பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... குடும்பத்துடன் வந்த முதலீட்டாளர்கள்..!

அழகப்பன் ராமநாதன், சுரேஷ் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
அழகப்பன் ராமநாதன், சுரேஷ் பாலாஜி

விழிப்புணர்வு

``சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்வது எப்படி?” என்ற தலைப்பில் கோவையில் நவம்பர் 5-ம் தேதி நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து முதலீட்டாளர் களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசினார் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தின் ஏரியா ஹெட் சுரேஷ் பாலாஜி.

``மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் நமது பாதுகாப்புக்காக `எமர்ஜென்சி ஃபண்ட்’ வைத்திருப்பது அவசியம். அடுத்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது நமக்குக் குறிக்கோள் (இலக்கு) கட்டாயம் வேண்டும். ரிஸ்க்குக்கு ஏற்பவே ரிட்டர்ன் கிடைக்கும். எனவே, என்ன ரிஸ்க் எடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு, முதலீடு செய்ய வேண்டும். பணம் என்பது நமக்கு வாய்த்திருக்கும் மிகச் சிறந்த அடிமை. அந்தப் பணத்தை நமக்காக சரியாக உழைக்கச் செய்ய வேண்டும்’’ என்று பேசி முடித்தார் சுரேஷ் பாலாஜி.

அழகப்பன் ராமநாதன், சுரேஷ் பாலாஜி
அழகப்பன் ராமநாதன், சுரேஷ் பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் அடுத்து பேசினார் சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரும், வரித்துறை நிபுணருமான அழகப்பன் ராம நாதன். ``பங்குச் சந்தையில் மட்டுமல்ல, மியூச்சுவல் ஃபண்டிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் கான்செப்ட் பங்குச் சந்தை மூல மாகத்தான் இயங்குகிறது.

எஸ்.ஐ.பி அல்லது மொத்தமாக (Lumpsum) என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். யார் அதிக வருடங்களுக்கு தங்கள் பணத்தை மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார்களோ, அவர்கள்தான் அதிகம் லாபம் ஈட்டுவார்கள். எனவே, மார்க்கெட்டை `டைமிங்’ செய்யாதீர்கள். எவ்வளவு சீக்கிரம் முதலீட்டுப் பயணத்தை ஆரம்பிக்க முடியுமோ, ஆரம்பியுங்கள்’’ என்றார் அழகப்பன் ராமநாதன்.

நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்கள் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் அதிக அளவில் கலந்துகொண்டது ஆச்சர்யம்!