுலர் எஸ்.ஐ.பி கணக்குகளில் 8% அதாவது, 39.90 லட்சம் கணக்குகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தவையாக உள்ளன. இது டைரக்ட் பிளானில் 1% அதாவது, 3.42 லட்சமாக உள்ளது. ஓராண்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.பி கணக்குகள் ரெகுலர் பிளானில் 26% ஆகவும் டைரக்ட் பிளானில் 18% ஆகவும் உள்ளன.

வெறும் எஸ்.ஐபி கணக்குகளே ஐந்து ஆண்டுகளைக் கடந்ததாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நமது முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டின் அவசியத்தை இன்னும் உணரவில்லையோ என்கிற கேள்வி எழுகிறது. அதேபோல, டைரக்ட் பிளானில் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள், அந்த ஃபண்ட் திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்துகொண்டபின் அதில் முதலீடு செய்வது நல்லது!