Published:Updated:

ஆப் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீ டு செய்வது பாதுகாப்பானதா..?

 ஏ.கே.நாராயண், ஜி.வினோத் குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.கே.நாராயண், ஜி.வினோத் குமார்

முதலீடு

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘உங்கள் முதலீட்டுக் காலமும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வும்..!’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின.

இதில் முதலில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் க்ளஸ்டர் ஹெட் ஜி.வினோத் குமார், “முதலீட்டை ஆரம்பிக்கும்போது அதை எதற்காகச் செய்கிறோம் என்பதை நிர்ணயத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த முதலீட்டின் மூலம் முழுமையான பலனை அடைய முடியும். இல்லையெனில், அந்தத் தொகையை இடையில் எடுத்து தேவையில்லாமல் செலவு செய்துவிடுவோம். அடுத்து, எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்யப் போகிறோம், அந்தப் பணம் நமக்கு எத்தனை ஆண்டுகள் கழித்து தேவை என்பதைப் பொறுத்து முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பலரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்வார்கள் என்று நினைக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளன.இவற்றில் கலந்து முதலீடு செய்யும் திட்டங்களும் உள்ளன’’ என்றார்.

ஏ.கே.நாராயண், ஜி.வினோத் குமார்
ஏ.கே.நாராயண், ஜி.வினோத் குமார்

செந்தில்குமார் என்கிற முதலீட்டாளர் ஆப் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்று கேட்க, அதற்கு பதில் அளித்த மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com), ‘‘இது டிஜிட்டல் உலகம். இன்னும் 2, 3 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகி விடும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான ஆப்பை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு உதவும் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எனப் பலரும் தருகின்றனர். ஆப் மூலம் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனங் களின் நம்பகத்தன்மையைக் கவனிப்பது அவசியம். மேலும், அவை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகிக்க செபி அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க: https://bit.ly/31g8FIf